நிமித்தாநி ச பஷ்யாமி விபரீதாநி கேஷவ। ந ச ஷ்ரேயோ அநுபஷ்யாமி ஹத்வா ஸ்வஜநமாஹவே॥ 1.31 ॥ |
கிருஷ்ணா ! போரில் உறவினரை கொல்வதில் எந்த நன்மையையும் நான் காணவில்லை. வெற்றி, அரசு, சுகம் இவை எதையும் நான் விரும்பவில்லை.
ந காங்க்ஷே விஜயம் க்ருஷ்ண ந ச ராஜ்யம் ஸுகாநி ச। கிம் நோ ராஜ்யேந கோவிந்த கிம் போகைர்ஜீவிதேந வா॥ 1.32 ॥ யேஷாமர்தே காங்க்ஷிதம் நோ ராஜ்யம் போகா: ஸுகாநி ச। த இமே அவஸ்திதா யுத்தே ப்ராணாம்ஸ்த்யக்த்வா தநாநி ச॥ 1.33 ॥ ஆசார்யா: பிதர: புத்ராஸ்ததைவ ச பிதாமஹா:। மாதுலா: ஷ்வஷுரா: பௌத்ரா: ஷ்யாலா: ஸம்பந்திநஸ்ததா॥ 1.34 ॥ |
கோவிந்தா ! யாருக்காக இந்த அரசும் சுக போகம்களும், விரும்பதக்கவையோ அந்த ஆச்சாரியார்கள், தந்தையர், பிள்ளைகள், பாட்டன்மார், மாமன்மார், மாமனார்கள், பேரங்கள், மைத்துனர்கள், சம்பந்திகள் எல்லோரும் தங்கள் உயிரையும் செல்வங்களையும் துறந்துவிட துணிந்து போர்களத்தில் நிற்கிறார்கள். அரசினாலும் சுகபோகங்களினாலும் எங்களுக்கு என்ன பயன்? உயிர் வாழ்ந்து தான் என்ன லாபம் ?
ஏதாந்ந ஹந்துமிச்சாமி க்நதோ அபி மதுஸூதந। அபி த்ரைலோக்யராஜ்யஸ்ய ஹேதோ: கிம் நு மஹீக்ருதே॥ 1.35 ॥ |
கிருஷ்ணா ! நான் கொல்லபட்டலும் மூன்று உலகங்களையும் பெறுவதாக இருந்தாலும் கூட இவர்களை கொல்ல மாட்டேன். வெறும் அரசுக்காக இவர்களை கொள்வேனா ?
நிஹத்ய தார்தராஷ்ட்ராந்ந: கா ப்ரீதி: ஸ்யாஜநார்தந। பாபமேவாஷ்ரயேதஸ்மாந்ஹத்வைதாநாததாயிந:॥ 1.36 ॥ |
கிருஷ்ணா ! திருதராஷ்டிரரின் பிள்ளைகளை கொல்வதால் நமக்கு என்ன இன்பம் கிடைக்க போகிறது ? அவர்கள் பெரும் பாவிகளே ஆனாலும் அவைகளை கொல்வதால் நமக்கு பாவமே வந்து சேரும்.