
ஸமம் காயஷிரோக்ரீவம் தாரயந்நசலம் ஸ்திர:। ஸம்ப்ரேக்ஷ்ய நாஸிகாக்ரம் ஸ்வம் திஷஷ்சாநவலோகயந்॥ 6.13 ॥ |
உடம்பு, தலை, கழுத்து இவற்றை நேராகவும் அசையாமலும் வைத்து கொண்டு, உறுதியாக அமர்ந்து, சற்று முற்றும் பார்க்காமல் தன்னுடைய மூக்கு நுனியை பார்க்க வேண்டும்.
ப்ரஷாந்தாத்மா விகதபீர்ப்ரஹ்மசாரிவ்ரதே ஸ்தித:। மந: ஸம்யம்ய மச்சித்தோ யுக்த ஆஸீத மத்பர:॥ 6.14 ॥ |
என்னை குறிக்கோளாக கொண்டு அமைதியான உள்ளத்துடன், பயமின்றி, பிரம்மச்சரிய விரதத்துடன் மனத்தை வசபடுத்தி என்னிடம் வைத்து, ஆர்வத்துடன் அமர்ந்திருக்க வேண்டும்.
யுஞ்ஜந்நேவம் ஸதாத்மாநம் யோகீ நியதமாநஸ:। ஷாந்திம் நிர்வாணபரமாம் மத்ஸம்ஸ்தாமதிகச்சதி॥ 6.15 ॥ |
இவ்வாறு மனத்தை ஒன்று திரட்டி, அதனை வசபடுத்திய யோகி, என்னிடம் உள்ளதும் முக்தியில் நிறைவுருவதுமான அமைதியை அடைகிறான்.
நாத்யஷ்நதஸ்து யோகோ அஸ்தி ந சைகாந்தமநஷ்நத:। ந சாதிஸ்வப்நஷீலஸ்ய ஜாக்ரதோ நைவ சார்ஜுந॥ 6.16 ॥ |
அர்ஜுனா ! அதிகமாக உண்பவனுக்கு தியான யோகம் இல்லை, எதுவும் உன்னதவனுக்கும் இல்லை, அதிகமாக உறங்குபவனுக்கும் இல்லை, அதிகமாக விழித்திருப்பவனுக்கும் இல்லை.
யுக்தாஹாரவிஹாரஸ்ய யுக்தசேஷ்டஸ்ய கர்மஸு। யுக்தஸ்வப்நாவபோதஸ்ய யோகோ பவதி து:கஹா॥ 6.17 ॥ |
உணவிலும் உடற்பயிற்சியிலும் அளவுடன் இருப்பவனுக்கு, செயல்களில் அளவுடன் ஈடுபடுபவனுக்கு, உறங்குவதிலும் விழித்திருப்பதிலும் அளவுடன் இருப்பவனுக்கு தியான யோகம் துன்பத்தை போக்குவது ஆகிறது.
யதா விநியதம் சித்தமாத்மந்யேவாவதிஷ்டதே। நி:ஸ்ப்ருஹ: ஸர்வகாமேப்யோ யுக்த இத்யுச்யதே ததா॥ 6.18 ॥ |
யாருடைய மனம் எல்லா ஆசைகளிலிருந்தும் விடுபட்டு, நன்றாக வசபடுத்தபட்டு ஆன்மாவிலேயே நிலைபெருகிறதோ அவன் தியான யோகி என்று சொல்லபடுகிறான்.