Word |
English & Tamil Meaning |
|---|---|
| குறைக்கொள்ளி | kuṟai-k-koḷḷi, n. <>id.+. 1. [K. koṟakoḷḷi.] Fire brand partially consumed; பாதிவெந்த கட்டை. 2. Imp that is believed to set fire to houses; |
| குறைகுடம் | kuṟai-kuṭam, n. <>குறை1-+. Lit., a pot half filled with water a self conceited person, lacking in sound education and good manners, opp. to niṟai-kuṭam; கல்வி கேள்விகளால் நிரம்பாதோன். அவன் ஒரு குறைகுடம். |
| குறைகொள்(ளு) - தல் | kuṟai-koḷ-, v. intr. <>குறை+. 1. To take a thing amiss; to be piqued; to feel aggrieved; to complain; மனக்குறையைப் பாராட்டுதல். 2. To represent one's wants needs; |
| குறைகோள் | kuṟai-kōḷ, n. <>id. +. Begging, petitioning, mendicancy; யாசிக்கை. (சூடா.) |
| குறைச்சல் | kuṟaiccal, n. <>குறை1-. Colloq. 1. [K. koṟaṭe, M. kuṟaccal.] Deficiency; scarcity, as of an article; curtailment; குறைவு. அவனுக்குச் செலவு குறைச்சல். 2. Discredit, disparagement; |
| குறைச்சால் | kuṟai-c-cāl, n. <>குறை+. Balk in ploughing; உழவுநிலத்தில் சாலோடாத இடம். (W.) |
| குறைசெய் - தல் | kuṟai-cey-, v. tr. <>id. +. 1. To treat with sidrepect; மரியாதைத் தாழ்வு பண்ணுதல். 2. To cut off, disfigure by cutting off; |
| குறைசொல்(லு) - தல் | kuṟai-col-, v. intr. <>id. +. 1. To complain, state grievances, pray for redress, express dissatisfaction; மனத்திலுள்ள குறையைப் பிறரறியக் கூறுதல். 2. To represent one's wants; 3. To charge iwth fault, censure, criticise, blame; |
| குறைஞ்சால் | kuṟai--cāl, n. <>id. +. See குறைச்சால். (யாழ். அக.) . |
| குறைத்தலை | kuṟai-t-talai, n. <>id. +. Headless body, believed to dance ont he battle field; தலையில்லாத பிணம். குரங்குபட மேதினிகுறைத்தலை பட (கம்பரா. யுத்த. மந்திரப். 61). |
| குறைதீர் - தல் | kuṟai-tīr-, v. intr. <>id. +. 1. To have wants supplied to be satisfied; மனக்குறை நீங்குதல்.--குறைதீர்ந்த கொடையே பகையை யுறவாக்கும் (காஞ்சிப்பு. புராணவர. 15). 2. To be finished, completed; |
| குறைநய - த்தல் | kuṟai-naya-, v. intr. <>id. +. See குறைதேர்-. கொலைவேற்கண்ணி குறைநயந்தது (திருக்கோ. 158, கொளு). . |
| குறைநரம்பு | kuṟai-narampu, n. <>குறை1-+. Lit., lute with less than the normal number of strings. A musical mode deficient in notes, opp. to niṟainarampu; குறைந்த ஸ்வரமுள்ள யாழ்த்திறம். (திவா.) |
| குறைநாள் | kuṟai-nāḷ, n. <>குறை+. Remaining portion of the day, month, year or life-time; நாள் மாதம் வருஷம் ஆயுள் இவற்றில் மீதியிருக்குங் காலம். குறைநாளும் கழிக்கவேணும். |
| குறைநிறை | kuṟai-niṟai, n. <>id. +. 1. Defect and excess; ஏற்றக்குறைவு. 2. Domestic wants and comforts; |
| குறைநேர் - தல் | kuṟai-nēr-, v. intr. <>id. +. To consent to make up one's wants; குறையைநீக்க உடன்படுதல். முனியுமக் குறைநேர்ந்தான் (பாரத. சம். 10). |
| குறைநோய் | kuṟai-nōy, n. <>குறை2-+. Leprosy, as eating away one's limbs; குஷ்டரோகம். |
| குறைப்பக்கம் | kuṟai-p-pakkam, n. <>குறை+. Dark fortnight, period of waning moon; தேய்பிறை நாள். |
| குறைப்பட்டவர் | kuṟai-p-paṭṭavā, n. <>குறைப்படு-. Lit., persons bereaved of their near relations, Persons who have suffered great affliction; குடும்பத்தில்நேர்ந்த காவுமுதலியவற்றால் துக்கப்பட்டவர். |
| குறைப்பட்டவள் | kuṟai-p-paṭṭavaḷ, n. <>id. +. Widow; கைம்பெண். |
| குறைப்படு - தல் | kuṟai-p-paṭu-, v. intr. <>குறை+. To be displeased, discontented; மனக்குறை யுறுதல். குறைப்பட்டுக்கொண்டிருகிறான். |
| குறைப்பிணம் | kuṟai-p-piṇam, n. <>id. +. Half burnt corpse; அரைகுறையாய் எரிந்துகிடக்கும் சவம். குய்ம்மனத்தாளர் குறைப்பிணங்காட்டி (பெருங். இலாவாண.19, 7). |
| குறைப்பிராணன் | kuṟai-p-pirāṇaṉ, n. <>id. +. Life almost extinct; குற்றுயிர். |
| குறைப்பிள்ளை | kuṟai-p-piḷḷai, n. <>id. +. Undeveloped foetus delivered before time; பருவம்நிரம்புமுன்பெற்ற கருப்பிண்டம். அவள் குறைப்பிள்ளை பெற்றாள். |
| குறைப்பேர் | kuṟai-p-pēr, n. <>id. +. 1. Other persons, rest, as of a company; மற்றவர். நீ வந்தாயே, குறைப்பேரெல்லாம் எங்கே? Colloq. 2. Abberviated name, as for; |
