Word |
English & Tamil Meaning |
|---|---|
| கடலிறஞ்சி | kaṭal-iṟaci n. <>id. +. Seaside-plum, l.sh., Ximenia russeliana; கடற்கரை மரவகை (பதார்த்த. 901.) |
| கடலிறாஞ்சி | kaṭal-iṟāci n. <>id. +. See கடலிறஞ்சி. . |
| கடலிறைவன் | kaṭal-iṟaivaṉ n. <>id. +. Varuṇa, the god of the sea; வருணன். (உபதேச கா உருத்திராக்க. 245.) |
| கடலுடும்பு | kaṭal-uṭumpu n. <>id. +. A kind of sea-fish; கடல்மீன்வகை. (W.) |
| கடலுப்பு | kaṭal-uppu n. <>id. +. (M. kadal-uppu.] Sea-salt; கறியுப்பு, கர்ப்பூரம் போலக்கடலுப் பிருந்தாலும் (நீதிவெண். 33) |
| கடலுராய்ஞ்சி | kaṭal-urāyci n. <>id. +. A sea-bird; கடற்பறவை வகை. (W.) |
| கடலுல்லம் | kaṭal-ullam n. <>id. +. A kind of hilsa fish; உல்லமீன் வகை. (W.) |
| கடலெடு - த்தல் | kaṭal-eṭu- v. intr. <>id. +. To overflow or encroach, as the sea; சமுத்திரம் பெருகுதல். (W.) |
| கடலெல்லை | kaṭal-ellai n. <>id. +. The earth, so called because it has the sea as its limit or boundary; உலகம். வெண்குடையின்னிழல் கடலெல்லை நிழற்றலால் (சீவக. 2580). |
| கடலெலி | kaṭal-eli n. <>id. +. A sea-fish; கடல்மீன்வகை. (W.) |
| கடலெள் | kaṭal-eḻ n. <>id. +. A species of sesame; எள்வகை. (W.) |
| கடலை | kaṭalai n. 1. [K. Tu. kadale, M. kadala.] Bengal-gram, s. sh., Cicer arietinum, one of nava tāṉiyam, q. v.; நவதானியத்தொன்று. நறு நெய்க்கடலை விசைப்ப (புறநா. 120, 14). 2. Indian Rhododendron, 1. sh., Melastoma malabaricum; |
| கடலைக்கட்டி | kaṭalai-k-kaṭṭi n. <>கடலை+. Small skin blisters resembling kaṭalai pulse; கடலையளவான ஒருவகைக் கொப்புளம். (சீவரட். 103.) |
| கடலைக்கம்பி | kaṭalai-k-kampi n. <>id. +. Narrow border for clothings, resembling kaṭalai; ஆடையின் ஒருவகைக்கரை. Madr. |
| கடலைக்காய் | kaṭalai-k-kāy n. <>id. +. Groundnut, peanut; நிலக்கடலைப்பருப்பு. |
| கடலைக்காய்மணி | kaṭalai-k-kāy-maṇi n. <>id. +. 1.See கடலைக்காய். . 2. See கடலை மணி. |
| கடலைக்கொட்டை | kaṭalai-k-koṭṭai n. <>id. +. See கடலைக்காய். . |
| கடலைப்பணியாரம் | kaṭalai-p-paṇiyaram n. <>id. +. Cone-shaped cake of fried kaṭalai mixed with melted sugar; பருப்புத்தேங்காய் என்னும் பட்சணம். Loc. |
| கடலைப்புளிப்பு | kaṭalai-p-puḷippu n. <>id. +. Vinegar made by collecting the dew drops of water on Bengal-gram leaves; கடலைச் செடியின் மேல்விழும் பனிநீராற் செய்யப்படும் காடி வகை. (இங். வை. 77.) |
| கடலைமணி | kaṭalai-maṇi n. <>id. +. A kind of necklace with beads resembling Bengal gram pulse; கடலைவித்துப்போலும் பொன்மணி களாலான கழுத்தணிவகை. |
| கடலோசை | kaṭal-ōcai n.<> கடல் +. Lit., empty noise, as the roar of the sea; senseless jumble of words, balderdash; வெற்றோசை. பிரதிஜ்ஞை கடலோசை யாகாதபடி (திவ். திரு நெடுந். 21, வ்யா.). |
| கடலோடி | kaṭal-ōṭi n. <>id. +. Mariner, seaman; சமுத்திரப்பிரியாணி. (சிலப். 2, 2, அரும்.) |
| கடலோடு - தல் | kaṭal-ōṭu- v. intr. <>id. +. To go on a voyage by sea; சமுத்திரயாத்திரைசெய்தல், திரைகடாலோடியுந் திரவியந்தேடு (கொன்றைவே.). |
| கடவஞ்சி | kaṭavaci n. A large wooden rack on four or more legs for keeping house-hold utensils etc.; பண்டங்களை வைக்கும்படி அமைக்குஞ் சட்டமிட்ட கால்களுள்ள பீடம். Loc. |
| கடவது | kaṭavatu n. <>கட-மை. That which should be done; duty; செய்யவேண்டியது. அடியேன் கடவதென் (தேவா. 1111, 7). |
| கடவல்லி | kaṭa-valli n. <>Kaṭha-valli Name of an Upaniṣad; நூற்றெட்டுபநிடதங்களுள் ஒன்று. |
| கடவன் | kaṭavaṉ n. <>கட-மை. 1. One who is under obligation; கடமைப்பட்டவன். கடவன் பாரி கைவண்மையே (புறநா. 106). 2. Master, lord; |
| கடவாத்தியம் | kaṭa-vāttiyam n.<>ghaṭa +. Earthen pot used as a musical instrument of percussion; இசைக்கருவியாக உபயோகிக்கும் மட்குடம். (பரத, பா, 23.) |
| கடவான் | kaṭavāṉ n. prop. கட-. [kadagu.] Channel cut through the ridge of a paddy field to let the surplus water pass away, or for allowing water to run on to the adjoining field; செய்வரப்பில் கழிவுநீர் செல்லுதற்கு வெட்டபட்ட நீர் மடை. (J.) |
| கடவு 1 - தல் | kaṭavu- v. tr. 1. To cause to go; to ride, drive, as an animal or vehicle; செலுத்துதல். ஆனந்த மாக் கடவி (திருவாச. 36, 4). 2. To urge; 3. To despatch; to discharge, as a missile; 4. cf. கடாவு-. To enquire; |
