English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
sublapsarian
n. வீழ்ச்சிமீட்சிப் புகழ்வீற்றுக் கோட்பாட்டாளர், இறைவன் தன்புகழ் வீறுதோன்றப் பலரை வீழ்ச்சிக்கும் சிலரை மீட்சிக்கும் தேர்வு செய்கின்றானென்ற கிறித்தவ சமயக் கிளையின் கோட்பாட்டைப் பின்பற்றுபவர், (பெ.) வீழ்ச்சிமீட்சிப் புகழ்வீற்றுக் கோட்பாட்டினைச் சார்ந்த.
sublate
v. (அள.) மறு, (மெய்.) உயர்தளப்படுத்து.
sublation
n. (செய்.) உயர்தளப்பாடு.
sublease
-1 n. உட்குத்தகை, கீழ்க்குத்தகை.
sublessee
n. கீழ்க்குத்தகை பெற்றவர்.
sublessor
n. கீழ்க்குத்தகைக்கு விட்டவர்.
sublet
n. கீழ்க்குத்தகைக்கு விடுதல், (பெ.) கீழ்க்குத்தகைக்கு விடப்பட்ட, (வினை.) கீழ்க்குத்தகைக்கு விடு.
sublibrarian
n. உதவி ஏடகர், புத்தக நிலையத் துணைத் தலைவர்.
sublieuetenant
n. துணைத்தரப் படைத்தலைவர், சிறு துணைமைப் பணித் தலைவர்.
sublimate
n. பதங்கம், ஆவி உறைபடிவு, சூடேற்றி ஆவியாக மாற்றிப் பின்னர் கெட்டியாக ஆறவிடப்பட்ட சரக்கு,(பெ.) பதங்கமாக்கப்பட்ட, (வினை.) உயர்வுபடுத்து, ஆவி உறை படிவாக்கு, நயமாக்கு, மேன்மைப்படுத்து, தூய்மையாக்கு.
sublimation
n. மேம்பாடுறுவிப்பு, பதங்கமாதல், ஆவிஉறைபடிவாக்கம், ஆவிஉறைபடிவு, ஆவி உறைபடிவாக்கத்தூய்மைப்பாடு, நிறைவெய்திய நிலை, உயர்வு, உருமாமற்ற மேம்பாடு, உணர்ச்சி மேம்பாடு, இயல்புணர்ச்சி சார்ந்த ஆற்றல், தன்னையறியாமலேயே உயர்குறிக்கோள்களை நோக்கித் திரும்புதல்.
sublime
n. மேதகு செய்தி, மீதுயர் கருத்து, விழுமிய நடை, (பெ.) மேனிலையார்ந்த, விழுமிய, மாண்பு வாய்ந்த, மேதகு சிறப்பு வாய்ந்த, வியப்பார்வத்திற்குரிய, வீறமைவார்ந்த, செம்மாந்த, பெருமிதப் போக்குடைய, இறுமாந்த, விளைவு பற்றி அஞ்சாத்தன்மை வாய்ந்த, கவலையற்ற மேலாவித்தனப் போக்குடைய, (உள்.) தோலடியான, மேற்பரப்படுத்துக் கீழுள்ள, (வினை.) பதங்கமாக்கு, ஆவியுறை படிவாக்கு, பதங்கமாகு, ஆவிஉறை படிவாகு, பதங்க ஆக்கத்திற்கு உள்ளாகு, தூய்மைப்படுத்து, புடமிட்டு உயர்வுடையதாக்கு, பண்புமாற்றி விழுமியதாக்கு, தூய்மைப்படு, உயர்வுடைய தாகு.
subliminal
a. தூண்டுதல் புலப்பாட்டெல்லைக்குக் கீழ்ப்பட்ட, புலப்படாத் தூண்டுதல் நொய்ம்மையுடைய.
sublimtiy
n. விழுப்ம், உயர்நிலை, மேம்பாடு, மேதகைமை, எண்ணம், பெருந்தகைமைப் பண்பு, இறம்பூது,மதிப்பச்சமும் வியப்பார்வமுடைய மனக்கிளர்ச்சி, இறும்பூதூட்டுஞ் செய்தி, உயர் முகடு, நிறைவெய்திய நிலை.
sublineation
n. அடிவரையீடு.
sublingual
a. அடிநாக்கின் கீழான.
sublittoral
a. கரையடுத்தருகே வாழ்கிற, கரையிலிருந்து சிறிதே விலகி வளர்கிற.
sublunar
n. (செய்.) இம்பர், இவ்வுலக வாணர், (பெ.) இம்மைசார்ந்த, பூவுலகிற்குரிய.
sublunary
a. திங்களுக்குக் கீழான, மதிக்கீழான.
sublunate
a. பிறையணுக்க வடிவுடைய.