English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
gradual
-1 n. ரோமன் கத்தோலிக்கக் கோயிலில் திருமுகப் பகுதிக்கும் நற்செய்திப் பகுதிக்கும் இடையே எழுப்பப்படும் எதிர்க் குரற்பாடல் பகுதி, எதிர்க்குரற் பாடற் பகுதிகள் அடங்கிய சுவடி.
gradually
adv. படிப்படியாக, பைய.
graduand
n. பல்கலைக்கழகப் பட்டம் பெறவிருப்பவர்.
graduate
n. பட்டதாரி, கல்விப்பட்டம் பெற்றவர், வேதியியலாரின் அளவு குறிக்கப்பட்ட கண்ணாடிக்கலம், (வினை) கல்விப்பட்டம் பெறு, பட்டதாரியாகு, துறையின் முழுத்திறமைக்குரிய தகுதி பெறு, நுண் கூறுகளாக அளவின் அடையாளமிடு, படிநிலைகளாக வரிசைப்படுத்து, குறிப்பிட்ட படிநிலை வீதப்படி வரிவிதிப்பை வகுத்தமை, படிப்படியாக மறைவுறு, படிப்படியாக மாறு, நீர்வற்றச் செய்வது மூல மாகக் கரைசலைக் செறிவுபடுத்து.
graduated
a. நுண்படிகளாக அளவுக்கூறுகள் குறிக்கப் பெற்ற.
graduation
n. நுண்படியளவிடுதல், நுண்படியளவு நிலை, வண்ணத்தின் படிநிலை இழைவு, படியளவுக் குறியீடு, படியளவுக் குறி, படிப்படியாக ஆவியாவதற்குக் காற்றுப்படவைத்திருக்கை, பட்டத் தகுதிப்பேறு.
graduator
n. ஒழுங்கான இடைவெளிகள் விட்டுக்கோடுகளை வகுப்பதற்கான கருவி.
gradus
n. கிரேக்க அல்லது லத்தீன் யாப்பிலக்கணச் சொற்களஞ்சியம்.
Graecism
n. கிரேக்க பண்பு, கிரேக்க சொல்மரபு, கிரேக்க நடை, கிரேக்க மரபைப் பின்பற்றியமைத்தல், கிரேக்க மாதிரிப் போலி.
Graecize
v. கிரேக்க பாணியில் அமை, கிரேக்க இயல்பு அளி, கிரேக்க வடிவங்கொடு, கிரேக்கர் சார்பாயிரு, கிரேக்கர்களைப் பின்பற்றிநட.
Graeco-Roman,
பண்டைய கிரீஸ்-ரோம் நாடுகள் சார்ந்த, ரோம ஆதிக்கத்தின்கீழ்த் தொடர்ந்து பயின்ற கிரேக்க கலைப்பாணிக்குரிய.
graffti, n. graffito
என்பதன் பன்மை.
graffto
n. தொல்பழங்கால நகரச் சுவர்களில் சுரண்டு வரிகளால் அமைக்கப்பட்டுள்ள சித்திர வடிவம், சுஹ்ர் அடித்தளத்தின் பல்வண்ணங் காட்டும் சுரண்டு வரி ஓவிய ஒப்பனை.
graft
-1 n. ஒட்டுச்சினை, (மரு.) அறுவையில் இடம் மாற்றிப் பொருத்திவைக்கப்பட்ட உயிரிழைமம், ஒட்டுமுறை, ஒட்டுச்சினை, செருகப்படுமிடம், (வினை) ஒட்டுச் சினையைச் செருகிவை, பொருத்தி இணை, இரண்டறப் பிணை, (மரு.) அறுவையில் உயிரிழைமத்தை இடம் மாற்றிப் பொருந்தவை, (கப்,) தாழ்ப்பாள் வளையத்தை இழைக்கயிறு வரிந்து இறுக்கு.
grafting
n. ஒட்டு, ஒட்டவைத்தல்.
grafting-clay, grafting-wax
n. ஒட்டுச்சினை இணைக்கப் படுமிடத்தை மூடுவதற்கான பொருள்.
grahpics
n. விளக்கக் குறிவரைக் கணிப்பியல்.
grail
-2 n. திருக்குருதிக்கலம், இயேசுநாதர் சிலுவையேற்றத்தின் பின் அஹ்ர் குருதி சேமிப்புக் கலமாக அமைந்த இறுதியுணவின் வட்டில்.