அதிகாரம் 14
2 அந்தியோக்கஸ் என்பவனுக்கும் அவன் படைத்தலைவன் லிசியாசுக்கும் எதிராகப் பெரிய நாடுகளை அவன் பிடித்துக் கொண்டானென்றும் அறிந்தார்கள்.
3 முன் தலைமைக்குருவாய் இருந்தும், மனம் பொருந்தித் துன்ப காலங்களில் தன்னையே தீட்டுப் படுத்திக் கொண்ட ஆல்சிமுஸ் தனக்கு மீட்பு எவ்வகையிலும் இல்லை என்றும், தான் பீடத்தண்டை வருவது கூடாதென்றும் எண்ணி,
4 நூற்றைம்பதாம் ஆண்டு தெமெத்திரியுஸ் மன்னனிடம் சென்று, பொன்முடியையும் குருத்தையும், கடவுள் ஆலயத்தில் இருந்தனவாக எண்ணப்பட்ட ( ஒலிவக் ) கிளைகளையும் அவனுக்குக் காணிக்கையாகக் கொடுத்தான். அன்று அவன் யாதொன்றும் சொல்லவில்லை.
5 தெமெத்திரியுசினால், ஆலோசனைச் சங்கத்துக்கு அவன் அழைக்கப்பட்டு, யூதர்கள் எவற்றை நம்பி இருக்கின்றார்கள், அவர்களுடைய திட்டங்கள் யாவை என்று தான் கேட்கப்பட்ட போது, தன் மூடத்தனத்துக்குத் தகுந்த வாய்ப்பு அகப்பட்டதென்று எண்ணி, அவன் மறு மொழியாக:
6 யூதரில் யூதாஸ் மக்கபேயுசிற்கு உட்பட்டிருக்கும் அஸ்தியேர் என்பவர்கள் தாம் போரை நீடிக்கச் செய்கிறார்கள்@ கலகம் மூட்டுகிறார்கள்@ நாட்டின் அமைதியைக் குலைக்கிறார்கள்.
7 எனவே, என் முன்னோருடைய மகிமையாகிய தலைமைக்குருத்துவம் என்னிடமிருந்து பறிக்கப்பட்டு நான் இவ்விடம் வந்தேன்.
8 முதலில் அரசரின் நலம் நாடியும், பின் நகரத்தாருடைய நன்மையை நாடியும் வந்தேன். ஏனென்றால், நான் முன்குறிப்பிட்டவர்களுடைய தீய குணத்தால், எங்கள் இனத்தார் எல்லாரும் படும் துன்பம் கொஞ்சமன்று.
9 அரசே, நீர் இவை யாவையும் அறிந்து, எங்கும் விளங்கும் உமது கருணைக்கு ஏற்றவாறு எங்கள் நாட்டின் மீதும் எங்கள் இனத்தார் மீதும் கண்ணோக்கியருளும்.
10 ஏனென்றால், யூதாஸ் உயிரோடிருக்கும் வரை நாட்டில் அமைதிச் சூழ்நிலை உருவாதல் இயலாது என்று கூறினான்.
11 அவன் இவ்வாறு பேசிய பிறகு, அவனுடைய மற்ற நண்பர்களும் யூதாசின் பகைவர்களாய் இருந்ததால் தெமெத்திரியுசுக்குக் கோபமூட்டினார்கள்.
12 ஆதலால், அவன் உடனே யானைப் படைகளின் தலைவனான நிக்கானோரை யூதயோவுக்கு அனுப்பினான்.
13 யூதாசைப் பிடிக்க வேண்டுமென்றும், அவருடன் இருந்தவர்களைச் சிதறடிக்க வேண்டுமென்றும், ஆல்சிமுசைக் கடவுளின் பேராலயத்தின் தலைமைக் குருவாக நியமிக்க வேண்டுமென்றும் கட்டளை கொடுத்தான்.
14 அப்போது யூதருக்குப் பயந்து யூதேயாவினின்று ஓடிப்போன இனத்தார் கூட்டம் கூட்டமாய் நிக்கானோரோடு சேர்ந்து கொண்டனர். ஏனென்றால், யூதருக்கு நேரும் கொடுமைகளும் கொலைகளும் தங்களின் வெற்றி என்று அவர்கள் எண்ணினார்கள்.
15 நிக்கானோருடைய வருகையையும், புறவினத்தார் ஒன்று கூடினதையும் யூதர் கேள்விப்பட்ட போது மண்ணைத் தங்கள் தலை மேல் போட்டுக் கொண்டு, தம் மக்களை உருவாக்கியவரும் தமது உடைமையை வெளி அடையாளங்களால் பாதுகாத்தவருமான கடவுள் என்றும் தங்களைக் காப்பாற்றும்படி மன்றாடினார்கள்.
16 தலைவன் கட்டளையிட்டவுடனே அவர்கள் புறப்பட்டு, தெஸ்சாவு கோட்டைக்கு வந்தார்கள்.
