
லபந்தே ப்ரஹ்மநிர்வாணம்ருஷய: க்ஷீணகல்மஷா:। சிந்நத்வைதா யதாத்மாந: ஸர்வபூதஹிதே ரதா:॥ 5.25 ॥ |
(துன்பம் – இன்பம், சூடு – குளிர் போன்ற) இருமைகளிலிருந்து விடுபட்ட, புலன்களை வென்ற, எல்லா உயிர்களின் நன்மையில் மகிழ்கின்ற முனிவர்கள் பாவங்கள் நீங்கபெற்று பிரமானந்தத்தை அடைகிறார்கள்.
காமக்ரோதவியுக்தாநாம் யதீநாம் யதசேதஸாம்। அபிதோ ப்ரஹ்மநிர்வாணம் வர்ததே விதிதாத்மநாம்॥ 5.26 ॥ |
ஆசை, கோபம் ஆகியவற்றை விட்ட, மனம் அடங்கபெற்ற, ஆன்மாவை அறிந்த துறவியருக்கு மோட்சம் அருகில் இருக்கிறது.
ஸ்பர்ஷாந்க்ருத்வா பஹிர்பாஹ்யாம்ஷ்சக்ஷுஷ்சைவாந்தரே ப்ருவோ:। ப்ராணாபாநௌ ஸமௌ க்ருத்வா நாஸாப்யந்தரசாரிணௌ॥ 5.27 ॥ யதேந்த்ரியமநோபுத்திர்முநிர்மோக்ஷபராயண:। விகதேச்சாபயக்ரோதோ ய: ஸதா முக்த ஏவ ஸ:॥ 5.28 ॥ |
புற விஷயங்களை வெளியில் நிறுத்தி, பார்வையை புருவ நடுவில் நிறுத்தி, நாசிகளின் வழியாக சஞ்சரிக்கின்ற பிராண அபானன்களை சமபடுத்தி புலன், மனம், புத்தி ஆகியவற்றை வசபடுத்தி, ஆசை பயம், கோபம் ஆகியவற்றை விட்டு முக்தியை நாடுகின்ற யோகி முக்தனே ஆவான்.
போக்தாரம் யஜ்ஞதபஸாம் ஸர்வலோகமஹேஷ்வரம்। ஸுஹ்ருதம் ஸர்வபூதாநாம் ஜ்ஞாத்வா மாம் ஷாந்திம்ருச்சதி॥ 5.29 ॥ |
வேள்வி, தவம் ஆகியவற்றை அனுபவிப்பவன் எல்லா உலகங்களுக்கும் தலைவன், எல்லா உயிர்களின் நண்பன் என்று என்னை அறிபவன் அமைதியை அடைகிறான்.
ஓம் தத்ஸதிதி ஸ்ரீமத் பகவத்கீதாஸூபநிஷத்ஸு ப்ரஹ்மவித்யாயாம் யோகஷாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுநஸம்வாதே ஸம்ந்யாஸயோகோ நாம பம்சமோ அத்யாய:॥ 5 ॥ |
ஓம் தத் ஸத் - ப்ரம்ம வித்யை, யோக ஸாஸ்த்ரம், உபநிஷத்து எனப்படும் ஸ்ரீமத்பகவத்கீதையாகிய ஸ்ரீக்ருஷ்ணனுக்கும் அர்ஜூனனுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடலில் 'கர்ம சன்யாச யோகம்' எனப் பெயர் படைத்த ஐந்தாவது அத்தியாயம் நிறைவுற்றது.