English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
superlunar, superlunary
a. இவ்வுலகத்திற்குரியதல்லாத, உலகியலுக்கு மேம்பட்ட.
superman
n. மீமனிதர், மனித எல்லைகடந்த குறிக்கோட்பண்பு நிறைவாளர், தேவநிலையாளர்.
supermedial
a. நடுத்தரத்திற்கு மேற்பட்ட.
supermolecule
n. அணுத்திரளை, அணுத்திரளாகச் செயற்படும் அணுத்திரளிணைவு.
supermundane
a. உலகியற் செய்திகளுக்கு அப்பாற்பட்ட.
supernaculum
n. சிறப்புயர் இன்தேறல், இன்தேறல் நிறைகலம், (வினையடை.) இறுதித்துளிவரை, முடிவுவரை, முழுதாக.
supernal
a. (செய்.) வானுலகத்திற்குரிய, மேலுலகுக்குரிய, வானவெளி சார்ந்த, தெய்வத்தன்மையுடைய, மேன்மையான, விழுமிய.
supernatant
a. புறப்பரப்பில் மிதக்கிற.
supernatation
n. புறப்பரப்புமிதப்பு, நீர்மநெகிழ்ம மேல்நிலை, தளமிதப்பு.
supernatural
n. இயல்நிலை கடந்தவர், தேவர், தெய்வம், தெய்வ நிலையினர், உலோகதீதம், இயற்கை மீறிய பொருள், (பெ.) இயற்கை கடந்த, இயற்கைமுறைக்குளடங்காத, இயன்முறைக் காரணகாரியத் தொடர்புக்கு அப்பாற்பட்ட, வியக்கத்தக்க, தெய்விக அருநிகழ்வான, தெய்விக ஆற்றல் சுட்டிய, ஆவித்தொடர்புடைய.
supernaturalism
n. இயற்கை கடந்த நிகழ்வு, தெய்விக அருநிகழ்வு நம்பிக்கை.
supernaturalist
n. இயற்கைக்கு அப்பாற்பட்டதில் நம்பிக்கையுள்ளவர்.
supernaturalize
v. இயல்மீறிய நிலைப்படுத்து, இயல்கடந்த அருநிகழ்வாக்கு.
supernormal
a. பொதுநிலை கடந்த, பொதுக்காட்சிக்கு அப்பாற்பட்ட, அருநிலையான, இயல்நிலைக்கு அப்பாற்பட்ட படிவமுடைய, இயல்நிலைக்கு மேற்பட்ட எண்ணிக்கையுள்ள, பொதுமீறிய அளவுள்ள, பொதுமீறிய பண்புடைய.
supernumerary
n. மிகையாள், மிகைப்பொருள், சில்லறை வேலைகளுக்கென வைத்துக்கொள்ளப்படும் மிகுதிப்படியான ஆள், பேசவேண்டியிராத நடிகர், (பெ.) மிகையான, குறிப்பிட்ட-வழக்கமான-வேண்டிய எண்ணிக்கைக்கு மேற்பட்ட.
superoctave
n. (இசை.) மீசுரக்கட்டை, முதன்மைச் சுரத்திற்கு இருபாலைகளுக்கு மேற்பட்ட கேள்விக்கட்டை.
superorder
n. (உயி.) உயர்தரக் குழுமம், இனக் குழுமத்திற்கும் வகுப்பிற்கும் இடைப்பட்ட தரம்.
superordinary
a. பொதுமுறைக்கு மேற்பட்ட, பொது நிலைக்கு மேம்பட்ட.
superordinate
n. மேம்பட்ட பதவித் தரத்தினர், மேம்பட்ட தரத்தினர், (பெ.) பதவித்தர மேம்பட்ட, (அள.) வாசக இனமுழுமைத்தொடர்புடைய, (வினை.) மேம்பட்ட தரத்திரனராக்கு, மேம்பட்ட தரத்ததாக்கு.
superordination
n. (அள.) வாசக வகையில் இனமுழுமைத்தொடர்பு.