English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
dim
a. மங்கலான, ஒளிகுறைந்த, பார்வை மங்கிய, தௌிவற்ற, (வினை) இருட்டாக்க, தௌிவற்றதாக்கு, புலப்படாது செய், மங்கலாகு.
dime
n. அமெரிக்க வெள்ளிநாணயத்தில் பத்தில் ஒரு பகுதி, பத்து அமெரிக்கக் காசு.
dimension
n. உருவளவை, அளவுக்கூறுகளின் தொகுதி, நீள அகல உயர அளவுத்தொகுதி, உருவளவைக்கூறு, நீள அகல உயர முதலியவற்றுள் ஒன்று, பருமன், பரும அளவு, பருமானம், நீள அகல உயரம், பரப்பு, அகற்சி, நீள அகலம், தொரெண் கூறுகளில் தெரிவரா உருக்களின் பெருமடிப்பெருக்கம்.
dimensional
a. உருவளவை சார்ந்த, பரும அளவு குறித்த, அளவுக்கூறுகளுக்குரிய.
dimerous
a. இருபகுதிகள் கொண்ட, (தாவ) ஒரு சுற்றில் ஈருறுப்புக்களுடைய, (வில) இரு பொருத்துக் கணைக்காற் பகுதியுடைய.
dimeter
n. இருசந்தச் செய்யுள்., சீரிணைப்பு இரண்டு கொண்ட செய்யுள், (பெயரடை) சீரிணைப்பு இரண்டு கொண்ட.
dimetric
a. மணி உருக்களில் நாற்கோண வடிவமுடைய.
dimidiate
a. இரு பாதிகளாகப் பிரிக்கப்பட்ட, இரு சம கூறுகளாகப் பிளக்கப்பட்ட, பாதிபோன்ற உருவுடைய, ஒரு பாதி மட்டும் வளர்ச்சியுறள்ற, ஒருபுறம் பிளவுற்ற, (வினை) (கட்) உருப்பாதி குறி.
diminish
v. குறைபடுத்து, குறைவாக்கு, ஒருகூறு பிரித்தெடுத்துக் குறை, வன்மை குறைவு செய், தாழ்தது, தரக்குறைவு உண்டுபண்ணு, குறைபடு, குறுகு, தோற்றத்தில் சிறிதாகு, வலுக்குறைபடு, தணி, தாழ்வுறு, கூம்பி ஒரு முனைப்படு.
diminished
a. குறைவாக்கப்பட்ட, சிறிதாக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, கீழ்ப்படுத்தப்பட்ட, செருக்கக் குலைக்கப்பட்ட, (இசை) முழுநிறைவற்ற மைய இசையுள்ள.
diminishing
a. குறைக்கிற, குறைபடுகிற.
diminuendo
n. (இசை) படிப்படியான குரல் துணிவு.
diminution
n. குறைவு, குறுக்கம், இழிவு, குறைபரம் அளவு.
dimissory
a. வேறு ஆட்சி வரம்பிற்கு அனுப்ப இசைவளிக்கிற,. ஆட்சியெல்லை கடந்து புறப்பட உத்தரவு கொடுக்கிற.
dimity
n. முனைப்பிழையுடன் சித்திரவேலைப்பாடு கொண்ட வெண்மையான முரட்டுப் பருத்தித்துணி வகை.
dimmer
n. ஒளியின் போக்கினை ஒழுங்குபடுத்தும் ஏற்பாடு அல்லது அமைப்பு.
dimorphic
a. இனவகையில் இரு திரிபுருப் படிவங்களையுய, பொருள் வகையில் இரு மணியு படிவங்களையுடைய.
dimorphism
n. (உயி) இனவகையில் இருதிரிபுருப் படிவங்களையுடைமை, (வேதி) இரு மணியு படிவங்களையுடைமை.
dimple
n. கன்னத்தில் விழும் சிறுகுழி, நீரின் சிறுசுழி.
din
n. பேலொலி, இரைச்சல், (வினை) காது செவிடுபடும்படி ஓசையுண்டாக்கு, பேரொலியெழுப்பித் தொந்தரை கொடு, பலவந்தமாகக் காதிற் புகுத்து, வபடிவாதமாகப் புகுத்து.