
யோகயுக்தோ விஷுத்தாத்மா விஜிதாத்மா ஜிதேந்த்ரிய:। ஸர்வபூதாத்மபூதாத்மா குர்வந்நபி ந லிப்யதே॥ 5.7 ॥ |
செயலை யோகமாக செய்பவன், தூய மனத்தை உடையவன், உடம்பை தன் கட்டுபாட்டில் வைத்திருப்பவன், புலன்களை வென்றவன், தன் ஆன்மாவை எல்லா உயிர்களுக்கும் ஆன்மாவாக காண்பவன் செயலில் ஈடுபட்டாலும் அதனால் பந்தத்திற்கு உள்ளாவதில்லை .
நைவ கிம்சித்கரோமீதி யுக்தோ மந்யேத தத்த்வவித்। பஷ்யஞ்ஷ்ருண்வந்ஸ்ப்ருஷஞ்ஜிக்ரந்நஷ்நம்கச்சந்ஸ்வபந்ஷ்வஸந்॥ 5.8 ॥ ப்ரலபந்விஸ்ருஜந்க்ருஹ்ணந்நுந்மிஷந்நிமிஷந்நபி। இந்த்ரியாணீந்த்ரியார்தேஷு வர்தந்த இதி தாரயந்॥ 5.9 ॥ |
உண்மையை உணர்ந்து செயலில் ஈடுபடுபவன் பார்த்தாலும் கேட்டாலும், தொட்டாலும், முகர்தாலும், உண்டாலும், நடந்தாலும், தூங்கினாலும், சுவாசித்தாலும், பேசினாலும், இயற்கை கடன்களை கழித்தாலும் , கண் மூடினாலும் புலன்கள் பொருட்களில் செயல்படுகின்றன என்று புரிந்துகொண்டு “ நான் எதையும் செய்யவில்லை “ என்று நினைக்க வேண்டும்.
ப்ரஹ்மண்யாதாய கர்மாணி ஸங்கம் த்யக்த்வா கரோதி ய:। லிப்யதே ந ஸ பாபேந பத்மபத்ரமிவாம்பஸா॥ 5.10 ॥ |
இறைவனில் தன்னை சமர்ப்பித்து , பற்றை விட்டு வேலை செய்பவன், நீரினால் தாமரை இலை நனைக்கபடாதது போல், பாவத்தால் பாதிக்க படுவதில்லை.
காயேந மநஸா புத்த்யா கேவலைரிந்த்ரியைரபி। யோகிந: கர்ம குர்வந்தி ஸங்கம் த்யக்த்வாத்மஷுத்தயே॥ 5.11 ॥ |
செயலில் செயலின்மை காண்கின்ற கர்மயோகிகள் பற்றை விட்டு மனத்தூய்மைக்காக உடல், மனம், அறிவு என்று வெறுமனே புலன்களால் வேலை செய்கிறார்கள்.
யுக்த:கர்மபலம் த்யக்த்வா ஷாந்திமாப்நோதி நைஷ்டிகீம்। அயுக்த: காமகாரேண பலே ஸக்தோ நிபத்யதே॥ 5.12 ॥ |
மனம் அடங்கபெற்றவன் பலனை எதிர்பாராமல் வேலை செய்வதால் தடையற்ற அமைதி பெறுகிறான். மனம் அடங்க பெறாதவன் ஆசை வசப்பட்டு, பலனில் பற்று வைத்து அதன் காரணமாக பந்தத்திற்கு உள்ளாகிறான்.