English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
grog
n. நீர்த்தேறல், இனிப்பில்லா நீர்சேர் சாராய வகை, நீர்த்தேறல் அருந்தும் கூட்டுக்குழாம், (வினை) நீர்த்தேறல் அருந்து, வெறுமையாய்விட்ட மிடாவில் வெந்நீருற்றிச் சாராயம் பெறு.
grog-blossom
n. மட்டிலாக் குடியினால் மூக்கில் ஏற்படும் செந்நிறக் கொப்புளம்.
groggy
a. குடித்த, மட்டுமீறிக் குடித்த, குடிப்பழக்கமுள்ள, குதிரை வகையில் வலிவற்ற முன்னங்கால்களுடைய, குத்துச் சண்டையில் தளர்வினால் நிலைதடுமாறுகிற, தள்ளாடு நிலையிலுள்ள.
grogram
n. பட்டும் கவரிமான் மயிரும் கம்பளியும் சேர்த்து நெய்யப்பட்டுப் பசையால் விறைப்பாக்கப்பட்ட முரட்டுத்துணி வகை.
grogshop
n. சாராயக்கடை, தேறல்விடுதி.
groin
-1 n. அரை, இடுப்பு, வயிறு தொடை சேருமிடம், (க-க.) இரு வளைவுமாடங்கள் சேரும் கட்டுமான இடைக்கோணம், கட்டுமான இடைக்கோணப்பட்டி, (வினை) கட்டுமான இடைக்கோணமமை, இடைக்கோணப்பட்டியுடன் கட்டு.
grolier
n. ஜூன் கிரோலியர் என்ற பிரஞ்சு ஏட்டார்வலர் கண்டு பின்பற்றிய பகட்டணியுடைய புத்தகக் கட்டட முறை, கிரோலியர் ஏடகத்திலுள்ள புத்தகம்.
gromwell
n. முன்பு மருந்தாகப் பயன்படுத்தப்பட்ட கல்லையொத்த விதைகளையுடைய செடிவகை.
groom
n. அரசமாளிகைப் பணியாளர்கள், குதிரைக்காரன், குதிரை நலம்பேணும் பணியாள், மணமகன், மாப்பிள்ளை, (வினை) குதிரையைப்பேணு, குதிரைக்குத் தீனியிட்டு வளர் குதிரையைத் தேய்த்துவிடு.
groomsman
n. மாப்பிள்ளைத் தோழன்.
groove
n. வரிப்பள்ளம், சால்வரி, தவாளிப்பு, பள்ள இணைவரி, வரித்தடம், செல்தடப்பள்ளம், தடம்பட்ட வழி, பழக்கப்பட்ட நாள்முறை நடப்பு, மாறா வழக்க நடைமுறை, (வினை) வரிப்பள்ளமிடு, சால்வரி அகழ், நீண்ட பள்ளத்தடமிடு.
grope
v. தட்டித் தடவித் தேடு, இருட்டிலே தடவிப்பர் கண்மூடிக்கொண்டு துழாவித் தேடு.
gros de naples
n. (பிர.) கனமான பட்டுத் துணி வகை.
grosbeak
n. கொட்டைகளை உடைத்துத் தின்னவல்ல உறுதியான அலகுடைய சறு பறவை வகை.
groschen
n. செர்மனி நாட்டின் வழக்கொழிந்த சிறு வெள்ளி நாணயம்.
gross
n. பன்னிரெண்டு உருப்படிகளடங்கிய தொகுதிகளின் பன்னிரண்டு, நுற்று நாற்பத்துநாலு.
grot
n. (செய்,) குகை. குகைபோன்ற உட்கவிடம்.
grotesque
n. விசித்திரன்ன கற்பனைக் கதம்பம், ஓவிய சிற்பத் துறைகளில் மனித விலங்கு செடி கொடிகளின் முரண்கலவைப் பண்பு, கோமாளித்தனமான உருவம், (பெ.) பொருந்தாக் கற்பனைக் கூளமான, இயற்கையிலில்லாத, முரண்கலவையான, விசித்திரமான, கோமாளித்தனமான, நகைப்புக்கிடமான ஒவ்வாத.
grotto
n. அழகுச் செறிவாக குகை, கண்கவர் வனப்புடைய செயற்கைக் குகை.
grouch
n. (பே-வ.) முனகுபவர், மனக்குறையுடையவர், மனக் குறைவால் மூலையில் சோர்ந்திருத்தல் (வினை) முனகு, முணுமுணு.