ஸங்கல்பப்ரபவாந்காமாம்ஸ்த்யக்த்வா ஸர்வாநஷேஷத:। மநஸைவேந்த்ரியக்ராமம் விநியம்ய ஸமந்தத:॥ 6.24 ॥ ஷநை: ஷநைருபரமேத் புத்த்யா த்ருதிக்ருஹீதயா। ஆத்மஸம்ஸ்தம் மந: க்ருத்வா ந கிம்சிதபி சிந்தயேத்॥ 6.25 ॥ |
சங்கல்பதிலிருந்து தோன்றுகின்ற ஆசைகள் அனைத்தையும் முற்றிலும் விட்டு, புலன்களை மனத்தால் எல்லா பக்கங்களிலிருந்தும் நன்றாக கட்டுபடுத்தி , உறுதியுடன் கூடிய புத்தியால் மனத்தை ஆன்மாவில் நிலைபெற செய்து சிறுது சிறிதாக ஓய்வு பெற வேண்டும் . வேறு எதையும் நினைக்க கூடாது.
யதோ யதோ நிஷ்சரதி மநஷ்சம்சலமஸ்திரம்। ததஸ்ததோ நியம்யைததாத்மந்யேவ வஷம் நயேத்॥ 6.26 ॥ |
அலைபாய்வதும், ஒரு நிலையில் நிற்காததுமான மனத்தை, அது எந்தெந்த காரணங்களால் அலைகிறதோ, அவற்றிலிருந்து மீட்டு ஆன்மாவில் கொண்டு வர வேண்டும்.
ப்ரஷாந்தமநஸம் ஹ்யேநம் யோகிநம் ஸுகமுத்தமம்। உபைதி ஷாந்தரஜஸம் ப்ரஹ்மபூதமகல்மஷம்॥ 6.27 ॥ |
மிகவும் சாந்தமான மனத்தை உடைய, ரஜோ குணத்தின் வேகம் தணிந்த, தூய, இறை நிலையில் இருக்கின்ற இத்தகைய தியான யோகியை தான் மிக மேலான இன்பம் வந்தடைகிறது.
யுஞ்ஜந்நேவம் ஸதாத்மாநம் யோகீ விகதகல்மஷ:। ஸுகேந ப்ரஹ்மஸம்ஸ்பர்ஷமத்யந்தம் ஸுகமஷ்நுதே॥ 6.28 ॥ |
இவ்வாறு எப்போதும் ஆன்மாவில் ஒருமைப்பட்டு புனிதம் பெற்ற யோகி, இறைவனின் தொடர்பால் வருகின்ற முடிவற்ற இன்பத்தை எளிதில் அடைகின்றான்.
ஸர்வபூதஸ்தமாத்மாநம் ஸர்வபூதாநி சாத்மநி। ஈக்ஷதே யோகயுக்தாத்மா ஸர்வத்ர ஸமதர்ஷந:॥ 6.29 ॥ |
யோகத்தில் நிலைபெற்ற எல்லாவற்றிலும் சமநோக்கு உடைய ஒருவன் தன்னை எல்லா உயிர்களிலும், தன்னிடம் எல்லா உயிர்களையும் காண்கின்றான்.
யோ மாம் பஷ்யதி ஸர்வத்ர ஸர்வம் ச மயி பஷ்யதி। தஸ்யாஹம் ந ப்ரணஷ்யாமி ஸ ச மே ந ப்ரணஷ்யதி॥ 6.30 ॥ |
யார் என்னை எல்லாவற்றிலும் , எல்லாவற்றை என்னிலும் காண்கின்றானோ அவனுக்கு நான் மறைவதில்லை, அவனும் எனக்கு மறைவதில்லை.