English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
suborbital
a. கட்குழியின் கீழுள்ள.
suborder
n. (உயி.) இனக்குழுமத்தின் உட்பிரிவு, இனங்களின் தொகுதி.
subordinal
a. இனக்குழும உட்பிரிவு சார்ந்த, இனக்குழுமஉட்பிரிவின் இயல்புள்ள, இனக்குழும உட்பிரிவின் தரமான.
subordinate
n. கீழ்ப்பணியாளர், ஒருவர்கீழ்ப் பணிசெய்பவர், (பெ.) கீழ்நிலைப்பட்ட, கீழ்ப்படியான, துணைமையான, இரண்டாம் படியான, குறைந்த முக்கியத்துவம் வாய்ந்த, சிறப்புக்குன்றிய, தரம் குன்றிய, அடிமைபோல் நடக்கிற, (இலக்.) வாசக உறுப்பு வகையில் சார்பியலான, (இலக்.) இடைச்சொல் வகையில் சார்பியல் உறுப்புக்களை முதலுடன் இணைக்கிற, (வினை.) கீழ்நிலை எய்துவி, குறைந்த முக்கியத்துவமுடையதாக்கு, சிறப்புக்குன்றியதாக நடத்து, குறைவுடையதாக மதிப்பிடு, கருவி நிலைக்குத் தாழ்த்து, கருவியாக மட்டுங் கருது.
subordination
n. துணைமைநிலை, கீழ்நிலை, துணைமை நிலைக்கு இறக்குதல், கீழ்நிலை எய்துவித்தல், கீழடக்கம், குறைந்த முக்கியத்துவம், குறைந்த படித்தரம், பணிவு, படிப்படி இறக்க ஒழுங்கு, படிப்படி இறக்கக் கவான் உள்வளைவுத்தொகுதி.
subordinationism
n. பின்னிறக்கக்கோட்பாடு, கிறித்தவ மூவொருமைத்துவத்தில் முதலாவதற்கு இரண்டாவதும் மூன்றாவதுந் தாழ்ந்தவையென்னுங் கோட்பாடு.
subordinative
a. பணிவடக்கப் பாங்குள்ள, துணைமை நிலைக்குரிய, துணைமைநிலை குறித்த.
suborn
v. கைக்கூலி கொடுத்து வசப்படுத்து.
subovate
a. ஏறத்தாழ முட்டைவடிவான.
subpharyngeal
a. தொண்டையடி சார்ந்த.
subphrenic
a. வயிற்றுவிதானத்திற்குக் கீழான.
subpilose
a. சிறிதே மயிர்மூடிய.
subpleural
a. (உள். மரு.) நுரையீரலுறைக்கு அடியிலுள்ள.
subplot
n. துணைக்கதைக்கூறு, துணைநிகழ்ச்சிக் கூறு.
subpoena
-1 n. முறைமன்ற அழைப்பு ஆணை, (வினை.) முறைமனற அழைப்பு ஆணைப்பத்திரஞ் சேர்ப்பி.
subpolar
a. ஏறத்தாழத் துருவ மண்டல இயல்புள்ள, கிட்டத்தட்ட துருவ மண்டலத்திலிருக்கிற, (வாள்.) துருவவிண்முனைக்கு நேர் கீழேயுள்ள.
subprefect
n. துணைப்படையாட்சியாளர், பண்டை ரோமாபுரியில் துணை ஆட்சி அரங்கத் தலைவர், துணைச்சட்டாம் பிள்ளை.
subprefecture
n. துணைப்படையாட்சியாளர், பதிவ, பண்டை ரோமாபுரியில் துணை ஆட்சி அரங்கத் தலைமைப் பதவி, துணைச்சட்டாம்பிள்ளை நிலை.
subprior
n. மடத்துத் தலைவருக்கு அடுத்துக் கீழுள்ள துறவி.
subpyramidal
a. ஏறத்தாழக் கூம்புகோபுரவடிவான.