Word |
English & Tamil Meaning |
|---|---|
| ஆரிடலிங்கம் | āriṭa-liṅkam n. <>id.+. Liṅga established by Rṣis; இருடிகளால் தாபிக்கப்பட்ட சிவலிங்கம். (சைவச. பொது. 431.) |
| ஆரிடை | āriṭai n. <>அரு-மை + இடை. Difficult or rugged path; அரியவழி. புலம்புகொளாரிடை (கலித். 4). |
| ஆரிய | āriya adj. <>id. Little, delicate; சிறிய. ஆரிய விடைதன் மாண்டவழகினைக் காட்ட (திருவிளை. மாயப். 21). |
| ஆரியக்கூத்து | āriya-k-kūttu n. <>ārya+. Dancing with poles on ropes, acrobatic feats of an aboriginal people called āriyar; கழைக் கூத்து. ஆரியக்கூத் தாடினாலும் காரியத்திற் கண்ணாயிரு. |
| ஆரியகம் | āriyakam n. cf. ஆலியகம். Small Indian ipecacuanha. See சிறுகுறிஞ்சா. (மூ. அ.). |
| ஆரியகுச்சரி | āriya-kuccari n. <>ārya+gurjjarī. A secondary melody-type of the agricultural tracts; மருதயாழ்த்திறவகை. (பிங்.) |
| ஆரியத்திரிவு | āriya-t-tirivu n. <>id.+. Sanskrit tadbhava. See தற்பவம். (உரி. நி.) |
| ஆரியநாடு | āriya-nāṭu n. <>id.+. 1. See ஆரியாவர்த்தம். . 2. A region including Daṇda-kāraṇya; |
| ஆரியப்பாவை | āriya-p-pāvai n. <>id.+. Kind of puppet show; பாவைக்கூத்துவகை. (W.) |
| ஆரியப்பிராமணர் | āriya-p-pirāmaṇar n. <>id.+. A sect of Brāhmans in Ramēswaram who have certain rights in the temple and are believed to be immigrants from N. India; இராமேசுவரத்திற் குடியேறியுள்ள ஒருவகைப்பிராமணர். |
| ஆரியப்பூமாலை | āriya-p-pūmālai n. The gay, young, unruly wife of Kāttavarāyaṉ, or any woman like her; அடங்காப்பெண். (W.) |
| ஆரியபடலம் | āriya-paṭalam n. <>ārya+. An ancient work which was named after its original; முதனூலாற் பெயர்பெற்ற ஒரு பழைய நூல். (நன். 48, மயிலை.) |
| ஆரியபூமி | āriya-pūmi n. <>id.+. Land of the Aryas. See ஆரியாவர்த்தம . |
| ஆரியம் 1 | āriyam n. Ragi, cereal, Cleusive coracana; கேழ்வரகு. (G.Sa.D. i, 217.) |
| ஆரியம் 2 | āriyam n. <>ārya. 1. Sacred land of the Aryas; ஆர்யாவர்த்தம். (அக. நி.) 2. Sanskrit, the language of the Aryas; |
| ஆரியமொழி | āriya-moḻi n. <>id.+. Sanskrit, the language of the Aryas; வடமொழி. |
| ஆரியவராடி | āriya-varāṭi n. <>id.+. Variety of varāṭi, a melody-type; வராடிவகை. (திவா.) |
| ஆரியவாசியம் | āriya-vāciyam n. Bishop's weed. See ஓமம். (மூ.அ.) |
| ஆரியவேளர்கொல்லி | āriya-vēḷar-kolli n. A secondary melody-type of the pasture tract; செவ்வழி யாழ்த்திறவகையு ளொன்று. (பிங்.) |
| ஆரியவேளாகொல்லி | āriya-vēḷā-kolli n. See ஆரியவேளர்கொல்லி. (W.) |
| ஆரியன் 1 | āriyaṉ n. <>ārya. 1. One who is an Arya by race; ஆரியவகுப்பினன். ஆரியன்கண்டாய் தமிழன்கண்டாய் (தேவா. 844,5). 2. Inhabitant of Aryāvarta; 3. Worthy, respectable man, venerated person; 4. Guru, spiritual preceptor; 5.Scholar, learned man, sage; 6. Teacher; 7. The god Aiyaṉār; |
| ஆரியன் 2 | āriyaṉ n. prob. anārya. Barbarian, foreigner, aborigines; மிலேச்சன். (பிங்.) |
| ஆரியாங்கனை | āriyāṅkaṉai n. <>ārya+ anganā. Jaina woman who renounces family life and enters the order of ascetics; இல்லறத்தினின்று துறவுபூண்ட சைனதவப்பெண். கணவனிற்றுறவின் மன்னு மாரியாங்கனைகள் (திருவிளை. சமணரை. 17). |
| ஆரியாவர்த்தம் | āriyāvarttam n. <>id.+. ā-varta. The tract of country in India lying between the Himālayas and the Vindhya mountains, the sacred land of the Aryas; இமயத்துக்கும் விந்தத்துக்கும் இடையிலுள்ள தேசம். |
| ஆரியை | āriyai n. <>āryā. 1. Pārvatī; பார்வதி. (பிங்.) 2. Durga; |
| ஆரின்கண்ணியன் | āriṉ-kaṇṇiyaṉ n. <>ஆர்6+. Cōḻā king, so styled because he wore the royal bauhinia flower; சோழன். (பிங்.) |
| ஆரின்மாலையன் | āriṉ-mālaiyaṉ n. See ஆரின்கண்ணியன். (சூடா.) |
| ஆரிஷப்பிரதிஷ்டை | āriṣa-p-piratiṣṭai n. <>ārṣa+. Consecration of an idol by Rṣi or sage; இருடிகள் செய்தல் பிரதிஷ்டை. |
| ஆரீதம் | ārītam n. <>hārita. 1. Green pigeon. See பச்சைப்புறா. ஆரீதம் புக்குலா யுலைதருமலய வெற்பு (இரகு. திக். 119). 2. A text book of Hindu law ascribed to the Rṣi Hārīta; |
| ஆருகதம் 1 | ārukatam n. <>ārhata. Jainism; சைனசமயம். (திவா.) |
| ஆருகதம் 2 | ārukatam n. cf. rājārhā. Jamaṉ plum. See நாவல். (பிங்.) |
