Word |
English & Tamil Meaning |
|---|---|
| கடத்தேறு - தல் | kaṭa-t-tēṟu v. intr. <>id. +. [ T. kadateṟu.] See கடைத்தேறு-. . |
| கடதாசி | kaṭatāci n. <>Port. cartaz. 1. Paper; காகிதம். 2. Letter |
| கடதீபம் | kaṭa-tīpam n. <>ghaṭa +. Lamp fixed on a brass pot and waved before an idol; குடவிளக்கு. |
| கடந்தேறு - தல் | kaṭantēṟu v. intr <>கட- + ஏறு-. 1. To pass through, traverse; கடந்து போதல். ஓராழி ... இருதாளளவெனக் கடந்தேறும் (கம்பரா. இரணிய. 3). 2. To be saved; to overcome obstacles; to get over difficulties; 3. To rise to a higher plane, as in spiritualism; |
| கடப்பநெல் | kaṭappa-nel n. prob. கடம்பு+. 1. A kind of dark paddy, maturing in three months; கருங்குறுவை நெல். (J.) 2. A species of Kuṟuvai paddy, maturing in four months; |
| கடப்பளி | kaṭappaḷi n. prob. கட-மை +அழி- (J.) 1. Knave; ஒழக்கமில்லாதவன். 2. Miser, close-first person; |
| கடப்பாட்டாளன் | kaṭappāṭṭāḻaṉ n. <>கடப்பாடு+ஆள்-. 1. He who does what he knows to be his duty; கடமையறிந்து அதனைச் செய்பவன். 2. Public benefactor; |
| கடப்பாடு | kaṭa-p-pāṭu n. <>கடம் + படு-. 1. Duty, obligation; கடமை. கைத்திருத் தொண்டு செய் கடப்பாட்டினார் (பெரியபு. திருக்கூட். 5). 2. Established custom, order, usage; 3. Gift; 4. Liberality, munificence; 5. Abundance, plenty; |
| கடப்பாரை | kaṭa-p-pārai n. <>T. gadda +. See கட்டபாரை. . |
| கடப்பு 1 | kaṭappu n. <>கட-. 1. Passing over; கடக்கை. விற்கடப்பரும் விறலிராகவன் (சேதுபு. சேதுவ. 6). 2. [ K. kadakal.] Wicket or narrow passage in a lane, wall or hedge for the use of people only but not for cattle; 3. That which is abundant; large quantity; |
| கடப்பு 2 | kaṭappu n. See கடப்பநெல். . |
| கடப்புக்கால் | kaṭappu-k-kāl n. <>கட- +. 1. Bandy legs; வளைந்தகால். (J.) 2. Club-foot; 3. Wooden posts with holes in them for cross-bars, fixed at the entrance of cowstalls; |
| கடப்பைக்கல் | kaṭappai-k-kal n. <>கடப்பை +. Cuddappah-slab; கடப்பைப் பிரதேசத்து உண்டாகும் ஒருவகைக் கற்பலகை. |
| கடப்பைமரம் | kaṭappai-maram n. Chinese Dwarf Bamboo, 1. sh., Bambusa nana; சிறுமூங்கில் வகை. |
| கடபடமெனல் | kaṭa-paṭam-eṉal n. <>ghaṭa + paṭa. Onom. expr. used to signify metaphysical jargon, the high sounding verbiage generally indulged in by dialecticians to confound people; சப்தசாலத்தால் மருட்டிப் பேசுதற்குறிப்பு. கற்றதுங் கேட்டதுந்தானே யேதுக்காகக் கடபடவென்றுருட்டுதற்கோ (தாயு. நின்றநிலை. 3) . |
| கடபடாவெனல் | kaṭapaṭā-v-eṉal n. <>U. garbarā+. Hullabaloo, bustling, sounding confusedly; ஓர் ஒலிக்குறிப்பு. |
| கடம் 1 | kaṭam n. <>கட-மை. [M. kadam.] 1. Debt; கடன். கடமுண்டுவாழாமை (இனி. நாற். 11). 2. Homage due to God; religious obligations; 3. Duty, proper conduct; 4. Right, justice; 5. See கடன். 1,4,6 to 12. |
| கடம் 2 | kaṭam n. prop. கட-. 1. Sin; பாவம். கடமுண்டார் கல்லாதவர் (திவ். இயற். 4, 52). 2. Forest; 3. cf. கதம். Anger; |
| கடம் 3 | kaṭam n.<> kaṭa. 1. Elephant's temples, from which a secretion flows; யானைக் கதுப்பு. (பிங்.) 2. Rut flow of a must elephant; 3. Rope; 4. Burning ground; 5. Hard, difficult path in a barren tract; |
| கடம் 4 | kaṭam n. <>kaṭha. Name of an Upaniṣdad; நூற்றெட்டுபநிடதங்களுள் ஒன்று. |
| கடம் 5 | kaṭam n. <>ghaṭa. 1. Waterpot, vessel; குடம். மலயந்தன்னிற் கடமுனிசேறலோடும் (கந்தபு. திருக்கல். 65). 2. Sign of Aquarius in the Zodiac; 3. Hand drum played on at both ends; 4. Dry measure = 2 kuṟuṇi; 5. Body, human or other; |
