
ஸர்வகர்மாணி மநஸா ஸம்ந்யஸ்யாஸ்தே ஸுகம் வஷீ। நவத்வாரே புரே தேஹீ நைவ குர்வந்ந காரயந்॥ 5.13 ॥ |
சுயகட்டுப்பாடு உடையவன் எல்லா செயல்களையும் மனத்தால் துறந்துவிட்டு எதையும் செய்யாதவனாக, எதையும் செயவிக்காதவனாக, ஒன்பது வாசல் கொண்ட நகரமான உடம்பில் சுகமாக தங்கியிருக்கிறான்.
ந கர்த்ருத்வம் ந கர்மாணி லோகஸ்ய ஸ்ருஜதி ப்ரபு:। ந கர்மபலஸம்யோகம் ஸ்வபாவஸ்து ப்ரவர்ததே॥ 5.14 ॥ |
செயல்கள், செயல்களுக்கான பொறுப்பு, செயலின் பலன்களை ஏற்றல் என்று எதையும் இறைவன் நமக்காக வைக்கவில்லை. அனைத்தையும் இயற்கையே செய்கிறது.
நாதத்தே கஸ்யசித்பாபம் ந சைவ ஸுக்ருதம் விபு:। அஜ்ஞாநேநாவ்ருதம் ஜ்ஞாநம் தேந முஹ்யந்தி ஜந்தவ:॥ 5.15 ॥ |
எங்கும் நிறைந்தவரான இறைவன் யாருடைய பாவத்தையோ புன்னியத்தையோ ஏற்றுகொல்வதில்லை. அறிவு, அறியாமையால் மூடப்பட்டு இருக்கிறது. அதனால் நாம் மன மயக்கம் அடைகிறோம்.
ஜ்ஞாநேந து ததஜ்ஞாநம் யேஷாம் நாஷிதமாத்மந:। தேஷாமாதித்யவஜ்ஜ்ஞாநம் ப்ரகாஷயதி தத்பரம்॥ 5.16 ॥ |
ஆன்ம ஞானத்தால் யாருடைய அறியாமை அழிக்கபட்டதோ அவர்களது ஞானம், சூரியன் மற்ற பொருட்களை காண செய்வது போல் பரம்பொருளை காட்டுகிறது.
தத்புத்தயஸ்ததாத்மாநஸ்தந்நிஷ்டாஸ்தத்பராயணா:। கச்சந்த்யபுநராவ்ருத்திம் ஜ்ஞாநநிர்தூதகல்மஷா:॥ 5.17 ॥ |
ஆன்மாவிலேயே புத்தியை நிலைக்கசெய்த, ஆன்மாவையே தாங்களாக உணர்கின்ற, ஆன்மாவிலேயே ஈடுபடுகின்ற, ஆன்மாவையே புகலிடமாக கொண்ட, ஞானத்தால் குற்றங்களை போக்கிக்கொண்டவர்கள் மீண்டும் பிறப்பதில்லை.
வித்யாவிநயஸம்பந்நே ப்ராஹ்மணே கவி ஹஸ்திநி। ஷுநி சைவ ஷ்வபாகே ச பண்டிதா: ஸமதர்ஷிந:॥ 5.18 ॥ |
கல்வியும் பணிவும் பொருந்திய சான்றோனிலும், பசுவிலும், யானையிலும், நாயிலும், நாயை சமைத்து உண்பவனிலும் மகான்கள் சாமநோக்கு உடையவர்களாக இருக்கிறார்கள்.