Word |
English & Tamil Meaning |
|---|---|
| சோடசகர்மம் | cōṭaca-karmam n. <>ṣodaša+. The sixteen essential ceremonials in the life of a person, karuppātāṉam, pucavaṉam, cīmantam, uṉṉayaṉam, cātakaṉmam, nāmakaraṇam, கருப்பாதானம் புஞ்சவனம் சீமந்தம் உன்னயனம் சாதகன்மம் நாமகரணம் உபநிஷ்கிரமணம் அன்னப்பிராசனம் சௌளம் உபநயனம் மகாநாமியம் மகாவிரதம் உபநிஷத்து சோபனம் உத்துவகனம் மிருதி என்னும் பதினாறுவகை ஸம்ஸ்காரங்கள். (த. நி. போ. 24.) |
| சோடம் 1 | cōṭam n. <>cōda. A kind of corset; முலைக்கச்சுவகை. Pond. |
| சோடம் 2 | cōṭam n. <>sōdha. Patience, endurance; பொறுமை. (யாழ். அக.) |
| சோடை | cōṭai n. cf. சொள்ளை. Loc. 1. That which is withered, blighted or decayed; சொத்தை. 2. Useless, good-for-nothing person; 3. Weak, emaciated person; |
| சோனகவாளை | cōṇaka-vāḷai n. cf. சோனகம்வாளை. A kind of vāḷai fish; வாளைமீன்வகை. (M. M.) |
| சோதம் | cōtam n. prob. cyōta. Pure water; நல்லதண்ணீர் (W.) |
| சோதனாபிரதிகாலம் | cōtaṉā-pirati-kālam n. <>cōdanā+prati+. Adjournment of a suit for examination of witnesses; சாட்சி விசாரணைக்காக வழக்கை ஒத்திவைக்கை. (சுக்கிரநீதி, 282.) |
| சோதனை | cōtaṉai n. <>cōdanā. Purgative; பேதிமருந்து. Loc. |
| சோதா | cōtā n. <>šōdhā. Trial, examination, inquiry; விசாரணை. (P. T. L.) |
| சோதிசாத்திரம் | cōti-cāttiram n. <>jyōti+. Astronomy; ககோளசாத்திரம். Mod. |
| சோதிட்டம் | cōtiṭṭam n. Trifle, very little; மிகவற்பம். (யாழ். அக.) |
| சோதிடத்தேவர் | cōtiṭa-t-tēvar n. <>jyōtiṣa+. (Jaina.) A class of gods; ஒரு சார் தேவசாதியார். வாய்தல் சோதிடத்தேவர்காப்ப (மேருமந். 1060). |
| சோதிடி | cōtiṭi n. <>சோதிடன். Astrologer; சோதிடன். (தத்துவப். 182, உரை.) |
| சோதிடோப்பரிகை | cōtiṭōpparikai n. <>சோதிடம்+உப்பரிகை. Observatory; கிரகநட்சத்திரங்களின் கதிகளை ஆராய்தற்குச் சாதகமாகக் கட்டப்பட்டிருக்குங் கோபுரம். (M. Navi. 55.) |
| சோதிப்பு | cōtippu n. <>சோதி-. Examination; பரிசோதனை. Pond. |
| சோதிர்லோகம் | cōtir-lōkam n. <>jyōtir-lōka. (Jaina.) One of the seven worlds; எழுவகையுலகுளொன்று. (திருக்கலம், 6, உரை.) |
| சோதிராங்கம் | cōtirāṅkam n. <>jyōtir-āṅga. A kalpataru whose splendour easts all other bright objects into shade; எல்லா ஒளியையு மடக்கும் ஒளியை வீசுங் கற்பதரு. (தக்கயாகப். 757, குறிப்பு.) |
| சோமசுந்தரம் | cōmacuntaram n. (Mus.) A specific melody-type; இராகவகை. (சங். சந்.) |
| சோமதாரி | cōma-tāri n. <>சோமன்+. Rocksalt; இந்துப்பு. (யாழ். அக.) |
| சோய்வு | cōyvu n. prob. சோர்-. Languor; சோர்வு. (யாழ். அக.) |
| சோலா | cōlā n. cf. cōla. A kind of corset; முலைக்கச்சுவகை. Pond. |
| சோலாந்திரம் | cōlāntiram n. Hard task; கஷ்டமான வேலை. Nā. |
| சோழிசொங்கமான் | cōḻi-coṅkamāṉ n. <>சோழி+. Cowries, bag, etc., as the belongings of a paratēci; பரதேசிக்குரிய பை சோழி முதலிய அடையாளங்கள். Colloq. |
| சோழியன்காசு | cōḻiyaṉ-kācu n. <>சோழியன்+. An ancient coin; பழைய நாணயவகை. (சரவண. பணவிடு. 56.) |
| சோழியன்வெட்டு | cōḻiyaṉ-veṭṭu n. <>id.+. An ancient coin; பழைய நாணயவகை. (பணவிடு. 134.) |
| சோளியல் | cōḷiyal n. <>U. jōlnī. Bag, pouch; சோளிகை. (நெல்விடு.) |
| சோற்றடைப்பு | cōṟṟaṭaippu n. <>சோறு+. Endowment for free feeding; அன்னதானக் கட்டளை. சோற்றடைப்புக்கு உடலாம் போனகப் பழநெல் (S. I. I. vii, 299). |
| சோற்றுப்புரை | cōṟṟu-p-purai n. <>id.+. Kitchen; மடைப்பள்ளி. சோற்றுப்புரை மணியஞ் சூரியன் (தெய்வச். விறலிவிடு. 388). |
| சோற்றுமுத்து | cōṟṟu-muttu n. <>id.+. Artificial peral; போலிமுத்து. Loc. |
| சோறு | cōṟu n. Paste used in drums; மிருதங்கத்தின் நடுப்பாகத்திடற் பூசுங் கலவைச்சாந்து. (கலைமகள், xii, 401.) |
