ஸர்வபூதஸ்திதம் யோ மாம் பஜத்யேகத்வமாஸ்தித:। ஸர்வதா வர்தமாநோ அபி ஸ யோகீ மயி வர்ததே॥ 6.31 ॥ |
எல்லா உயிர்களிலும் இருக்கின்ற என்னை ஒரே இறைவனாக கண்டு , அதில் நிலைத்திருந்து யார் வழிபடுகிறானோ, அந்த யோகி எந்த நிலையில் இருந்தாலும் என்னிடமே இருக்கிறான்.
ஆத்மௌபம்யேந ஸர்வத்ர ஸமம் பஷ்யதி யோ அர்ஜுன। ஸுகம் வா யதி வா து:கம் ஸ யோகீ பரமோ மத:॥ 6.32 ॥ |
அர்ஜுனா ! அனைத்தையும் தன்னை போல் கருதி, சுகத்தையும் துக்கத்தையும் யார் சமமாக காண்கின்றானோ அந்த யோகி மேலானவனாக கருதபடுகிறான்.
அர்ஜுன உவாச। |
யோ அயம் யோகஸ்த்வயா ப்ரோக்த: ஸாம்யேந மதுஸூதந। ஏதஸ்யாஹம் ந பஷ்யாமி சம்சலத்வாத்ஸ்திதிம் ஸ்திராம்॥ 6.33 ॥ |
அர்ஜுனன் கூறினான்: கிருஷ்ணா ! என் மனம் சஞ்சலமாக உள்ளது. எனவே நீ கூறிய சமநோக்கு என்ற யோகம் என்னில் உறுதியாக நிலைக்கும் என்று தோணவில்லை.
சம்சலம் ஹி மந: க்ருஷ்ண ப்ரமாதி பலவத் த்ருடம்। தஸ்யாஹம் நிக்ரஹம் மந்யே வாயோரிவ ஸுதுஷ்கரம்॥ 6.34 ॥ |
கிருஷ்ணா ! மனம் அலைபாயும் தன்மை உடையது, கலக்கம் தருவது, மிகுந்த ஆற்றல் வாய்ந்தது. மனத்தை வசபடுத்துவது காற்றை கட்டுபடுத்துவது போல் கடினம் என்று தோன்றுகிறது.
ஸ்ரீபகவாநுவாச। |
அஸம்ஷயம் மஹாபாஹோ மநோ துர்நிக்ரஹம் சலம்। அப்யாஸேந து கௌந்தேய வைராக்யேண ச க்ருஹ்யதே॥ 6.35 ॥ |
ஸ்ரீ பகவான் கூறினார்: பெரிய தோள்களை உடையவனே ! குந்தியின் மகனே ! மனம் அடக்க முடியாதது, அலைபாயகூடியது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் பயிற்சியாலும் வைராக்கியத்தாலும் அதை வசபடுத்திவிடலாம்.
அஸம்யதாத்மநா யோகோ துஷ்ப்ராப இதி மே மதி:। வஷ்யாத்மநா து யததா ஷக்யோ அவாப்துமுபாயத:॥ 6.36 ॥ |
மனத்தை வசபடுத்தமுடியாதவனால் தியான யோக நிலையை அடைய முடியாது. ( வைராக்கியம் கலந்த பயிற்சி என்கின்ற ) வழியில் மனத்தை வசபடுத்தி, முயற்சி செய்பவனால் அது முடியும் என்பது எனது கருத்து.