அர்ஜுன உவாச। |
அயதி: ஷ்ரத்தயோபேதோ யோகாச்சலிதமாநஸ:। அப்ராப்ய யோகஸம்ஸித்திம் காம் கதிம் க்ருஷ்ண கச்சதி॥ 6.37 ॥ |
அர்ஜுனன் கேட்டது : கிருஷ்ணா ! மனசஞ்சலத்தின் காரணமாக ஒருவன் தனது பயிற்சிகளை சரிவர செய்யவில்லை. அதன் காரணமாக அவனால் நிறைநிலையை அடைய முடியவில்லை. ஆனால் அவனிடம் சிரத்தை உள்ளது. அத்தகையவனின் கதி என்ன ?
கச்சிந்நோபயவிப்ரஷ்டஷ்சிந்நாப்ரமிவ நஷ்யதி। அப்ரதிஷ்டோ மஹாபாஹோ விமூடோ ப்ரஹ்மண: பதி॥ 6.38 ॥ |
கிருஷ்ணா ! இறைநெறியில் தவறியவன் ஆதாரம் இல்லாமல் ( இம்மை, மறுமை ) இரண்டும் கிடைக்காமல் சிதறிய மேகம் போல் அழிந்து போகிறான் அல்லவா ?
ஏதந்மே ஸம்ஷயம் க்ருஷ்ண சேத்துமர்ஹஸ்யஷேஷத:। த்வதந்ய: ஸம்ஷயஸ்யாஸ்ய சேத்தா ந ஹ்யுபபத்யதே॥ 6.39 ॥ |
கிருஷ்ணா ! எனது இந்த சந்தேகத்திற்கு குறைவின்றி விளக்க தகுந்தவன் நீயே. இந்த சந்தேகத்தை விளக்குவதற்கு உன்னை தவிர வேறு யாரும் இல்லை.
ஸ்ரீபகவாநுவாச। |
பார்த நைவேஹ நாமுத்ர விநாஷஸ்தஸ்ய வித்யதே। ந ஹி கல்யாணக்ருத்கஷ்சித் துர்கதிம் தாத கச்சதி॥ 6.40 ॥ |
ஸ்ரீ பகவான் கூறினார்: அர்ஜுனா ! ( இறைநெறியிலிருந்து வழுவ நேர்ந்தாலும் ) அவனுக்கு இங்கோ மறு உலகிலோ அழிவு என்பதே இல்லை. மகனே ! நன்மை செய்கின்ற யாரும் இழிநிலையை அடைவதில்லை.
ப்ராப்ய புண்யக்ருதாம் லோகாநுஷித்வா ஷாஷ்வதீ: ஸமா:। ஷுசீநாம் ஸ்ரீமதாம் கேஹே யோகப்ரஷ்டோ அபிஜாயதே॥ 6.41 ॥ |
இறைநெறியிலிருந்து வழுவியவன் புண்ணியம் செய்தவர்கள் இருக்கின்ற உலகங்களை அடைந்து அங்கே நீண்ட காலம் வாழ்ந்த பிறகு, செல்வம் நிறைந்த நல்லவர்களின் வீட்டில் பிறக்கிறான்.
அதவா யோகிநாமேவ குலே பவதி தீமதாம்। ஏதத்தி துர்லபதரம் லோகே ஜந்ம யதீத்ருஷம்॥ 6.42 ॥ |
அல்லது அறிஞர்களாகிய யோகிகளின் குலத்தில் பிறக்கின்றான். இது போன்ற பிறவி உலகில் மிகவும் அரியது.