English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
inimitable
a. பார்த்துப்பின்பற்ற முடியாத, பார்த்தமைக்க இயலாத, ஈடற்ற, ஒப்புக்காட்ட இயலாத.
iniquity
n. நேர்மையற்ற தன்மை, அநீதி, கொடுமை.
initial
n. சொல்லின் முதலெழுத்து, பெயர் முதலெழுத்து, (பெயரடை) தொடக்கத்திலுள்ள, முதலிலுள்ள, தொடங்குகிற, (வினை) பெயரின் முதலெழுத்துக்களை மட்டும் குறி, முதலெழுதது மட்டும் குறித்துக் கையொப்பமிடு.
initials
n. pl. தலைப்பு எழுத்துக்கள்.
initiate
-1 n. தீக்கை பெற்றவர், சமயக்கூட்டில் சேர்க்கப்பட்டவர், (பெயரடை) தீக்கை செய்யப்பட்ட.
initiater
-2 v. தொடக்கம், செய், துவக்கிவை, தோற்றுவி, புதுய, அறிவுத்துறை வகையில் புகுமுகம் செய்துவை, சமயவகையில் தீக்கை வழங்கு புகுமுக வினைகளாற்றிச் சேர்த்துக் கொள்.
initiative
n. முயற்சி தொடங்குநிலை, முதற்படி, நற்றொடக்கம், அடியெடுப்பு, தொடங்கும் உரிமை, தொடங்கும் வாய்ப்பு வளஆற்றல், சுவிட்சர்லாந்து முதலிய நாடுகளில் சடடமன்றம் வழியாக அல்லாது மக்கள் நேரடிச் சட்டம் ஆக்கும் உரிமை, (பெயரடை) தொடக்கம் செய்ய உதவுகிற, புகுமுகமான.
initio
adv. புத்தக முதலியவற்றின் வகையில் தொடக்கத்தில்.
inject
v. உட்செலுத்து, மருந்து ஊசிபோடுதல், உட்புகுத்திப் பள்ளம் நிரப்பு.
injectoin
n. மருந்து ஊசி போடுதல், ஊசியிடடச் செலுத்தும் மருந்து நீர்மம்.
injudicious
a. ஆராயாது துணியப்பட்ட, அறிவுத் தகுதியற்ற.
injunction,
உரிமைக் கட்டளை, தடை அதிகார ஆணை, செயல் தடைப்படுத்தவும் வலியுறுத்தவும் பெறப்படும் நீதி மன்றக் கட்டாயமுறை உத்தரவு.
injure
v. தீங்கு செய், ஊறுபடுத்து, காயப்படுத்து பழுதுபடுத்து, இழப்பு உண்டுபண்ணு, நலங்கெடு.
injured
a. புண்பட்ட, தீங்கிழைக்கப்பட்ட, தீங்குக்கு ஆளானதாகக் குறைப்படுகிற, தீமை உண்டுபண்ணத்தக்க, மதிப்புக் கேடான, அவதூறான.
injury
n. தீங்கு, தீங்கிழைக்கும் செயல், தீமை உண்டு பண்ணும் நடத்தை, இழப்பு, சேதம், ஊறு, காயம், அழிபாடு.
injustice
n. நேர்மைக்கேடு, அநீதி, முறையற்ற செயல், உரிமைப்பறிப்பு, தீங்கிழைப்பு.
ink
n. மை, எழுதும் மை, கருநிறக் குழம்பு, அச்சடிப்பதற்குப் பயன்படும் வண்ணப் பசை, கடல்மீன் வகையிலிருந்து வெளிப்படும் கருநிற நீர்மம், (வினை) அச்சுருக்கள் மீதுமை பூசு, மையினால்ட எழுது, கரிய வண்ணம்பூசு.
Ink jet printer
மையச்சுப்பொறி
ink-bag
n. கடல்மீன்வகை எதிரிகளிடமிருந்து தப்புவதற்காகத் தன் உடலினின்று வெளிப்படுத்தும் கருநீர்மம்.,
ink-horn
n. முற்காலங்களில் எழுதும் மை வைப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட சிறு கொம்புக்கலம், மைக்குப்பி.