English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
selenotropism
n. (தாவ.) வளர்ச்சியில் திங்கட்கோள் நோக்கிய வளைவியல்பு.
selenotropy
n. திங்கட்கோள் நோக்கிய வளைவுடைமை.
Seleucid
n. சிரியாவை ஆண்ட செலுக்கஸ் வழிமரபினர்.
self
n. தான், தான் எனுந் தன்மை, தனித்தன்மை, ஆளின் அக நிலைப்பண்பு, பொருளின் அகநிலைக்கூறு, உள்ளுயிர்த்தன்மை, உள்ளுயிர், ஆன்மா, அகநோக்குரிய உள் இலக்கம், ஆளின் மாறா அடிப்படைத் தன்மை, இயற்படிவம், தற்படிவம், தனிப்பண்புத்தொகுதி, ஆளின் பண்புக்கூறு, பொருளின் தன்மைக்கூறு, தனிநலன், தன் இன்ப நுகர்வு, தன்முனைப்பு, அகந்தை, அகங்காரம், ஒரு சீர்நிறமான மலர், இயல்மூல நிறமுடைய மலர், ஒரே பிழம்பாலான பொருள், ஒரே பிழம்பாலான வில், தானே, நானே, நீயே, அவனே, அவளே, அதுவே, நாமே, நாங்களே, நீங்களே, அவர்களே, அவைகளை, (பெ.) வண்ண வகையில் ஒரு சீரான, முழுவதும் ஒரே தன்மையான, மலர் வகையில், ஒரு சீரான வண்ணம் வாய்ந்த, ஒரே பிழம்பாலான.
self-abandoned
a. தன்னைத் தானே அனாதையாக்கிக் கொண்ட, தன்மனம் போனபடி நடக்கிற, ஒழுக்க வரம்புகெட்ட.
self-abandonment
n. தற்றுறப்பு, தன்னல மறுப்பு, தற்புறக்கணிப்பு, தன்முனைப்பின்மை, இயலௌிமைநிலை, ஒழுக்கவரம்பற்ற தன்மை.
self-abased
a. தானே தன்னைத் தாழ்த்திக்கொண்ட.
self-abasement
n. மட்டற்ற தற்கழிப்பு, தன்னைத்தானே இழிவுபடுத்திக் கொள்ளுதல், மட்டற்ற நற்பண்பு.
self-abasing
a. தன்னைத்தானே தாழ்த்திக்கொள்ளுகிற, இயல்பாகப் பண்பு கெடுக்கிற.
self-abhorrence
n. தன்வெறுப்பு, தன்னைத்தானேவெறுத்துக் கொள்ளுதல்.
self-abonegation
n. தன்னலத்துறப்பு, சகிப்புத்தன்மை, தன்மறுப்பு, தியாகம்.
self-absorbed
a. தற்சிந்தனையில் ஆழ்ந்த, தன்னைப்பற்றியே நினைக்கிற, புறத்தே கருத்துச் செலுத்தாத.
self-absroption
n. தன்னாழ்வு, தற்சிந்தனையாழ்வு, தன்னலம் நோக்கிய போக்கு.
self-abuse
n. தற்புணர்ச்சிப் பழக்கம், முட்டிமை, தற்பழிப்பு.
self-accusation
n. தற்குற்றச்சாட்டு.
self-accused
a. தன்னாலேயே குற்றஞ்சாட்டப்பட்ட, தானே தன்னைக் குற்றத்திற்கு உரியவராக்கிக் கொண்ட.
self-accuser
n. தன்னைத்தானே குற்றஞ் சாட்டிக்கொள்பவர்.
self-accusing
a. தன்னைத்தானே குற்றஞ்சாட்டிக் கொள்கிற.
self-accusingly
adv. தற்குற்றச்சாட்டாக, தன்னைத்தானே குற்றஞ்சாட்டும் முறையில்.
self-acting
a. தானாகச் செயற்படுகின்ற, புறத்தூண்டுதல் வேண்டாத.