
இஹைவ தைர்ஜித: ஸர்கோ யேஷாம் ஸாம்யே ஸ்திதம் மந:। நிர்தோஷம் ஹி ஸமம் ப்ரஹ்ம தஸ்மாத் ப்ரஹ்மணி தே ஸ்திதா:॥ 5.19 ॥ |
யாருடைய மனம் சமநிலையில் உறுதியாக இருக்கிறதோ, அவர்கள் இந்த பிறவியிலேயே பிறப்பு – இறப்பு என்னும் சுழற்சியை வென்றுவிட்டவர்கள். எனவே குறைகள் அற்றவரும் சமநோக்கு உடையவருமான இறைவனில் நிலைபெற்று இருக்கிறார்கள்.
ந ப்ரஹ்ருஷ்யேத்ப்ரியம் ப்ராப்ய நோத்விஜேத்ப்ராப்ய சாப்ரியம்। ஸ்திரபுத்திரஸம்மூடோ ப்ரஹ்மவித் ப்ரஹ்மணி ஸ்தித:॥ 5.20 ॥ |
புத்தி விழித்தெழபெற்ற, மனமயக்கம் அற்ற, இறைவனை அறிந்த, இறைவனில் நிலைத்திருக்கின்ற ஒருவன் விரும்புவது கிடைப்பதால் மகிழ்வதும் இல்லை, விரும்பாதது கிடைப்பதால் துயருவதும் இல்லை.
பாஹ்யஸ்பர்ஷேஷ்வஸக்தாத்மா விந்தத்யாத்மநி யத்ஸுகம்। ஸ ப்ரஹ்மயோகயுக்தாத்மா ஸுகமக்ஷயமஷ்நுதே॥ 5.21 ॥ |
புற விஷயங்களில் பற்றில்லாத அவன் , ஆன்மாவில் எந்த இன்பம் உண்டோ அந்த இன்பத்தை அடைகிறான். இறைவனுடன் ஒன்றுபட்ட நிலையில் குறைவற்ற இன்பத்தை அடைகிறான்.
யே ஹி ஸம்ஸ்பர்ஷஜா போகா து:கயோநய ஏவ தே। ஆத்யந்தவந்த: கௌந்தேய ந தேஷு ரமதே புத:॥ 5.22 ॥ |
குந்தியின் மகனே ! புலன்களின் தொடர்பால் தோன்றிய சுகங்கள் துக்கதிற்கே காரணமானவை, ஆரம்பமும் முடிவும் உடையவை. அவற்றில் ஞானிகள் இன்புருவதில்லை.
ஷக்நோதீஹைவ ய: ஸோடும் ப்ராக்ஷரீரவிமோக்ஷணாத்। காமக்ரோதோத்பவம் வேகம் ஸ யுக்த: ஸ ஸுகீ நர:॥ 5.23 ॥ |
உடம்பை விடுவதற்கு முன்பு இங்கேயே ஆசை, கோபம் போன்றவற்றால் எழுகின்ற வேகத்தை எதிர்கொள்வதற்கு வல்லவன் யாரோ அவனே யோகி, அவனே இன்பத்தை அனுபவிப்பான்.
யோ அந்த:ஸுகோ அந்தராராமஸ்ததாந்தர்ஜ்யோதிரேவ ய:। ஸ யோகீ ப்ரஹ்மநிர்வாணம் ப்ரஹ்மபூதோ அதிகச்சதி॥ 5.24 ॥ |
யார் தன்னில் இன்பம் கான்கின்றானோ, தன்னில் நிலை பெற்றுள்ளானோ, தன்னுள் ஒளியை காண்கின்றானோ, அந்த யோகி மட்டுமே , தானே பிரம்மமாகி பேரானந்தத்தை அடைகிறான்.