Word |
English & Tamil Meaning |
|---|---|
| கடுகு 2 | kaṭuku n. <>கடு1-. 1. cf. kaṭuka. [M. kaduhu.] Indian Mustard, Brassica juncea; செடி வகை. (பதார்த்த. 1039.) 2. Mustard seed; 3. Crab's eye. See குன்றி. (மலை.) 4. Lees of oil; |
| கடுகு 3 - தல் | kaṭuku- 5 v. intr. prop. கடுகு. To diminish, grow short; குறைதல், உறை கடுகி (குறல், 564). |
| கடுகுக்கட்டி | kaṭuku-k-kaṭṭi n. <>கடுகு +. Minute pustule on the skin, as small as a mustard seed; கடுகுபோன்ற சிறுகொப்புளம். (சீவரட்.) |
| கடுகுக்களி | kaṭuku-k-kaḷi n. <>id. +. Mustard poultice; கடுகை அரைத்துச்செய்யும் கட்டு மருந்து. |
| கடுகுசாதம் | kaṭuku-cātam n. <>id. +. A special preparation of boiled rice mixed with mustard seed and ghee; ஒருவகைச் சித்திரான்னம். |
| கடுகுடு - த்தல் | kaṭukuṭu- 11. v. intr. Onom (J.) 1. To gabble, rattle in speaking, to speak rapidly and indistinctly; தெளிவின்றிப் பேசுதல். 2. To speak angrily; |
| கடுகுடுத்தான் | kaṭukuṭuttāṉ n. <>கடுகுடு-. Fidgety person; restless man; துடிதுடிப்புள்ளவன். (J.) |
| கடுகுதிரள்(ளு) - தல் | kaṭuku-tiraḷ- v. intr. <>கடுகு +. To form as a concretion when boiling oil; காய்ச்சும்போது எண்ணெய்க்கடுகு கூடுதல். (W.) |
| கடுகுநெய் | kaṭuku-ney n. <>id. +. See கடுகெண்ணெய். (பதார்த்த. 165.) . |
| கடுகுப்பற்று | kaṭuku-p-paṟṟu n. <>id. +. Mustard plaster; ஓர் மருந்துப்பூச்சு. |
| கடுகுமணி | kaṭuku-maṇi n. <>id. +. 1. White mustard. See வெண்கடுகு. . 2. A necklace of small gold beads; |
| கடுகுமாங்காய் | kaṭuku-mā-ṅ-kāy n. <>id. +. A kind of mango pickle, containing mustard in its composition; மாங்காயூறுகாய் வகை. |
| கடுகுரோகணி | kaṭukurōkaṇi n. <>kaṭu-rōhiṇī. See கடுரோகிணி. (பதார்த்த. 991.) . |
| கடுகெண்ணெய் | kaṭukeṇṇey n. <>கடுகு +. Oil of mustard seed; கடுகுநெய். |
| கடுகென | kaṭukeṉa adv. <>கடுகு1-. Swiftly, quickly; விரைவாக. |
| கடுகை | kaṭukai n. <>kaṭukā. See கடுரோகிணி. (தைலவ. தைல. 21.) . |
| கடுகோதனம் | kaṭukōtaṉam n. <>கடுகு+ōdana. See கடுகுசாதம். (பதார்த்த. 1406.) . |
| கடுகோரை | kaṭukōrai n. <>id. + ஓரை. See கடுகுசாதம். (W.) . |
| கடுங்கண் | kaṭu-ṅ-kaṇ n. <>கடு-மை +. 1. Cruelty, ferocity, savageness; தறுகண்மை. கடுங்கணுழுவை (கலித். 43). 2. See ஓலைக்கண். 2. (J.) |
| கடுங்கணாளன் | kaṭu-ṅ-kaṇ-āḷaṉ n. <>id. +. Cruel, savage, barbarous man; கொடியோன். |
| கடுங்கதிர் | kaṭu-ṅ-katir n. <>id. +. Sun; சூரியன். கடுங்கதிர் திருகியவேய் (அகநா. 17). |
| கடுங்கருத்து | kaṭu-ṅ-karuttu n. <>id. +. Abstruse, far-fetched idea or meaning; நேரே பொருளைத்தாராத கருத்து. (W.) |
| கடுங்கவி | kaṭu-ṅ-kavi n. <>id. +. Poet skilled in composing ācu-kavi; ஆசுகவி வல்லான்.(யாப். வி. 96, 513.) |
| கடுங்காந்தி | kaṭu-ṅ-kānti n. <>id. +. A prepared arsenic; இரசிதபாஷாணம். (W.) |
| கடுங்காய் | kaṭu-ṅ-kāy n. <>id. +. Unripe fruit; பச்சைக்காய். (W.) |
| கடுங்காய்ச்சல் | kaṭu-ṅ-kāyccal n. <>id. +. 1. High fever; மிக்கசுரம். 2. Being over heated, as in the fire; being dried or scorched, as in the sun |
| கடுங்காய்நுங்கு | kaṭu-ṅ-kāy-nuṅku n. <>id. +. Palmyra fruit the kernel or pulp of which is too far advanced to be eatable; முதிர்ந்த நுங்கு. (J.) |
| கடுங்காரநீர் | kaṭu-ṅ-kāra-nīr n. Prob. id. + kṣāra +. Egg; முட்டை. (மூ. அ.) |
| கடுங்காரம் | kaṭu-ṅ-kāram n. <>கடு-மை + kṣāra. 1.Powerful caustic; ஒருவகை எரிமருந்து. 2. Excessive pungency; |
| கடுங்கால் | kaṭu-ṅ-kāl n. <>id. +. Violent wind, tempest; பெருங்காற்று. கடுங்கால் மாரி கல்லே பொழிய (திவ் பெரியதி. 6,10, 8). |
| கடுங்காலம் | kaṭu-ṅ-kālam n. <>id. +. 1. Hard times; கஷ்டகாலம். 2. Hard season, as drought, scarcity, famine; 3. Hot season, hot weather; |
| கடுங்காவல் | kaṭu-ṅ-kāval n. <>id. +. Rigorous imprisonment, opp. to வெறுங்காவல் வன்சிறை. |
| கடுங்குடி | kaṭu-ṅ-kuṭi n. <>id. +. Excessive drinking; மிதமிஞ்சின் குடி. |
| கடுங்கூர்மை | kaṭu-ṅ-kūrmai n. <>id. +. 1. Extreme sharpness; அறக்கூர்மை. (W.) 2. Salts of various kinds, viz., கடுந்திலாலவணம், இந்துப்பு, கந்தகவுப்பு, கடலுப்பு, அமரியுப்பு; |
