Word | 
English & Tamil Meaning | 
|---|---|
| கலங்கொம்பு | kalaṅ-kompu n. <>கலை+கொம்பு. Stag's horn; கலைமான்கொம்பு. (J.)  | 
| கலசக்கொப்பு | kalaca-k-koppu n. <>kala-ša+. Ear ornament worn by woman; மாதர் காதணிவகை. (W.)  | 
| கலசநிறுத்து - தல் | kalaca-niṟuttu- v.intr.<>id.+. To set up with mantras, on religious occasions, a pot full of water covered with sprays of mango leaves and a coconut atop of it; கிரியை செய்தற்கு மந்திரபூர்வமாகக் கும்பம் அமைத்தல்.  | 
| கலசப்படை | kalaca-p-paṭai n. <>id.+. An ear ornament worn by Parava women; பரவமகளிர் காதணிவகை.  | 
| கலசப்பானை | kalaca-p-pāṉai n. <>id.+. 1. Censer; தூபகலசம். (திவா.) 2. Spittoon;  | 
| கலசம் | kalacam n. <>kalaša 1. Small vessel, pot; குடம். செப்பன்பன் கலசமென்பன் (கம்பரா. நாடவி. 43). 2. Censer; 3. Cup; 4. (Arch.) Dome, cupola; 5. A  standard measure of capacity=1000 பாக்கு. (அபி. சிந். பக். 204.)  | 
| கலசமாட்டு - தல் | kalacam-āṭṭu- v. intr. <>id.+. To bathe an idol with the consecrated water from a kalacam reciting appropriate mantras as the water is poured; கலசத்தால் மஞ்சனமாட்டுதல். (S.I.I. iii, 102.)  | 
| கலசமாட்டு | kalacam-āṭṭu- n. <>id.+. Pouring consecrated water on an idol, from a kalacam, with mantras கலசங்கொண்டு அபிஷேகஞ் செய்கை. Loc.  | 
| கலசமுனி | kalaca-muṉi n. <>id.+. Agastya, who was born from a pot; குடத்தினின்று பிறந்தவரான அகஸ்தியர். அன்று கலசமுனி வயிற்றி லற்றாயென்னில் (நைட. சந்.4).  | 
| கலசயோனி | kalaca-yōṉi n. <>id.+. See கலசமுனி. (தொல். பொ. 75, உரை.) .  | 
| கலசு - தல் | kalacu- 5 v. intr. <>கல-.[K. kalasu.] To mingle; கலத்தல். பிரமருத்திரர்கள் நடுவே கலசிநின்றால் (ஈடு).  | 
| கலணை | kalaṇai n. See கலனை. கலணை விசித்து . . புரவிசெலுத்தி (திருப்பு. 405). .  | 
| கலணைக்கரடு | kalaṇai-k-karaṭu n. <>கலணை+. Pommel of a saddle; சேணத்தின் முன் பக்கம். (W.)  | 
| கலணைவார் | kalaṇai-vār n. <>id.+. Girth of a saddle; சேணத்தின் வார்.  | 
| கலதி 1 | kalati n. <>khalati. The disease that produces bald head; தலைவழுக்கையை உண்டக்கும் நோய், (சிவரட்.)  | 
| கலதி 2 | kalati n. cf. khala-tā. 1. Ruin, destruction, disaster; கேடு. கலதியம் பிவையுங் காய்ந்த (சீவக. 769). 2. The goddess of misfortune; 3. Villain, wicked man;  | 
| கலதிமை | kalati-mai n. <>கலதி2. Misfortune; தீவினை. நல்லறங் காய்வது கலதிமைப் பாலதாகுமே (சிவக.2932).  | 
| கலதை | kalatai n.perh.khala-tā Confusion, tumult, turmoil; குழப்பம். (W.)  | 
| கலந்தான் | kalantāṉ n. <>U. kalamdān. Inkstand; மைக்கூடு. (C.G.)  | 
| கலந்துகட்டி | kalantu-kaṭṭi n. <>கல-+. Admixture of the good and bad; haphazard interlarding; நல்லதும் கெட்டதும் கலந்தது. தேவதாந்தரங்களையுங் கலந்துகட்டியாக ப்ரதிபாதிக்கையாலும் (ஈடு, 4, 10 ப்ர.)  | 
| கலந்துகட்டிப்பரிமாறு - தல் | kalantu-kaṭṭi-p-parimāṟu- v. <>id.+. intr. To mix freely without any distinction, as caste, rank, etc.; வேறுபாடின்றிக் கலத்தல்.-tr. To use ornaments or other property in common; ஆபரணங்கள் முதலியவற்றைப் பொதுவில் உபயோகப்படுத்துதல். (W.)  | 
| கலந்துபரிமாறு - தல் | kalantu-parimāṟu- v intr.<>id.+. 1. To co-operate; கூடிக் காரியம் நடத்துதல். 2. To enjoy in common;  | 
| கலந்தை | kalantai n. Greatness; பெருமை. (திவா.)  | 
| கலப்படம் | kala-p-paṭam n. <>T. kalapadamu. Mixture; adulteration; கலப்புள்ளது. இந்தநெய் கலப்படமானது. Loc.  | 
| கலப்பற்றடி - த்தல் | kala-p-paṟṟaṭi- v. tr. <>கலம்1+பற்று+அடி-. See கலப்பற்றுப்பார்-. .  | 
| கலப்பற்று | kala-p-paṟṟu n. <>id.+. Calking of a boat; படகின் நீக்கல் அடைக்கை. (J.)  | 
| கலப்பற்றுக்காரன் | kala-p-paṟṟu-k-kāraṉ n. <>id.+. One whose occupation is the calking of ships, boats, etc., calker; படகின் நீக்கலடைப்பவன்.  | 
