அதிகாரம் 2
2 ஆண்டவருடைய கட்டளைகளை மறவாதபடிக்கும், பொன், வெள்ளியினால் செய்யப்பட்ட சிலைகளையும், அவைகளின் அணிகளையும் கண்டு மோசம் போகாதபடிக்கும் அவர்களுக்கு அவர் கட்டளை கொடுத்திருந்தார்.
3 இன்னும் வேறு பலவற்றையும் சொல்லி, தங்கள் இதயத்தினின்று கட்டளையை நீக்காமலிருக்க அறிவுரை கூறினார்.
4 இன்னும் எழுதப்பட்டிருப்பது என்னவென்றால், மோயீசன் ஏறிக் கடவுளுடைய உரிமைப் பாகத்தைக் கண்ட மலையின் மேல் சேர்கிற வரை, தமக்குக் கடவுள் கொடுத்திருந்த உத்தரவின்படி கூடாரத்தையும் பெட்டகத்தையும் தம்முடன் கொண்டு வர வேண்டுமென்று இறைவாக்கினர் கட்டளையிட்டார்.
5 அவ்விடம் வந்தபோது எரெமியாஸ் குகை ஒன்றைக் கண்டார்@ கூடாரத்தையும் பெட்டகத்தையும் சாம்பிராணிப் பீடத்தையும் அவ்விடம் கொண்டு வந்து, வாயிலை அடைத்து விட்டார்.
6 அவரைப் பின்பற்றி வந்த சிலர் தாங்களும் அவ்விடத்தைத் தெரிந்துகொள்ள வந்தார்கள்@ ஆனால், அதைக் கண்டுகொள்ளக் கூடவில்லை.
7 எரெமியாஸ் அதை அறிந்த போது அவர்களைக் கடிந்து: கடவுள் தம் மக்களை ஒன்று சேர்த்து இரக்கம் காட்டும் வரையில் அந்த இடம் எவருக்கும் தெரியாதிருக்கும்.
8 பின்பு தான் ஆண்டவர் அதை வெளிப்படுத்துவார். அப்பொழுது ஆண்டவருடைய மாட்சிமை வெளிப்படும். மோயீசனுக்குக் காண்பிக்கப்பட்டது போலவும், உன்னத கடவுளுக்கு ஆலயத்தை அர்ப்பணிக்க சாலமோன் மன்றாடிய போது தோன்றியது போலவும் மேகம் இருக்கும், என்றார்.
9 ஏனென்றால், தம் ஞானத்தைச் சிறந்த முறையில் பயன்படுத்தி (சாலமோன்) ஞானம் நிறைந்தவராய், கடவுள் ஆலயம் அபிஷேகம் செய்யப்பட்டதன் நினைவாகவும், முடிவு பெற்றதன் நினைவாகவும் பலிகளை ஒப்புக்கொடுத்தார்.
10 மோயீசன் ஆண்டவரை மன்றாடிய போது விண்ணினின்று நெருப்பு இறங்கிப் பலியை எரித்தது போல, சாலமோன் மன்றாடவே வானத்தினின்று நெருப்பு இறங்கிப் பலியை எரித்தது
11 பாவத்துக்காகக் கொடுக்கப்பட்ட அப்பலி சாப்பிடப்படவில்லை@ ஆகவே, எரிக்கப்பட்டது என்று மோயீசன் சொன்னார்.
12 அதுபோலவே (சாலமோனும்) எட்டு நாட்களாக ஆலய அபிஷேகத்தைக் கொண்டாடினார் என்று கூறப்பட்டுள்ளது.
13 நெகேமியாவின் நூல்களிலும் விளக்கங்களிலும் இவை சொல்லப்பட்டிருக்கின்றன. நூல் நிலையம் ஒன்று அமைக்க, அவர் நாடுகளிலிருந்து இறைவாக்கினருடையவும் தாவீதினுடையவும் நூல்களையும், காணிக்கைகளைப் பற்றிய அரசர்களின் கடிதங்களையும் ஒன்று திரட்டினார்.
14 அப்படியே யூதாசும், நாங்கள் புரிந்த போரின் போது தவறிப் போன நூல்களையெல்லாம் ஒன்று சேர்த்தார். அவை இப்போது எங்களிடம் இருக்கின்றன.
15 ஆகையால், அவை உங்களுக்கு வேண்டுமானால், உங்களிடம் அவற்றை எடுத்து வரும்படி சிலரை அனுப்புங்கள்.
16 ஆலயத்தைத் தூய்மைப் படுத்திய நினைவு நாட்களைக் கொண்டாட இருக்கிறபடியால், இவற்றை உங்களுக்கு எழுதினோம்.
