
ஜிதாத்மந: ப்ரஷாந்தஸ்ய பரமாத்மா ஸமாஹித:। ஷீதோஷ்ணஸுகது:கேஷு ததா மாநாபமாநயோ:॥ 6.7 ॥ |
தன்னை வென்றவனுக்கு , மனம் தெளிந்தவனுக்கு, குளிர் – சூடு, இன்பம் – துன்பம், மானம் – அவமானம் போன்ற இருமைகளில் இறைவுணர்வு நிலைத்திருக்கும்.
ஜ்ஞாநவிஜ்ஞாநத்ருப்தாத்மா கூடஸ்தோ விஜிதேந்த்ரிய:। யுக்த இத்யுச்யதே யோகீ ஸமலோஷ்டாஷ்மகாம்சந:॥ 6.8 ॥ |
ஞான, விஞ்ஞான அனுபவங்களின் வாயிலாக திருப்தி அடைந்தவன், மனச்சஞ்சலம் இல்லாதவன், புலன்களை வென்றவன், மண், கல், பொன் இவற்றை சமமாக பார்ப்பான்.— இத்தகையவன் யோகி என்று சொல்லபடுகின்றான்.
ஸுஹ்ருந்மித்ரார்யுதாஸீநமத்யஸ்தத்வேஷ்யபந்துஷு। ஸாதுஷ்வபி ச பாபேஷு ஸமபுத்திர்விஷிஷ்யதே॥ 6.9 ॥ |
நல்ல உள்ளம் படைத்தவன், நண்பன், பகைவன், ஒதுங்கி இருப்பவன், நடுநிலை வகிப்பவன், வெறுப்புக்கு உரியவன், உறவினர், நல்லவன், பாவி என்று அனைவரிடமும் சமபுத்தியை உடையவன் மேலானவன் .
யோகீ யுஞ்ஜீத ஸததமாத்மாநம் ரஹஸி ஸ்தித:। ஏகாகீ யதசித்தாத்மா நிராஷீரபரிக்ரஹ:॥ 6.10 ॥ |
தியான யோகத்தை நாடுபவன் யாரும் காணாமல் தனியாக இருந்துகொண்டு, புலன்களையும் உடம்பையும் வசபடுத்தி, ஆசைகளை விட்டு உடைமைகள் எதுவும் இல்லாதவனாக மனத்தை ஒன்று திரட்ட வேண்டும்.
ஷுசௌ தேஷே ப்ரதிஷ்டாப்ய ஸ்திரமாஸநமாத்மந:। நாத்யுச்ச்ரிதம் நாதிநீசம் சைலாஜிநகுஷோத்தரம்॥ 6.11 ॥ தத்ரைகாக்ரம் மந: க்ருத்வா யதசித்தேந்த்ரியக்ரியா:। உபவிஷ்யாஸநே யுஞ்ஜ்யாத்யோகமாத்மவிஷுத்தயே॥ 6.12 ॥ |
அசையாததும், அதிக உயரமாகவோ அதிகம் தாழ்ந்ததாகவோ அல்லாததும், துணி, தோல், தர்ப்பைப்புல் இவற்றை மேலே உடையதுமான இருக்கை ஒன்றை ஒரு சுத்தமான இடத்தில் தனக்காக ஏற்படுத்தி கொள்ள வேண்டும். அதில் அமர்ந்து மனத்தை ஒருமைபடுத்தி, பொறிபுலன்களின் செயல்களை அடக்கி, மனத்தூய்மைக்காக தியான யோகம் பழக வேண்டும்.