English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
solstice
n. கதிர்த்திருப்பம், கதிர்மண்டலத் திருப்புமுகம், சங்கிராந்தி ( ஜுன் 21, டிசம்பர் 22), கதிரவன் கதிர்வீதியில் எய்தும் இடம்.
solstitial
a. கதிர்த்திருப்பஞ் சார்ந்த, சங்கிராந்திக்குரிய.
soluble
a. கரையத்தக்க, புதிர் வகையில் விடுவிக்கத்தக்க, கடாவகையில் தீர்வுகாணத்தக்க, தௌிவுகாணக்கூடிய.
solus
adv. நாடக அரங்க வழக்கில் தனியாக, தனிமையில்.
solute
n. கரைவம், கரைசலிற் கரைவுற்ற பொருள்.
solution
n. கரைவு, கரைவுநிலை, கரைசல், நீமத்தில் நீர்ம இழைக் கலவை, நீர்மத்தில் வளி இழைக் கலவை, ஐயந்தீர்வு, புதிர் விடுவிடுப்பு, விளக்கம், தீர்வுமுடிவு, தொய் வாகக் கரைசல், கூறு பிரிப்பு, தனிப்பு, தனித்துப்பிரிக்கப்பட்டநிலை, ஆக்கச்சிதைவு, கூட்டுப் பிரிவீடு, இணைவறவுக்கோளாறு, நோய்நெருக்கடி கட்டம், (வினை.) தொய்வகக் கரைசல் புறவரியிடு, தொய்வகக் கரைசலால் ஒட்டு, தொய்வாகக் கரைசலாற் செப்பனிடு.
solutional
a. கரைசல் சார்ந்த, கரைசலான, தீர்வு சார்ந்த, தீர்வான.
solutionist
n. புதிர்விளக்கவாணர், செய்தித்தாள் புதிர்கள் விடுவித்தலைத் தொழிலாக உடையவர்.
solutive
a. கரைகிற, கரைக்கும் இயல்புடைய, இளக்குகிற.
Solutrain
a. குகைமனித நாகரிககாலஞ் சார்ந்த, பிரான்சில் சொல்யூட்ரிக் குகையில் கண்டெடுக்கப்பெற்ற படிவங்களால் குறிக்கப்பெறும் பழங்கற்காலஞ் சார்ந்த.
solvability
n. கரையுந்தன்மை, தீர்வுநிலை, விடைகாணத்தக்க இயல்பு.
solvable
a. விளக்கக்கூடிய, சிக்கறுக்கக் கூடிய, விடைகாணக்கூடிய, தீர்வுசெய்யத்தக்க, விடுவிக்கக்கூடிய, கரையக்கூடிய.
solvate
n. வரையளவு, கரைவு-கரைமம்--கரைவான்-கரைப்பான் ஆகியவற்றின் ஒரு குறிப்பிட்ட அளவு இணைப்பு.
solve
v. கரை, நீர்மத்திற் கலந்திழைவி, அமிழ்வுறுவி, முறுக்கவிழ், தளர்த்து, புதிர்வெடுவி, கடாவகையில் தீர்வு செய், சிக்கறு, விளக்கு, தௌிவாக்கு, விடைகாண்.
solvency
n. கரைதிறம், இணைதிறம், கடன்தீர்வுத்திறம்.
solvent
n. கரைமம், கரைக்கும் ஆற்றலுடைய நீர்மம், கரைப்பி, இணையும் பொருளைத் தன்வயப்படுத்தி இழைவிக்கும் ஆற்றலுடைய பொருள், கரைப்புத்திறப் பண்பு, நம்புக்கை பழக்க வழக்க மரபுகள் வகையில் படிப்படியாக மெல்லத் தன்வயமாக்கிவிடும் பண்பு, (பெ.) கரைதிறமுடைய, இணைதிறமுடைய, இணைந்து வயப்படுத்தும் ஆற்றலுடைய, சேர்ந்து முனைப்பழிக்கும் திறமுடைய, நம்பிக்கை பழக்க வழக்கமரபுகள் வகையில் இணைந்து படிப்படியாகத் தளர்த்தியகற்றும் பண்புடைய, செயலோடியான, கடன்தீர்வுத்திறமுடைய, கடன்திர்த்துத் தொழிலைத் தொடர்ந்து நடத்துந்திறலோடிருக்கிற.
solver
n. கரைப்பது, கரைப்பவர், விளக்குபவர், விடுவிப்பவர், விடைகண்டுபிபடிப்பவர், சிக்கற்றுபவர்.
somatic
a. உடற்கூறு சார்ந்த, உடற்பிழம்பியலான, உடல் சார்ந்த, உயிர்க்கூற்றிற்குப் புறம்பான, மனஞ்சாராத.
somatogenic
a. உடம்பில் தோன்றுகிற, உடலிற் பிறக்கிற இயல்புடைய.
somatology
n. உடலுயிரியல்நுல், உயிருள்ள உடலைப் பற்றிய ஆய்வுத்துறை, பொருள்களின் நிலையியக்க அளவை ஆய்வியல், உடல் மெய்க்கூற்றியல் நுல், உடல் உள்ளுறுப்பியல், உடலியல் ஆய்வுத்துறை.