
யதா தீபோ நிவாதஸ்தோ நேங்கதே ஸோபமா ஸ்ம்ருதா। யோகிநோ யதசித்தஸ்ய யுஞ்ஜதோ யோகமாத்மந:॥ 6.19 ॥ |
ஆன்ம தியானம் செய்கின்ற தியான யோகியின் அடங்கிய மனத்திற்கு காற்றில்லாத இடத்தில் இருக்கின்ற தீப சுடர் உவமையாக சொல்லபடுகிறது.
யத்ரோபரமதே சித்தம் நிருத்தம் யோகஸேவயா। யத்ர சைவாத்மநாத்மாநம் பஷ்யந்நாத்மநி துஷ்யதி॥ 6.20 ॥ |
தியானத்தால் வசபடுத்தபட்ட மனம் எப்போது ஓய்வு பெறுகிறதோ, எப்போது புத்தியால் ஆன்மாவை காண்கிறானோ, அப்போது அவன் ஆன்மாவில் மகிழ்கிறான்.
ஸுகமாத்யந்திகம் யத்தத் புத்திக்ராஹ்யமதீந்த்ரியம்। வேத்தி யத்ர ந சைவாயம் ஸ்திதஷ்சலதி தத்த்வத:॥ 6.21 ॥ |
புத்தியால் அறிய தக்கதும், புலன்களுக்கு அப்பாற்பட்டதும், முடிவில்லாததுமான இன்பம் எதுவோ அதனை தியான யோகி அறிகிறான். அதில் நிலைபெற்று, அந்த ஆன்மாவிலிருந்து விலகாதிருக்கிறான்.
யம் லப்த்வா சாபரம் லாபம் மந்யதே நாதிகம் தத:। யஸ்மிந்ஸ்திதோ ந து:கேந குருணாபி விசால்யதே॥ 6.22 ॥ தம் வித்யாத் து:கஸம்யோகவியோகம் யோகஸம்ஜ்ஞிதம்। ஸ நிஷ்சயேந யோக்தவ்யோ யோகோ அநிர்விண்ணசேதஸா॥ 6.23 ॥ |
எதை அடைந்த பிறகு அதைவிட அதிகமான வேறு லாபத்தை நினைப்பதில்லையோ, எதில் நிலைபெருவதால் மிக பெரிய துக்கத்தாலும் அலைகழிக்கபடுவதில்லையோ, துக்கத்தின் தொடர்பற்ற அதுவே தியான யோகம் என்று அறிந்துகொள். அந்த யோகத்தை உறுதியுடன் கலங்காத நெஞ்சத்துடனும் செய்ய வேண்டும்.