English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
dashboard
n. சேற்றுக்காப்பு, குதிரை வண்டி வலவனுக்கெதிரில் குதிரைக் குளம்புகளால் தெறிக்கப்படும் மண் முதலியற்றைத் தடுப்பதற்காக அமைந்துள்ள பலகை அல்லது திரை, கருவிதட்டு, உந்து வண்டியில் அல்லது வான ஊர்தியில் கருவிகளை எடுத்துச் செல்வதற்கான பலகை.
dasher
n. மோதுபவர், மோதுவது, விரைந்து செல்பவர், விரைந்து செல்வது, பகட்டுக்காரன், வெண்ணெய் கடையும் மத்து.
dashing
a. ஊக்கமுள்ள, பகட்டான, நவநாகரிகத் தோற்றமுடைய.
dastard
n. கோழை, கீழ்மகன், எத்துவேலைக்காரன், தன்னை இடருக்குட்படுத்திக்கொள்ளாமல் கொடுஞ்செயல் புரிபவன், (பெயரடை) இடரினின்றும் ஒதுங்குகிற, கோழைத்தனமான.
dasyure
n. குட்டிக்கான வயிற்றுப்பையுடைய ஆஸ்திதேரியாவிலுள்ள ஊனுணி விலங்கின வகை.
data
n. pl. தரப்பட்டவை, வாத ஆதாரக் கூறுகள், தெரிபொருட்கூறுகள். உய்த்துணர உதவும் மூலகாரணப் பகுதிகள், மெய்ச் செய்திகள், செய்திக் குறிப்புகள்,
Data processing
விவர வகைப்பாடு, தகவல் தொகுப்பகம்
dataller
n. நாட்கூலியாள்.
date
-1 n. பேரீச்ச மரம், பேரீச்சம் பழம்.
date-line
n. தேதி எல்லை, தேதிக்கோடு, உலக ஒப்பந்தப்படி ஏறத்தாழ 1க்ஷ்0டிகிரி நிரை கோட்டினுடாகச் செல்லுகிற நாள் கணிப்புத் தொடக்கக் கோடு.
date-palm
n. பேரீச்ச மரம்.
date-plum
n. கருங்காலி இன மரத்தின் பழம்.
date-shell
n. சுண்ணக்கல் பாறையைத் துளைத்து வாழும் உயிரினத்தின் பேரீச்சம் பழ வடிவுள்ள தோடு.
dateless
a. தேதியற்ற, கால எல்லையற்ற, முடிவில்லாத, தொல்பழமையான, நாள் ஈடுபாடுகளில்லாத.
dater
n. தேதி குறிப்பவர், தேதி பொறிக்கும் முத்திரை.
dative
n. கொடைப்பொருள் வேற்றுமை, நான்காம் வேற்றுமை, நான்கனுருபு ஏற்ற சொல், (பெயரடை) கொடுக்கப்பெற்ற, நியமிக்கப்ற, (இலக்) மறைமுப்ச் செயப்படுபொருளைக் குறிப்பிடுகிற, நான்காம் வேற்றுமைக்குரிய.
datum
n. தெரிந்திருக்கிற அல்லது ஒப்புக்கொள்ளப்பட்ட செய்தி, பிறவற்றை ஊகித்தறிவழ்ற்கிடந்தருமாறு கொடுக்கப்பட்ட செய்தி, அளவுகோல் முதலியவற்றின் நிலையான தொடக்கப்புள்ளி, மெய்ச்செய்திகள் தொகுதி, செய்திக் குறிப்புகளின் தொகுதி.
daturine
n. ஊமத்தைச் சத்து, செடிவகையிலிருந்து கிடைக்கும் வெடியக் கலப்புடைய நஞசு வகை.