English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
day-school
n. நாள்முறைப்பள்ளி. இரவுப்பள்ளியாகவோ தங்கல் விடுதிப் பள்ளியாகவா நடத்தப்பெறாமல் பகற்பொழுதிற்குள்ளாக மட்டும் நடைபெறும் பொதுமுறைப் பள்ளி.
day-sight
n. மாலைக்கண். அந்திமாலை.
daygirl
n. வீட்டில் தங்கிப் பள்ளி வந்து படிக்கும் மாணவி.
daylight
n. பகல் வெளிச்சம், பட்டாங்கநிலை, பலரறியும் தன்மை, விடியற்போது, வெற்றிடம், இடைவெளி.
daylight-saving
n. விளக்குகள் ஏற்ற வேணடிய அவசியமிராதவாறு கோடை காலத்தில் கடிகாரமுள்ளைத் தக்கபடி முன்னும் பின்னும் மாற்றிக் கற்பனை மணி நேரத்தின் மூலம் பகலொளியைப் பயன்படுத்திக்கொள்ளுதல்.
daylong
a. நாள்முழுவதும் நீடித்திருக்கிற, (வினையடை) நாள் முழுவதும்.
daymark
n. ஒளியேற்றிக் காட்டப்பெறாத கடல் அறிகுறி.
days of grace
சலுகை நாட்கள், கெடுக் கடந்தும் உண்டி முதலியவைகளுக்குப் பணம் கொடுக்க இசைவளிக்கப்பட்ட காலம், அருளிசைவுக் காலம்.
daysman
n. வழக்கை விசாரிப்பதற்கு நாள் குறிப்பவர்.
dayspring
n. விடியற்காலம்.
daze
n. குழப்பம். திகைப்பு, மனக்கலக்கம், பெருவியப்பு, (வினை) உணர்வு மழுங்கச்செய், உணர்ச்சியறச்செய், திகைப்பூட்டு, கண்கூசச்செய்.
dazzle
n. மினுமினுப்பு, பகட்டு, பளபளப்பு, கண்கூசப் பண்ணும் பொருள், (வினை) ஒளிமிகுதியால் கண்கூசச்செய், மேம்பாடு காட்டிப் பகட்டுஇ திறமையால் குழப்பு, அழகுத் தோற்றதழ்ல் மிரட்சியுறச்செய், பெருமையால் திகைக்கவை, அளவினால் பொறி கலங்கவை.
dazzle paint
கப்பலின் மாதிரி-போக்கு முதலியஹ்ற்றை எதிரிகள் அறியாவண்ணம் கப்பலுக்குச் செய்யப்பட்ட வண்ணப்பூச்சு.
dazzle-painting
n. மாறாட்ட வண்ணப்பூச்சு, உருமறைத்துப் பிறிதுருக்காட்டுவதற்காக முஜ்ண் புணைவாக வண்ணம் பூசுதல்.
dazzlement
n. மிக்கொளியால் கண்ணொளி மயங்கச் செயதல், திகைப்பூட்டல்.
dcor
n. திரை அரங்கொப்பனை, அரங்க அமைப்பு, செயற்கை அறை அமைப்பு, திரை ஓவிய அமைதி.
de facto
a. மெய்யான, சட்டப்படி எவ்வாறாயினும் நடப்பின் படி உண்மையான, (வினையடை) சட்ட உரிமையின்படி எப்படியாயினும் மெய்ந்நடப்பில்.