17 இந்நாட்களை நீங்களும் கொண்டாடினால் நலம். தம்முடைய மக்களை மீட்டு, சுதந்தரத்தையும் அரசையும் குருத்துவத்தையும் புனிதத்துவத்தையும் எல்லாருக்கும் கொடுத்த கடவுளே
18 கட்டளையில் வாக்குறுதி வழங்கியது போல விரைவில் நம் மேல் இரக்கம் கொள்வாரென்றும், வானத்தின் கீழ் புனித இடத்தில் நம்மைச் சேர்ப்பாரென்றும் நம்புகிறோம்.
19 ஏனென்றால், அவர் பேராபத்துகளினின்று நம்மை மீட்டார்@ ஆலயத்தையும் தூய்மைப்படுத்தினார்.
20 யூதாஸ் மக்கபேயுசைப் பற்றியும், அவருடைய சகோதரர்களைப் பற்றியும், கடவுளின் பேராலயத்தைத் தூய்மைப் படுத்தல், பீடத்தின் அபிஷேகம் இவைகளைப் பற்றியும்,
21 இன்னும் மகா அந்தியோக்கஸ், அவன் புதல்வன் யூப்பாத்தோர் இவர்கள் செய்த போரைப் பற்றியும்,
22 சொற்பப் பேராயிருந்தாலும் நாடு முழுமையையும் கைப்பற்றித் தீயோர் கூட்டத்தைத் துரத்தியடித்து யூதருக்காகத் துணிவுடன் போர் புரிந்தவர்களுக்கு விண்ணினின்று வழங்கப்பட்ட சிறந்த உதவிகளைப் பற்றியும் பேசுவோம்.
23 யூதாசும் அவர் சகோதரர்களும் உலக முழுவதிலும் பெயர் பெற்ற கடவுள் ஆலயத்தைத் திரும்ப கைப்பற்றிக் கெண்டார்கள்@ நகரை மீட்டார்கள்@ புறக்கணிக்கப்பட்ட சட்டங்களை திரும்ப ஏற்படுத்தினார்கள். ஆண்டவரும் தயவாய் அவர்கள் பால் இரக்கம் கொண்டார்.
24 சிரேனே ஊரானான யாசோனால் ஐந்து நூல்களிலே எழுதப்பட்டவற்றை ஒரே நூலில் சுருக்கி எழுத முயன்றோம்.
25 ஏனென்றால், நூல்களின் எண்ணிக்கையினாலும், வரலாற்று நிகழ்ச்சிகளை அறிய விரும்பகிறவர்களுக்கு நிகழ்ச்சிகளின் பெருக்கத்தினாலும் உண்டாகும் வருத்தத்தை நினைவில் கொண்டு,
26 வாசிக்க விருப்பமுள்ளவர்களுக்கு மனநிறைவு உண்டாகும்படியும், கவனிப்பவர்களின் மனத்தில் எளிதாய்ப் பதியும்படியும், வாசிப்போர் அனைவருக்கும் பயன் உண்டாகும்படியும், கவனம் எடுத்துக் கொண்டோம்.
27 சுருக்கி எழுதும் இந்த வேலையை ஏற்றுக் கொண்ட எமக்கோ இது எளிதன்று@ உண்மையாகவே கவலை மிக்க கடினமான வேலை.
28 ஆயினும், விருந்து அளிப்பவர்கள் விருந்தினருடைய மனத்திற்கு நிறைவு ஏற்படத் தேடுவது போல, பலருடைய நன்மையை முன்னிட்டு மகிழ்வோடு இவ்வேலையை ஏற்றுக் கொண்டோம்.
29 ஒவ்வொரு நிகழ்ச்சியின் உண்மையையும் எழுதியவர்களிடமிருந்து அப்படியே ஏற்றுக் கொண்டு, அவைகளைச் சுருக்கமாய் எழுதவே கவனம் செலுத்துகிறோம்.
30 ஏனென்றால், புது வீட்டைக் கட்டுகிறவன் கட்டடம் முழுமையையும் கவனிக்க வேண்டியிருக்கிறது@ சித்திரம் எழுதுகிறவனோ அலங்காரத்துக்கு அடுத்தவைகளையே தேடுகிறான்.
31 அது போலவே எம்மையும் கொள்ளுங்கள். ஏனென்றால், வரலாறு எழுதுகிறவனுடைய கடமை நிகழ்ச்சிகளைச் சேர்ப்பதும், ஒழுங்காய்ச் சொல்வதும், ஒவ்வொரு நிகழ்ச்சியையும் தீர ஆராய்வதுமே ஆகும்.
32 வாக்கியத்தைச் சுருக்கிச் சொல்லவும், நீண்ட பேச்சை நீக்கவும்- இது போன்றவைகளைச் செய்யச் சுருக்கி எழுதுகிறவனை விட்டு விட வேண்டும்.
33 ஆகையால், இங்கு வரலாற்றைத் தொடங்குவோம். முகவுரையில் இவ்வளவு சொன்னது போதும். எனென்றால், வரலாற்றைச் சுருக்கி, வரலாற்றுக்கு முன் விரித்துரைப்பது அறிவீனமான காரியம்.