English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
deckle-edge
n. வெட்டப்படாத செப்பமற்ற தாள் விளிம்பு.
declaim
v. முழககமிடப் பேசு, தாக்கிப்பேசு, உவ்ர்ச்சியுல்ன் முழங்கு, பேருரை பயிலு.
declamation
n. கலைத்திறன் வாய்ந்த சொற்பொழிவு, பகட்டான பேருரை கடடமைவான மேடைப்பேச்சு.
declamatory
a. உணர்ச்சி வசப்படுத்துகிற, உரத்துப் பேசுகிற, சொற்பகட்டு வாய்ந்த.
declarable
a. அறிவிக்கத்தக்க, விளம்பரப்படுத்தும் திறமுடைய, மெய்ப்பிக்கப்படவல்ல.
declarant
n. வாக்குமூலம் கொடுப்பவர், உறுதி கூறுபஹ்ர்.
declaration
n. சாற்றுதல், அறிவித்தல், அறிவிக்கப்பட்ட அறிக்கை, விளம்பரம், உறுதிமொழி, எழுத்துமூல அறிவிப்பு, உறுதி ஆவணம், (சட) ஸ்காத்லாந்து முறை மன்றத்தில் கைதி குற்றநடுவர்முன் கொடுக்கும் வாக்குமூல அறிக்கை, (சட்) வாதி எதிர்வாதிமீது சாட்டும் வழக்கு விவர அறிவிப்பு.
declaratory
a. விளக்கமான, விரிவான,
declaratory act
தௌிவில்லாத அல்லது சச்சரவுக்குரிய சட்டப்பகுதியை விளக்குவதற்கான சட்டம்.
declare
v. சாற்று, அறிவி, தெரிவி, பலரறியக் கூறு, விளம்பரப்படுத்து, வலியுறுத்திக் கூறு, உறுதியாகக் கூறு, முழு விவஜ்ம் அறிவி, சீட்டாட்ட வகைகளில் கையிருப்புக் காட்டி வெற்றி அறிவி, சீட்டாட்ட வகைளில் கையிருப்புக் காட்டி வெற்றி அறிவி, துபுத் தெரிவி, துபிலா ஆட்ட்ங்கூறு, அறிவிப்புச் செய், முடிவு தெரிவி, உளச்சார்பு வெளிப்படக் கிளந்துரை, மரப்பந்தாட்டத்தில் பத்துப் பேரின் முழு ஒழிவின் முன்பே தானாக ஆட்டத்தை முடி,
declare off
கைவிடு, துற, பின்வாங்கு திரும்பப் பெற்றுக்கொள்.
declared
a. முன்பே உறுதி கூறப்பட்ட, ஒத்துக்கொள்ளப்பட்ட.
declaredly
adv. கூறப்பட்ட உறுதிப்படியே.
declarer
n. விளம்பரம் செய்பவர், அறிவிப்பாளர், உறுதி கூறுபவர், சீட்டாட்டத்தில் வெற்றகோருபவர்.
declase
a. தரமிழந்த, படியிறக்கமுற்ற, சாதிகெட்ட,
declension
n. நேர்நிலையினின்றும் பிறழ்ச்சி, சாய்வு, சரிவு, கோட்டம், வீழ்ச்சி, இறக்கம், (இலக்) வேற்றுமைப் பாகுபாடு, வேற்றுமையுருபேற்கும் ஒரே வகைச் சொற்கள், வேற்றுமை வரிசை.
declinable
a. வேற்றுமைகளை ஏற்றுச் சொல் மாறுபடக் கூடிய, வேற்றுமையுருபுகளை ஏற்றுத் திரிபுறுகிற.
declinant
a. வால் பக்கம் கீழே தொங்குகிற.
declination
n. கீழ்நோக்கிச் சரிதல், கீழ்நோக்கிய சரிவு, நெறி விலகுதல், பிறழ்ச்சி, கோட்டம், கவராயத்தின் முனைப் பிறழ்ச்சிக் கோண அளவு, (வான்) வான் கோள நடுநேர் வயலிருந்து விண்மீனுக்குரிய கோணத் தொலைவு, வான் கோள நேர் வரை.
decline
n. இறக்கச்சரிவு, பிறழ்வு, விலகுதல், நலுவு, தேய்வு, படிப்படியான குறைபாடு, அழிவு, நல அழிவு, தரங்கெடல், உடல்நலக்கேடு, தளர்ச்சி, ஊக்கங்கெடல், ஈரல் காசம், எலும்புருக்கி நோய், விலையிறக்கம், கதிரவன் சாய்வு, வாழ்வின் மாலைப்போது, (வினை) கீழ்நோக்கிச் சரியச்செய், சாய், சரிவிறக்கமுறு, வளைவுறு நொய்வாகு, தளர்வுறு, நலிவுறு,. முடிவை அணுகு, குறைவுறு. தேய்வுறு, ஊக்கமிழ, மன உரங்கெடு, விட்டுவிலகு, திரும்பு, மறு, ஏற்க முடியாதென்று தெரிவி, (இலக்) வேற்றுமை உதிரிபுகள் எடுத்துரை, வேற்றுமையில் உருத்திரிபுறு.