17 யூதாசின் சகோதரன் சீமோன் நிக்கானோரை எதிர்த்துப் போனான்@ ஆனால், திடீரெனப் பகைவர்களைக் காணவே பயமடைந்தான்.
18 அவ்வாறே, தங்கள் நாட்டுக்காகப் புரிந்த போர்களில் யூதாசின் வீரர் கொண்டிருந்த வீரத்தையும் மனத்துணிவையும் கேள்வியுற்ற நிக்கானோரும் போர்தொடுக்கப் பயந்தான்.
19 ஆதலால், அவனுடன் நட்பு உடன்படிக்கை செய்துகொள்ள போசிதோனியுஸ், தேயோதோசியுஸ், மத்தியாஸ் என்பவர்களை அனுப்பினான்.
20 இவைகளைப் பற்றி நீண்ட நேரம் ஆலோசித்து, படைத்தலைவனே படைகளுக்கு அறிவித்த போது, எல்லாரும் ஒருமனப்பட்டு நட்புறவிற்கு இசைந்தார்கள்.
21 தலைவர்கள் இரகசியமாய்த் தங்களுக்குள்ளாகப் பேசுவதற்கு ஒரு நாளைக் குறிப்பிட்டார்கள். ஒவ்வொருவருக்கும் இருக்கை அமைக்கப்பட்டது.
22 பகைவர்களால் திடீரென்று தீமை ஏதேனும் நடவாதபடிக்கு ஆயுதம் தாங்கியவர்கள் தக்க இடங்களில் இருக்கவேண்டுமென்று யூதாஸ் கட்டளையிட்டார். பிறகு தகுந்த முறையிலே கூடிப்பேசினார்.
23 நிக்கானோர் யெருசலேமில் தங்கியிருந்தான்@ யாதொரு தீங்கும் செய்யவில்லை@ சேர்க்கப்பட்ட கூட்டங்களையெல்லாம் அனுப்பி விட்டான்.
24 யூதாசுக்கு எப்போதும் அன்பு செய்து, அவர் மீது பற்றுக் கொண்டான்.
25 அவர் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்றும், மக்களைப் பெற வேண்டுமென்றும், கேட்டுக் கொண்டான். யூதாஸ் திருமணம் செய்து கொண்டார்@ அமைதியாக எல்லாரையும் போல வாழ்ந்து வந்தார்.
26 அவர்களிடையே இருந்த நட்புறவையும் உடன்படிக்கைகளையும் ஆல்சிமுஸ் கண்டு, தெமெத்திரியுசிடம் வந்து, நிக்கானோர் அரசுக்கு எதிரான காரியங்களுக்கு இசைந்தானென்றும், அரச துரோகியான யூதாசைத் தனக்குப் பின் தலைவனாக நியமித்தானென்றும் சொன்னான்.
27 ஆதலால், அரசன் கோபம் கொண்டு, அவனுடைய கொடிய பொய்க் குற்றச்சாட்டுகளால் அதிக ஆத்திரம் அடைந்து, சமாதான உடன்படிக்கையைப் பற்றித் தான் மிகவும் மனவருத்தப்படுவதாகவும், ஆயினும் கூடிய விரைவில் மக்கபேயுசுக்கு விலங்கிட்டு அந்தியோக்கியாவுக்கு அனுப்பக் கட்டளையிடுவதாகவும் நிக்கானோருக்கு எழுதினான்.
28 நிக்கானோர் இவற்றை அறிந்து மனம் நொந்து, தனக்கு யாதொரு தீங்கும் செய்யாத ஒரு மனிதனோடு தான் செய்து கொண்டவை வீணாய்ப் போவதைக் கண்டு பெரிதும் துன்பம் அடைந்தான்.
29 ஆனால், அரசனை எதிர்க்க முடியாதவனாகையால், அவன் கட்டளையை நிறைவேற்றத் தக்க நேரத்தை எதிர் நோக்கி இருந்தான்.
30 நிக்கானோர் தன்னுடன் அதிகக் கண்டிப்பாய் நடந்து கொள்வதையும், வழக்கமாய்ச் சந்திக்கையில் அதிகக் கோபமுள்ளவனாயிருப்பதையும் மக்கபேயுஸ் கண்டு, இந்தக் கடுமை நன்மைக்கன்று என்று கண்டு, தம்முடையவர்களில் சிலரைச் சேர்த்துக் கொண்டு, நிக்கானோரிடமிருந்து விலகி ஒளிந்து இருந்தார்.
31 மக்கபேயுஸ் தன்னிடமிருந்து விலகிச் செல்வதை நிக்கனோர் அறிந்து, குருக்கள் வழக்கமான பலிகளை ஒப்புக்கொடுக்கையில், மிகவும் உயர்ந்ததும் புனித மிக்கதுமான கடவுள் ஆலயத்துக்கு வந்து, யூதாசைத் தன்னிடம் கையளிக்கும்படி கட்டளையிட்டான்.
