Word |
English & Tamil Meaning |
|---|---|
| உயர்வுநவிற்சியணி | uyarvu-naviṟci-yaṇi n. <>id.+. Hyperbole; அதிசயோக்தி யலங்காரம். (அணியி. 13.) |
| உயர்வுவமை | uyarvuvamai n. <>id.+. A figure of speech in which a thing in compared to itself. See இயைபின்மையணி. (வீரசோ. அலங். 14.) . |
| உயரங்காட்டு - தல் | uyaraṅ-kāṭṭu- v. intr. <>உயரம்+. To stand up casually, as a little child does when attempting to walk; நடை பழகும்போது குழந்தை தடுமாறி நிற்றல். (W.) |
| உயரம் | uyaram n. <>உயர்1-. [M. uyaram.] 1. Height; ஆள் மரம் முதலியவற்றின் உயரம். 2. Elevation, eminence, loftiness; 3. (Astron.) Altitude; |
| உயராடு | uyar-āṭu n. <>id.+. Goat, supposed to be taller than a sheep; வெள்ளாடு. உயராட்டுப் பால் (தைலவ. தைல.12). |
| உயரி | uyari n. <>id. That which is tall, as a palm tree; tall person; உயரமானது. (W.) |
| உயல் 1 | uyal n. <>உய்1-. 1. Living; சீவிக்கை. 2. Escaping; 3. Being, existing; |
| உயல்(லு) 2 - தல் | uyal - 3 v. intr. To wave, shake; அசைதல். உயலுங்கோதை (பதிற்றுப். 52, 17). |
| உயவல் | uyaval n. <>உயவு1-. Distress, afflication, pain, suffering; வருத்தம். சிதாஅ ரோம்பி யுடுத்த வுயவற் பாண (புறநா. 69). |
| உயவற்பெண்டிர் | uyavaṟ-peṇṭir n. <>உயவல்+ Women who suffer under very trying austerities enjoined upon widowhood; கைம்மைநோன்பினால் வருந்தும் மகளிர். பாயின்று வதியுமுயவற் பெண்டிரே மல்லேம் (புறநா. 246). |
| உயவு 1 - தல் | uyavu - 5 v. intr. To suffer; வருந்துதல். உண்டென வுணரா வுயவு நடுவின் (பொருந. 38). |
| உயவு 2 | uyavu n. <>உயவு1- Distress, trouble, suffering; வருத்தம். உயவுநோய் கைம்மிக (கலித். 58). |
| உயவு 3 | uyavu n. <>உய்1-. Means of saving life; உயிர்பிழைக்கச்செய்யும் வழி. உய்யா வருநோய்க் குயவாகும் (கலித். 139). |
| உயவு 4 | uyavu 5 v. tr. & intr. <>உசாவு-. To take counsel, consult; உசாவுதல். லஞ்ச மைந்தரொ டுயவி (பாரத. சஞ்சய. 2). |
| உயவுத்துணை | uyavu-t-tuṇai n. <>உயவு4-+. Intimate friend; உசாத்துணை. சுரஞ்சென் மாக்கட் குயவுத்துணையாகுங் கல்வரை (குறுந். 207). |
| உயவுநெய் | uyavu-ney n. <>உய்3-. Lubricating oil for the wheels of cars, etc.; சகடத்திற்கு இடும் எண்ணெய். அஃதா லுயவுநெய் யுட்குளிக்கு மாறு (பழ. 385). |
| உயவை 1 | uyavai n. 1. Mussell-shell creeper. See காக்கணம். ஊறுநீ ருயவை (மலைபடு. 136). 2. White-flowered mussel-shell creeper. See வெண்கருவிளை. (பிங்.) |
| உயவை 2 | uyav-ai n. prob. உயவு1-. 1. Jungle; காடு. (பிங்.) 2. Jungle stream; |
| உயா | uyā n. <>உயவு2. Distress, suffering; வருத்தம். உயாவே யுயங்கல் (தொல். சொல். 369). |
| உயாவு - தல் | uyāvu- 5 v. tr. <>உசாவு-. To inquire after; விசாரித்தல். |
| உயாவுத்துணை | uyāvu-t-tuṇai n. <>உயாவு-+. See உசாத்துணை. உயாவுத் துணையாக வயாவொடும் போகி (மணி. 20, 93). |
| உயிர் 1 - த்தல் | uyir - 11 v. [K. usir, M. uyir.] intr. 1. To revive; to regain consciousness; to be re-animated; உயிர்பெற்றெழுதல். 2. To be in vigorous functioning activity; 3. To breathe hard; 4. To be wafted as fragrance; 5. To breathe one's last; -tr.1. To give birth to, bring forth; 2. To smell; 3. To say, declare; 4. (Math.) To multiply a number; 5. To emit, send forth; |
| உயிர் 2 | uyir n. <>உயிர்-. [T. Tu. usuru, K. usir, M. uyir.] 1. Life, animal or vegetable; சீவன். (திவா.) 2. Soul; 3. Living being; 4. (Astrol.) Ascendant, sign of nativity; 5. Vowel; 6. One of the vital airs. See பிராணவாயு. 7. Wind; 8. Voice, spoken sound; 9. A measure of time 1/4320 of a nāḷikai; |
| உயிர் 3 | uyir n. <>ušīra. Cuscuss-grass. See இலாமிச்சை. (மலை.) . |
