English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
sir
n. தகவாளன், வீரத்திருத்தகை அடைமொழி, தகவாளர் விளிக்குறிப்புச்சொல், ஐயாஸ் ஐயாஸ் (வினை.) தகவாளர் என்ற அடையுடன் குறிப்பிடு, ஐஸ் என்று விளித்தழை.
sircar
n. அரசியலார், சர்க்கார், ஆட்சித்தலைவர், மனை மேற்பார்வையாளர், நாட்டாண்மைக் கணக்கர்.
sirdar
n. ஆணைத்தலைவர், தளபதி.
sire
n. தகப்பன், தாதை, முன்னோன், (செய்.) விலங்கில் தந்தை, பொலிகுதிரை, விடை, பொலிவிலங்கு, பெரியோர் முன்னிலைப்படுத்தும் விளிக்குறிப்புச் சொல், (வினை.) பொலிகுதிரை குறித்த வகையில் பொலிவி, ஆண் விலங்கு வகையில் பொலிவி, ஈனுவி.
siren
n. நீரணங்கு, புள்ளணங்கு, கிரேக்க புராணமரபில் தலைப்பகுதி பெண்ணுருவான புள்வடிவ மருட்டிசைப் பெண் தெய்வங்களில் ஒன்று, மோகினித்தெய்வம், மயக்கிசை மங்கை, மருட்டும்பொருள், மயக்கமூட்டுஞ் செய்தி, இனிய பாடகி, இன்னிசை மாது, எச்சரிக்கைச் சங்கொலி, அபாயச் சங்கு, மின்சங்கநாதம், நீர்வாழ், பால்குடி விலங்கினத்தின் வகை.
sirenian
n. நீர்வாழ் பால்குடி விலங்கினத்தின் வகை, (பெ.) நீர்வாழ் பால்குடி விலங்கினத்தின் வகை சார்ந்த.
sirgang
n. காக்கையின் ஒண்பகம் பறவை வகை.
siriasis
n. கடுங்கதிர் வீச்சு.
sirloin
n. எலும்பு உள்ளடக்கிய மாட்டின் இடுப்பு மேற்பகுதி இறைச்சி.
sirocco
n. வேனில் வெங்காற்று, உணங்குபொறி.
sirrah, sirree
சின இறுமாப்பு விளிக்குறிப்புக்சொல்த, அட அப்பனே ஸ்.
sirvente
n. கட்டளை அங்கதப்பாட்டு, தனி யாப்பு முறையமைந்த முற்கால வசைப்பா வகை.
sisal
n. தாழையின் நாரிழைத் தாவரவகை, தாழையின நாரிழை.
siskin
n. கூண்டுகளில் வளர்க்கப்படும் பச்சைநிறப் பாடும் பறவை வகை.
sister
n. உடன் பிறந்தாள், தங்கை, தமக்கை, பொதுத்தாய் தந்தையரையுடைய உடன்பிறப்பாட்டி, சகோதரி, அரை உடன்பிறப்பு, பெற்றோரில் ஒருவரைப் பொதுவாகக் கொண்டு உடன்பிறந்த பெண், உற்ற தோழி, பாசமிக்க பாங்கி, துணைவி, உடனொத்த குழுவினள், உடன்கூட்டாளிப் பெண், நங்கை, மனித இனமளாவிய அன்புக்குரிய பெண், சமயக்குழுத் துணைவி, கன்னித்துறவுக் குழுவினள், சமுதாய சேவைக் குழாத்தினள், தலைமைச் செவிலிப்பெண், உருவக வழக்கில் உடனிணைபண்பு, உடனிணைகூறு.
sister-german
n. நேரடி உடன்பிறந்தாள், பெற்றோரிருவரையும் பொதுவாக உடைய உடன்பிறப்பாட்டி.
sister-hook
n. இருகண்ணிக் கொளுவி, கயிறினை உள்ளே புகவிட்டதும் எட்டு போன்ற வடிவில் மூடிக்கொள்ளும் இரட்டைக் கொளுவி.
sister-in-law
n. நாத்தூண் நங்கை, நாத்தினார், கணவனின் உடன்பிறந்தாள், உடன்பிறந்தாள் மனைவி, அண்ணி, கொழுந்தி, மனைவியின் உடன்பிறந்தாள், மதினி, மைத்துனி.