English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
venerale,
a. போற்றத்தக்க, வணங்குதற்குரிய, தகையார்ந்த, மதிப்பிற்குரிய.
venerate
v. வணங்கு, மதிப்புக்கொடு, போற்று, மரியாதை செலுத்து, போற்றிப் பாராட்டு.
veneration
n. போற்றரவு, ஆழ்ந்த மதிப்பு, மரியாதை, பயபக்தி, வணக்கம், வணங்குதல்.
venereal
a. இணைவிழைச்சுச் சார்ந்த, சிற்றின்பத்திற்குரிய, கலவியினால் தோற்றுகிற, ஒழுக்கக் கேட்டினால் ஏற்படுகிற.
Venerean
n. வெள்ஷீக்கோள் வாழ்நர், வெள்ஷீக்கோள் சார்ந்த.
venereologist
n. மேகநோய் ஆய்வு நுலர், மேகநோய்ச் சிறப்பு மருத்துவர்.
venereology
n. மேகநோய் ஆய்வு நுல், மேகநோய்ச் சிறப்பு மருத்துவத் துறை.
venery
-1 n. (பழ.) வேட்டை, வேட்டையாடு.
venesect
v. முற்கால மருத்துவ வழக்கில் குருதி வடிப்பு முறை கையாளு, குருதி வடிப்புச் செய்.
venesection
n. முற்கால மருத்துவ வழக்கில் குருதிவடிப்பு முறை, குருதிவடிப்பு.
Venetian
-1 n. வெஷீஸ் நகரவாணர், மடக்குவரிச் சட்டப் பலகணித் திரை, (பெ.) வெனிஸ் நகரஞ் சார்ந்த.
venetians
n. pl. விசிறித் திரை இரட்டு, மடக்குவரிச் சட்டப் பலகணித் திரைக்குரிய முரட்டுத் துணி.
vengeance
n. பஸீக்குப்பஸீ, தன் பஸீக்குரிய பஸீத்தண்டம், பஸீ எதிர்வினை, பஸீதீர்ப்புச் செயல், பஸீமாற்றுச் செயல், சார்பாளர் பஸீ வகையில் பஸீதுடைப்புச் செயல், பஸீதுடைப்பு, பஸீதீர்வு.
vengeful
a. பஸீவாங்கும் எண்ணமுள்ள, பஸீதீர்க்கும் இயல்புடைய.
venial
a. மன்னிக்கத்தக்க, பொறுக்கக்கூடிய, கடும் பிழையாயிராத, பாழ்நிலைப்படாத, ஆன்மிக நலம் கெடுத்தஸீக்கத்தக்க அளவிலல்லாத.
Venice
n. வெனிஸ் நகரம், முற்கால வெனிஸ் நகர்க் குடியரசு, நஞ்சுபட்டால் வெடித்துவிடும் கண்ணாடிக் குவளை.
venire, venire facias
n. (ல.) (சட்.) முறைகாணாய அழைப்பாணை, முறைகாணாயத்தினை அழைக்கும்படி மாநகர் மணியத்துக்கிடும் கட்டளை.
venison
n. மான் இறைச்சி, மானிறைச்சிக் கறி.
Venite
n. (ல.) வாரானைப்பாடல், வருக என்று தொடங்கும் விவிலிய கீதப்பாடல்.
venom,
n. நஞ்சு, பாம்புப் பல் நஞ்சு, தேன் கொடுக்கு நஞ்சு, கடுப்பு, மனக்காழ்ப்பு, நச்சுப் பகைமைப் பண்பு, ஊன்றிய வன்மம், பேச்சின் கடுநச்சுத் தன்மை,. நடத்தை நச்சுத் தன்மை.