Word |
English & Tamil Meaning |
|---|---|
| கடுமலை | kaṭu-malai n. prob. கடு-மை+ Graphite mountain; காரீயமலை. (மு.அ) |
| கடுமான் | kaṭu-māṉ n. <>கடு-மை + மான். Lion; சிங்கம். கடுமான் கீழ்ந்த கடமலை (கல்லா. 67, 16). |
| கடுமீன் | kaṭu-mīṉ n. <>id. +. Ferocious fish, as shark; சுறாமுதலியன. கடுமீன் கலிப்பினும் (அகநா. 50) . |
| கடுமுடுக்கல் | kaṭu-muṭukkal n. <>id. +. See கடுமுடுக்கு. (W.) . |
| கடுமுடுக்கு | kaṭu-muṭukku n. <>id. +. 1. Hastening, speeding; வேகமாய் நடக்கை. (W.) 2. Oppression, rigour, as by petty; arrogant officers dressed in brief authority; |
| கடுமுடெனல் | kaṭu-muṭeṉal n. Onom. Rumbling, as the bowels; crackling sound, as that produced when biting hard, dry things; ஓர் ஒலிக்குறிப்பு. நாய் எலும்பைக் கடுமுடென்று கடிக்கிறது. (W.) |
| கடுமுள் | kaṭu-muḷ n. <>கடு-மை+. 1. Weapon used in warfare; யுத்த ஆயுதம். (திவா.) 2. A prickly plant with diffuse branches. See கண்டங்கத்திரி. (மலை.) |
| கடுமை | kaṭumai. n. 1. Severity, harshness, cruelty, hard-heartedness; கொடுமை. (சூடா.) 2. Rigour, strictness, sternness; 3. Vehemence, ferocity, furiousness; 4. Rapidity, speed; 5. Hardness, tenacity, firmness, roughness, ruggedness; 6. Excessiveness, intensity, immoderateness, vastness; 7. Anger, wrath; 8. Heat; 9. Strength, sturdiness; |
| கடுமொடெனல் | kaṭu-moṭeṉal n. Onom. See கடுமுடெனல். . |
| கடுமொழி | kaṭu-moḷi n. <>கடு-மை +. Harsh word; கடுமையான சொல். கடுமொழியுங் கையிகந்த தண்டமும் (குறள், 567). |
| கடுரோகிணி | kaṭu-rōkiṇi n. <>kaṭu-rōhinī. Christmas Rose, herb, Helleforus niger; ஒருவகைப்பூண்டு. |
| கடுரோணி | kaṭu-rōṇi n. See கடுரோகிணி. (சங். அக.) . |
| கடுவங்கம் | kaṭu-vaṅkam n. <>kaṭu-bhanga. Ginger; இஞ்சி. (மலை.) |
| கடுவட்டி | kaṭu-vaṭṭi n. <>கடு-மை +. Exorbitant rate of interest; அதிகவட்டி. |
| கடுவரல் | kaṭu-varal n. <>id. +. Hastening, running fast; விரைந்துவருகை. கடுவர லருவி (மணி. 17, 25). |
| கடுவரை | kaṭu-varai n. <>id. +.. Precipitous mountain; செந்தூக்கான மலை. கடுவரைநீரிற் கடுத்து வர (பு. வெ. 1, 11). |
| கடுவல் | kaṭuval n. <>id. 1. Ground hardened by sunshine after rain; வன்னிலம். (W.) 2. Heavy gale, hurricane; |
| கடுவழி | kaṭu-vaḷi n. <>id. +. Rugged path; கடத்தற்கரிய வழி. |
| கடுவளி | kaṭu-vaḷi n. <>id. +. Boisterous wind; storm; பெருங்காற்று கடுவளி தொகுப்ப வீண்டிய (புறநா. 55, 22). |
| கடுவன் | kaṭuvaṉ n. <>id. [M.kaduvaṉ.] 1. Male of the monkey; ஆண்குரங்கு. (தொல். பொ. 623.) 2. Tom-cat; 3. Eruption on the waist; 4. Round berried cuspidate-leaved Singam Tree. See மாவிலங்கை. (மலை.) |
| கடுவன்பன்றி | kaṭuvaṉ-paṉṟi n. <>கடுவன் +. Boar; ஆண்பன்றி. Kuṟava. |
| கடுவன்பூனை | kaṭuvaṉ-pūṉai n. <>id. +. Tom-cat; ஆண்பூனை. |
| கடுவன்முசல் | kaṭuvaṉ-mucal n. <>id. +. Buck hare; ஆண்முயல். (W.) |
| கடுவா | kaṭuvā n. A disease of the horse in which its eyes grow yellow; கண்களை மஞ்சணிற மாக்கும் குதிரைநோய். (அசுவசா. 88.) |
| கடுவாய் | kaṭu-vāy n. <>கடு-மை + வாய்-. 1. Hyena; கழதைப்புலி. செங்கைவெங்கடுவாய் (இராகு. தசரதன்சாப. 62). 2. Name of a branch of the river Kāveri in the Tanjore District; |
| கடுவாய்ப்பறை | kaṭu-vāy-p-paṟai n. <>கடுவாய் +. A war drum producing a big volume of sound; ஒருவகைப் போர்ப்பறை. கடல்போன் முழங்குங் குரற்கடுவாய்ப்பறையுடைப் பல்லவர்கோன் (திவ். பெரியதி. 2, 9, 9). |
| கடுவாயன் | kaṭu-vāyaṉ n. <>கடு-மை + வாயன். Rough, angry speaker; பேச்சால் எரிந்து விழவோன். Colloq. |
| கடுவான்கரப்பன் | kaṭuvāṉ-karappaṉ n. <>கடுவன் + Eruption between the knee and ankle, in children; குழந்தைகளின் முழந்தாளுக்குங் கற்பரட்டுக்கும் இடையில்வருங் கரப்பானோய். (W.) |
| கடுவிதித்தம் | kaṭuvitittam n. prob. kaṭutiktā. See கடுரோகிணி. (மலை.) . |
