தத்ர தம் புத்திஸம்யோகம் லபதே பௌர்வதேஹிகம்। யததே ச ததோ பூய: ஸம்ஸித்தௌ குருநந்தந॥ 6.43 ॥ |
குரு வம்சத்தில் பிறந்தவனே ! முற்பிறவியில் கிடைத்த அறிவும் அந்த பிறவியில் அவனுடனேயே இருக்கிறது. எனவே நிறைநிலையை அடைவதற்கு அதிக முயற்சி செய்கிறான்.
பூர்வாப்யாஸேந தேநைவ ஹ்ரியதே ஹ்யவஷோ அபி ஸ:। ஜிஜ்ஞாஸுரபி யோகஸ்ய ஷப்தப்ரஹ்மாதிவர்ததே॥ 6.44 ॥ |
அவன் முயற்சி செய்யாவிட்டாலும் முற்பிறவியின் பயிற்சியாலேயே இழக்கபடுகிறான். யோகத்தின் ஆரம்ப நிலை சாதகன் கூட வினைபயனை கடந்து விடுகிறான்.
ப்ரயத்நாத்யதமாநஸ்து யோகீ ஸம்ஷுத்தகில்பிஷ:। அநேகஜந்மஸம்ஸித்தஸ்ததோ யாதி பராம் கதிம்॥ 6.45 ॥ |
மிகவும் பாடுபட்டு சுயமுற்சியுடன் சாதனைகளில் ஈடுபடுகின்ற யோகி அதன் பிறகு குறைகள் நீங்க, பல பிறவிகளில் தொடர்ந்த முயற்சிகளின் நிறைவை பெற்று மேலான நிலையை அடைகிறான்.
தபஸ்விப்யோ அதிகோ யோகீ ஜ்ஞாநிப்யோ அபி மதோ அதிக:। கர்மிப்யஷ்சாதிகோ யோகீ தஸ்மாத்யோகீ பவார்ஜுந॥ 6.46 ॥ |
தியான யோகி தபஷ்விகளை விட அறிஞர்களை விட செயலில் ஈடுபடுபவர்களை விட மேலானவான், எனவே அர்ஜுனா யோகி ஆவாய்.
யோகிநாமபி ஸர்வேஷாம் மத்கதேநாந்தராத்மநா। ஷ்ரத்தாவாந்பஜதே யோ மாம் ஸ மே யுக்ததமோ மத:॥ 6.47 ॥ |
யார் செயல்திறன் கலந்த நம்பிக்கையுடன் என்னை வழிபடுகிறானோ, அவன் எல்லா யோகிகளையும் விட மேலானவன் என்பது என் கருத்து.
ஓம் தத்ஸதிதி ஸ்ரீமத் பகவத்கீதாஸூபநிஷத்ஸு ப்ரஹ்மவித்யாயாம் யோகஷாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுநஸம்வாதே ஆத்மஸம்யமயோகோ நாம ஷஷ்டோ அத்யாய:॥ 6 ॥ |
ஓம் தத் ஸத் - ப்ரம்ம வித்யை, யோக ஸாஸ்த்ரம், உபநிஷத்து எனப்படும் ஸ்ரீமத்பகவத்கீதையாகிய ஸ்ரீக்ருஷ்ணனுக்கும் அர்ஜூனனுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடலில் 'ஆத்ம ஸம்யம யோகம்' எனப் பெயர் படைத்த ஆறாவது அத்தியாயம் நிறைவுற்றது.