32 தேடப்பட்ட மக்கபேயுஸ் எவ்விடம் இருக்கிறாரென்பதைத் தாங்கள் அறிந்திலரென்று அவர்கள் ஆணையிட்டுச் சொன்ன போது, அவன் கடவுள் ஆலயத்தை நோக்கி, தன் கையை நீட்டி,
33 ஆணையிட்டு: யூதாசை விலங்கிட்டு நீங்கள் என் கையில் கெடாமல் போனால், இந்தக் கடவுளின் ஆலயத்தைத் தரைமட்டமாக்குவேன்@ பீடத்தை இடித்து விடுவேன்@ இவ்வாலயத்தைத் தந்தை லிபேருக்கு அபிஷேகம் செய்வேன், என்று சொல்லிப் போய் விட்டான்.
34 குருக்களோ விண்ணை நோக்கித் தங்கள் கரங்களை விரித்து, தங்கள் இனத்தாரை எப்போதும் காத்து வந்தவரை நோக்கி:
35 யாருடைய உதவியுமின்றி அனைத்தையும் நடத்த வல்ல ஆண்டவரே, உம்முடைய உறைவிடமாக இந்த ஆலயத்தை எங்களுக்குக் கொடுக்கத் திருவுளமானீர்.
36 புனிதமானவரே, புனிதர்கெல்லாம் ஆண்டவரே, சிறிது காலத்துக்கு முன்பு தூய்மைப்படுத்தப்பட்ட இந்த உறைவிடம் தீட்டுப்படாமல் என்றென்றும் காப்பாற்றும் என்று மன்றாடினார்கள்.
37 தன்னுடைய பற்றுதலை முன்னிட்டு யூதருடைய தந்தை எனப்பட்டவனும், நகரத்தாரின் அன்புக்கு உகந்தவனும், மாண்புமிக்கவனும் யெருசலேமிலுள்ள முதியோரில் ஒருவனுமான ராசியாஸ் நிக்கானோரிடம் குற்றம் சாட்டப்பட்டான்.
38 இவன் பிறரோடு உறவாடித் தன்னையே தீட்டுப்படுத்திக் கொள்ளாமல், யூத மறையின் படி நீண்ட காலமாய்த் தூய்மையைக் காப்பாற்றி அதில் நிலைப்பதற்காக உடலையும் உயிரையும் கொடுக்கத் தயாராய் இருந்தான்.
39 நிக்கானோர் யூதர் மீது தனக்கிருந்த பகையைக் காண்பிக்க விரும்பி, அவனைப் பிடிக்க ஐந்நூறு வீரரை அனுப்பினான்.
40 ஏனென்றால், அம்மனிதனைத் தன்வயப்படுத்திக் கொண்டால் யூதருக்கு அதிகத் தீமைகள் செய்யலாமென்று நினைத்திருந்தான்.
41 அவ்வீரர் அவன் வீட்டில் புகவும், கதவை உடைக்கவும், கொளுத்தி விடவும் முயலுகையில், தான் பிடிபடப் போகும் நேரத்தில் அவன் கத்தியால் தன்னைக் குத்திக் கொண்டான்.
42 ஏனென்றால், பாவிகளுக்கு அடிமைப்படுவதையும், தன் பிறப்புக்குத் தகாத நிந்தைக்கு உட்படுவதையும் விடச் சாவதை மேலானதாகத் தேர்ந்து கொண்டான்.
43 ஆனால், அவசரத்தில் சரியாய்க் குத்திக் கொள்ளாததால், வீரர் கதவுகள் வழியாக ஓடி வந்த போது துணிவாய்ச் சுவருக்கு ஓடி, மக்கள் கூட்டத்தின் மேல் பயமின்றிக் குதித்தான்.
44 அவன் விழுவதைக் கண்டு அவர்கள் விரைவாய் விலக, அவன் தலை கீழாய் விழுந்தான்.
45 இன்னும் மூச்சு இருக்கையில் அவன் திடங்கொண்டு திரும்பவும் எழுந்து, இரத்தம் வெள்ளமாய் ஓட, பெரிய காயங்களால் வருந்திய போதிலும் ஓட்டமாய்க் கூட்டத்தைக் கடந்தான்.
46 ஓர் உயர்ந்த கற்பாறையின் மேல் நின்று கொண்டு, இரத்தமெல்லாம் இழந்த பிறகு தன் குடல்களைப் பிடுங்கி, இரு கைகளாலும் கூட்டத்தின் மீது எறிந்து, தனக்கு அவைகளைத் திரும்பவும் கொடுக்கும் படி உயிருக்கும் ஆவிக்கும் ஆண்டவரானவரை மன்றாடினான். இவ்வாறு அவன் உயிர் விட்டான்.