English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
delirium
n. சன்னி, வெறிப்பிதற்றலான நிலை.
delitescence
n. மறைந்துள்ள நிலை.
delitescent
a. உள்ளுறைவாக மறைந்திருக்கிற.
deliv,ery
பிள்ளைப்பேறு, ஒப்படைப்பு, அஞ்சல் வகையில் எங்கும் சென்று வழங்கதல், அஞ்சல்காரரின் வாடிக்கைச் சுற்றுவட்டச் செலவு, பந்தெறி, குண்டுழச்சு, நீரின் வெளியோட்டம், எறிமுறை, வீச்சு முறை, பேருரை முழக்கம், பேச்சு முறை, ஒலிப்பு முறை, வார்ப்பிலிருந்து அச்சின் பிரிப்பு, (சட்) முறைமை வாய்ந்த பொருள் ஒப்படைப்பு,*,
deliv;er
v. விடுவி, தீங்கினின்றும் தப்புவி, இடர்நீக்கிக் காப்பாற்று, அச்சத்திலிருந்து தவிர்த்தாளு, பிள்ளைபெறு, சுமை இறக்கிவிடு, வழங்கு., அஞ்சல் வகையில் எங்கும் சென்றுகொடு, பொருளை ஒப்புவி, கணக்குத் தீர்த்துக்கொடு, முறைப்படி ஒப்படைத்துவிடு, செலுத்து, தீர்ப்பை வெளியிடு, கருத்தைத் தெரிவி, பேருரையினை வழங்கு.
deliverance
n. விடுதலை, மீட்பு, காப்பு, பிள்ளைப்பேறு, தீர்ப்புத் தெரிவிப்பு, அதிகாரமுறையான அறிவிப்பு.
deliverer
n. காப்பவர், மீட்பவர், விடுவிப்பவர்.
Dell,a Crus,can
பிளாரென்ஸிரென்ஸிலுள்ள முற்கால இத்தாலிய கலை இலக்கியக் குழு உறுப்பினர், (வினை) இத்தாலியக் கலை இலக்கியக் கழுவினுக்குரிய.
delouse
v. பேனை ஒழி, நிலவெடிகுண்டுகளை முற்றிலும் அகற்று.
Delphian, Delphic
பண்டைக் கிரேக்கரின் பேர்போன 'டெல்பி' என்ற இடத்துக்குரிய, வருவதுரைக்கும் 'டெல்பி' பாவைக்குரிய, பொருள் விளக்கமில்லாத, புதிரான, இருபொருள் தருகிற.
delphinium
n. மஞ்சள்நிறக் கிண்ணவடிவுள்ள மலர்ச் செடிகளின் இனம்.
delphinoid
n. கடல்வாழ் இயல்புடைய பாலுணி உயிரினக் குடும்பம், (வினை) கடல்வாழ் இயல்புடைய பாலுணி உயிரினக் குடும்பம் சார்ந்த.
delta
n. ஆற்றின் கழிமுக நடுவரங்கம், கிரேக்க நெடுங்கணக்கில் முக்கோண வரிவடிவமுடைய நான்காவது எழுத்து.
deltaic
a. ஆற்றின் கழிமுக அரங்கத்தைச் சார்ந்த.
deltoid
a. முக்கோண வடிவுடைய.
delude
v. ஏன்ற்று, மயக்கு.
deluge
n. பெருவெள்ளம், ஊழி வெள்ளம், ஊழி இறுதிக் காலத்தில் பேரழிவுதரும் நீரெழுச்சி, (வினை) பெருவெள்ளத்தில் ஆழ்த்து.
delusion
n. மருட்சி, மயக்கம், ஏமாற்றம்.
delusional
a. மசிக் குரிய, மாயத்தோற்றங்கட்கு இரையான.