English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
gossamer
n. சிம்பி நுல், காற்றில் ஊசலாடும் மெல்லிழைச் சிலந்தி நுல், புதர்களுக்கிடையில் படரும் இலேசான மென்படலப் பொருள், நொய்ம்மைப் பொருள், நொய்தான மெல்லிய வலைத்துணி, (பெ.) இலேசான, நொய்தான.
gossip
n. பயனில பேசுபவர், செய்தி பரப்புகிறவர், வம்பர், வீண்பேச்சு, வதந்தி, துழாவாரம், மன்ம்போன போக்கிலான வரம்பற்ற பேச்சு, பழிமொழி, (வினை) வறுமொழி பேசு, வாய்க்கு வந்தன கூறு, வீணுரையாடுட, மனம்போன போக்கில் எழுது.
got-up
a. செயற்கையான, போலியான, இட்டுக்கட்டப்பட்ட, போலிப் பகட்டான, ஏமாற்றும் நோக்கத்துடன் போலியாகப் புனையப்பட்ட.
got, v..,get
என்பதன் இறந்தகால முடிவெச்சம்.
Goth
n. முற்காலச் செர்மன் இனத்தவர், கல்வியறிவும் நாகரிகமும் அற்றுக் கலைபொருள்களை அழிக்கும் முரடர்.
Gotham
n. கற்பனைக் கோமாளி நகரம்.
Gothamist, Gothamite
பேதை, படித்தவன்போல் நடிக்கும் முட்டாள்.
Gothic
n. முற்காலக் கிழக்குச் செர்மானிய இனத்தவரின் மொழி, இடைநிலைக்காலக் கூர்மாடச் சிறபப் பாணி, அச்சுருப் பழம்படிவ வகை, (பெ.) கிழக்குச் செர்மனிய இனத்தவருக்குரிய, கிழக்குச் செர்மனிய இன மொழிக்குரிய,(க-க.) இடைநிலைக்காலக் கூர்மாடச் சிற்பப்பாணியில் அமைந்த, பண்படாத, முரடான, அச்சுருப் பழம்படிவ வகையில் அமைந்துள்ள, பழங்கால ஆங்கில அச்சுருப் படிவத்தில் உள்ள.
Gothicism
n. முற்காலக் கிழக்குச் செர்மானிய இன மொழி மரபு, இடைநிலைக் காலக் கூர்மாடச் சிற்பப்பாணி, பண்படாப் பழக்க வழக்க நிலை, முரட்டுப் பண்பு.
gouache
n. (பிர.)நீரில் அரைத்துப் பசையைக் கொண்டும் தேனைக்கொண்டும் அடர்த்தியாக்கப்பட்ட மந்தமான வண்ணங்களில் படந்தீட்டும் முறை, மந்தமான வண்ணங்களில் தீட்டப்பட்ட ஓவியம்.
goud-worm
n. பூசனி விதையை யொத்த ஈரல் கிருமிவகை.
Gouda
n. ஆலந்து நாட்டுப் பாலேட்டுக்கட்டி வகை.
gouge
n. நகவுளி, தச்சு வேலையிலும் அறுவை மருத்துவத்திலும் பயன்படுத்தப்படும் உட்குழிவான அலகுடைய உளிவகை, (வினை) நகவுளியால் வெட்டு, நகவுகளியால் தோண்டு, நகவுகளியால் தோண்டியெடு, கண்ணைத் தோண்டியெடு.
Goulard
n. ஈயத் துணைக்காடிகக் கரைசலடங்கிய கழுவுநீர் மருந்து.
goulash,
இறைச்சித் துண்டுகளையும் காய்கறிகளையும் வதக்கிக் சமைக்கப்பட்ட உண்டிவகை, மறுவகை பிரிப்பு, சீட்டாட்ட வகையில் வரிசைப்படுத்தப் படுத்தப்பட்டுள்ள சீட்டுக்களை வகைப்படுத்தி மீண்டும் பகிர்ந்து கொடுக்கும் முறை.
gound-annual
n. (சட்.) நிலத்திற்கான ஆண்டுக்கட்டணம்.
gourd
n. சுரைக் கொடியினம், சுரையினக் கொடியின் காய், சுரைக்காய், சுரைக் குடுக்கை.
gourdy
a. கால்களில் வீக்கங் கண்டுள்ள.
gourmand
n. வயணமாகச் சாப்பிடுவதில் விருப்பமுள்ளவர், நல்ல சாப்பாட்டினை மதிப்பீடுபவர், பெருந்தீனிக்காரர் (பெ.) பேருண்டியரான, பெருந்தீனி கொள்கிற, தீனிவிருப்பமிக்க.