English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
selfheal
n. மருத்துவரில்லாமலே குணப்படுத்துவதாகக் கருதப்படும் பூண்டு வகை.
selfish
a. தற்பற்றார்ந்த, குறுகிய தன்னலமுடைய, தன்னலமே கருதுகிற, பிறர்நலம் கருதிப்பாராத, தன்னலத்தால் தூண்டப்பெற்ற.
selfism
n. தன்முக ஒருமைச்சிந்தனை, இன்பொழுக்கக் கோட்பாடு, எல்லாச் செயல்களும் இன்பமே நோக்கமாகக் கொண்டவை என்ற கொள்கை.
selfist
n. இன்பொழுக்கக் கோட்பாட்டாளர்.
selfk-conceit
n. போலித் தற்பெருமை, செருக்கு, இறுமாப்பு.
selfless
a. தன்னலம் மறந்த, அறவே தன்னலமற்ற.
selfness
n. தன்முனைப்பு, அகந்தை, தனிப்பட்ட ஆட்பண்பு.
selfsame
n. அதுவே, அதனின் வேறல்லாதது, (பெ.) அதே, அதனின் வேறல்லாத
sell
n. ஏமாற்றம், (வினை.) விற்பனை செய், வாணிகஞ் செய், விலைப்பொருளாக்கு, பணத்தை வாங்கிக்கொண்டு ஒப்படைத்துவிடு, பணம் வாங்கிக்கொண்ட கெடு, ஏமாற்று, தன்னல நாட்டத்தால் குலைவுறுத்து, பணம் வாங்கிக்கொண்டு காட்டிக்கொடு, தகாவழிப் பேரஞ் செய், கொடுத்து வாங்கு, பண்டமாற்றுச் செய், சரக்குவகையில் விற்பனையாகு, விலைபோ, விலைக்களத்திற் பரவுறு.
sellable
a. விற்பனையாகக்கூடிய, விற்பனை செய்யக்கூடிய.
sellanders
n. pl. குதிரைக் காலடிக் காய்ப்புப்புண்.
seller
n. விற்பவர், விற்பனையாகும் பொருள்.
selling-price
n. விற்பனை விலை.
selling-race
n. வெற்றிபெற்ற குதிரை குறிப்பிட்ட விலைக்கு அல்லது ஏலத்தில் உச்சவிலைக்கு விற்கப்படவேண்டும் என்ற கட்டுப்பாட்டுடன் தொடங்கப்படும் குதிரைப்பந்தயம்.
seltzer, seltser water
n. செர்மனியிலுள்ள மருந்தியல் ஊற்றுநீர், காரநீர்.
seltzogene
n. காரநீர் உண்டுபண்ணும் பொறி.
selvage
n. ஆடைத் திண்விளிம்பு, ஆடை கிழிப்பதற்குரிய ஊடுவிளிம்பு, பூட்டில் தாழ்பற்றும் விளிம்புத்தகடு.
selvagee
n. வரிநுற் கழிவளையம், தொங்கல் முடிச்சாகப் பயன்படும் நுல்கழிச்சுருளை.
semantic
a. மொழியின் சொற்பொருள் சார்ந்த.