English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
deathless
a. இறவாத, எக்காலத்துமுள்ள.
deathlike
a. சாவுக்குரிய, சாவினைப் போன்ற.
deathly
a. கொலைக்குரிய, உயிர் போக்குவதற்குரிய, சாவினைப் போன்ற.
deathroll
n. இறந்தவர் பட்டியல்.
deaths-head
n. மனித மண்டையோடு, மனித மண்டையோட்டு உருவம், மண்டையோட்டின் உருவமைந்த கைவிரல் மோதிரம்.
deaths-head moth
மார்புக்கூட்டின் பின்புறத்தில் மண்டையோட்டைப் போன்ற அடையாளமுள்ள மிகப் பெரிய ஐரோப்பிய விட்டில் பூச்சி வகை.
debacle
n. ஆற்றில் பனிக்கட்டி உடைபாடு, இடிவு தகர்வு, நெருக்கடி நெரிசல், கூட்டத்தின் வேக மிதித்தடிப்புப் போக்கு, நெரித்து மிதித்துத் தள்ளிக்கொண்டு போதல், அரசியல் தகர்வு, படுவீழ்ச்சி, (மண்) பாறைகளையும் சிதை கூளங்களையும் வாரி அடித்துக்கொண்டு வ பெருநீர்ப் பெருக்கு.
debark
v. கப்பலிலிருந்து இறக்கு, கரையில் இறங்கு.
debarrass
v. மலைவகற்று, சிக்கலினின்றும் விடுவி, தடை விலக்கு.
debase
v. மதிப்பில் தாழ்த்து, தரத்தில் குறைவுபடுத்து, ஒழுக்கத்தில் இழிவுபடுத்து, நாணயத்தைக் கலப்படம் செய்து மதிப்புக் கெடு.
debased
a. தாழ்ந்த, இழிந்த, பதமிழந்த, (கட்) தலைமறிக்கப்பட்ட.
debasement
n. தாழ்த்துதல், தாழ்வு, இழிவு, சிறுமை.
debatable ground
இருதிறத்தார் தமதெனப் போராடும் எல்லை நிலப்பகுதி, ஐயப்பாட்டுக்குரிய இடை எல்லைப்பகுதி.
debatabler
a. வாதத்துக்கிடன்ன, வாதத்துக்குரிய, இரு தரப்பிலிருந்து விவாதிக்கப்படத்தக்க, மறுத்துரைக்கத்தக்க,
debate
n. வாதம், சொற்போர், வாய்ச்சண்டை, வாக்கு வாதம், வாதாட்டம், பலதிசைக் கருத்துமோதல், சர்ச்சை, பொது விவாதம், (வினை) வாதிடு, தருக்கம் செய், வாதாடு, வாய்ச்சண்டையிடு, வாதாட்டத்தில் கலந்துகொள், எதிர்த்துக் கூறு, கலந்தாராய், ஆழ்ந்து சிந்தி, அமைந்தாய்வு செய்.
debater
n. தர்க்கம் செய்பவர், வாதத்திறமையுடையவர்,
debauch
n. மட்டற்ற குடிவெறி, ஓஸ்க் குடிப்பழக்கம், பலனுகர்ச்சி வெறி, காமவெறி, ஒழுக்கக்கேடு, (வினை) நெறிபிறழச் செய், கடமை திறம்பச்செய், ஒழுக்கங் கெடச்செய், இழிந்த புலனுகர்ச்சியில் தோய்வி, சிற்றின்பத்தில் புரளுவி, கீழ்மைப்படுத்து, இழிஞனுக்கு, குடிப்பழக்கழூட்டு, கற்பழி, மட்டு மீறிய புலனுகர்ச்சி மேற்கொள்.
debauched
a. சிற்றின்பத்தில் அந்திய, ஒழுக்கங்கெட்ட, வஜ்ம்பிகந்த நடையுடைய.
debauchee
n. பரத்தன், பரத்தை,
debauchery
n. வரம்பு மீறிய ஒழுக்கக்கேடு, சிற்றின்பத்தோய்வு, மட்டுமீறிய குடிப்பழக்கம்.