Word |
English & Tamil Meaning |
|---|---|
| உவர்க்கடல் | uvar-k-kaṭal n. <>உவர்+. Salt sea; உப்புக்கடல். உவர்க்கடலன்ன செல்வரு முளரே. (நன். 268, மயிலை.) |
| உவர்க்கம் | uvarkkam n. <>id. Seashore; கடற்கரை. உவர்க்கத் தொரோவுதவிச் சேர்ப்பன் (திணைமாலை. 62). |
| உவர்க்களம் | uvar-k-kaḷam n. <>id.+. 1. Saltish land; களர்நிலம். (பிங்.) 2. Salt-pans, land where salt is formed; |
| உவர்க்காரம் | uvar-k-kāram n. <>id.+. Soap; சவர்க்காரம். (W.) |
| உவர்ச்சங்கம் | uvarccaṅkam n. Mistletoe berry thorn. See முட்சங்கு. (மலை.) . |
| உவர்த்தரை | uvar-t-tarai n. <>உவர்+. Saline soil; களர்நிலம். (பிங்.) |
| உவர்நிலம் | uvar-nilam n. <>id.+. [M. uvarnilam.] See உவர்த்தரை. . |
| உவர்நீர் | uvar-nīr n. <>id.+. Salt water, brackish water; உப்புநீர். (பிங்.) |
| உவர்ப்பு | uvarppu n. <>உவர்-. [M. uvarppu.] 1. Saltishness; உப்புச்சுவை. 2. Astringency; 3. Insult, contempt; 4. Dislike, aversion; 5. Absence of desire, suppression of passion; |
| உவர்மண் | uvar-maṇ n. <>உவர்+. [M. uvar-maṇ.] 1. Saline soil; களர்நிலம். 2. Fuller's earth, crude carbonate of soda; |
| உவர்மண்காரம் | uvar-maṇ-kāram n. <>id.+. Fuller's earth; உழைமண். Loc. |
| உவராகம் | uva-rākam n. <>upa rāga. Eclipse of the sun or moon; கிரகணம். உவராக மாயிரத்துக் கொப்பாம் (சேதுபு. சேதுபல. 78). |
| உவரி | uvari n. <>உவர். [M. uvari.] 1. Brackish water; உப்புநீர். மலைசார்ந்து முப்பீண்டுவரி பிறத்தலால் (நாலடி, 245). 2. Urine; 3. Sea; |
| உவரோதம் | uvarōtam n. <>upa-rodha. Obstruction, impediment, obstacle; இடையூறு. வசையப ராதமாய வுவரோதம் (தேவா. 212, 5). |
| உவல் | uval n. prob. உவள்-. 1. Twigs and sprays; தழை. பாசுவ லிட்ட புன்காற் பந்தர் (புறநா. 262). 2. Dried leaves; |
| உவலை | uvalai n. <>உவல். 1. Twigs and sprays; தழை. உவலை சூடி யுருத்துவரு மலிர்நிறை (பதிற்றுப். 28, 12). 2. Dried leaves; 3. Meanness; |
| உவவனம் | uva-vaṉam n. <>upa-vana. Grove, park. See உபவனம். உவவன மருங்கினவ்வுரைசா றெய்வதம் (மணி. பதி. 45). |
| உவவு | uvavu n. <>உவ-. 1. Great pleasure, gladness; உவப்பு. உவவுபொன் றருகென (விநாயகபு. 54, 12). 2. Full moon and new moon. See உவ1,1,2. 3. Religious austerity; |
| உவள் 1 | uvaḷ pron. <>உ4. [K. uval.] She who is yonder; முன் நிற்பவள். படையுவள் கண்காண்மின் (பரிபா. 11, 123). |
| உவள் (ளு) 2 - தல் | uvaḷ- 2 v.intr. cf. துவள்-. 1. To quiver; be unable to support a weight, as the poplar of the asp; துவளுதல். (சூடா.) 2. To quake, as the earth; 3. To spread, extend in all directions; |
| உவளகம் | uvaḷakam n. prob. உ4+வளாகம். 1. Zenana, interior part of a mansion set apart for women; அந்தப்புரம். உவளகந் தனதாக வொடுங்கினான் (சீவக. 243). 2. Prison; 3. One portion, side; 4. High walls in a fortification; 5. Gateway, entrance; 6. Hamlet of herdsmen; 7. Hollow depression in the ground; 8. Tank, lake; 9. Tench, fosse; 10. Expanse, wideness; 11. Saltpan; 12. Separating, parting; |
| உவளி - த்தல் | uvaḷi- 11 v.tr. cf. உவனி-. To cleanse, purify; தூய்மைசெய்தல். (பிங்.) |
| உவற்று - தல் | uvaṟṟu- 5 v.tr. caus. of உவறு-. To cause to swell up, to flow; சுரக்கச்செய்தல். ஒண்செங் குருதி யுவற்றியுண் டருந்துபு. (அகநா. 3). |
| உவறு - தல் | uvaṟu- 5 v. intr. prob. ஊறு-. To spring up, well up; சுரத்தல். உவறுநீ ருழக்கி (சீவக. 966). |
