Word |
English & Tamil Meaning |
|---|---|
| கட்டைப்பயிர் | kaṭṭai-p-payir n. <>id.+. Full-grown plant; முதிர்ந்த பயிர். |
| கட்டைப்பயிர்வெற்றிலை | kaṭṭai-p-payir-veṟṟilai n. <>id. +. Betel plucked from a full-grown creeper; முதுகால்வெற்றிலை. Loc. |
| கட்டைப்பவுன்காப்பு | kaṭṭai-p-pavuṉkāppu n.<>id. +. Gold bangle with a copper core; செப்புக்கட்டைமேல் பொன்தகடு வேய்ந்த காப்பு. |
| கட்டைப்புத்தி | kaṭṭai-p-putti n. <>id. +. Thick-skull,dull wit, stupidity; மழங்கின அறிவு. |
| கட்டைப்பொன் | kaṭṭai-p-poṉ n. <>id. +. Inferior or impure gold; மட்டமான பொன். (C. G.) |
| கட்டைபோடு - தல் | kaṭṭai-pōṭu- v. intr. <>id. +. Colloq. 1. To thwart, obstruct, hinder,prevent; தடைசெய்தல். 2. To faint or swoon from any cause; 3. To die; 4. To tamp loose earth to solidify as when metalling a roadway; |
| கட்டையடி - த்தல் | kaṭṭai-y-aṭi- v. intr. <>id. +. 1. To drive a wooden peg into the ground to tether an animal; முளைகடாவுதல். 2. To hurt one's foot against a stump; 3. To drive a wooden wedge into a plucked jack-fruit to ripen it; |
| கட்டையவிழ் - த்தல் | kaṭṭai-y-aviḻ- v. intr <>கட்டு+. To begin to spin a yarn; to commence uttering false stories; பொய்கூறத் தொடங்குதல் |
| கட்டையன் | kaṭṭaiyaṉ n. <>கட்டை. Short person குட்டையன். கட்டையன் வந்தானா? |
| கட்டையாடு | kaṭṭai-yāṭu n. <>id.+ A species of dwarf goat; பள்ளையாடு. Loc. |
| கட்டையிலேபோக | kaṭṭaiyil-ē-pōka int. <>id. +. Be. (he or you) cremated on a pyre, a curse; ஒருவகைச் சொல். |
| கட்டையிழைப்புளி | kaṭṭai-y-iḻaippuḷi n. <>id.+. Smoothing plane; மரத்தை இழைப்பதற்குரிய தச்சுக்கருவிகளி லொன்று. (C.E.M.) |
| கட்டைவாக்கு | kaṭṭai-vākku n. <>id. +. Dimness in a gem; இரத்தினத்தின் மங்கலொளி. (W.) |
| கட்டைவிரல் | kaṭṭai-viral n. <>id.+ Thumb; great toe; பெருவிரல் |
| கட்டைவெள்ளி | kaṭṭai-veḷḷi n. <>id. +. Inferior or impure silver; மட்டவெள்ளி. |
| கட்டைவைக்கை | kaṭṭai-vaikkai n. <>id. +. 1. Collecting the pebbles in hand in a game of jackstones, a kindergarten game with cubes; கொக்கான் விளையாட்டு. 2. Winning in the game of īṟṟeḻuttu-k-kavi-pāṭal; |
| கட்டோசை | kaṭṭōcai n. <>கட்டு+ஓசை. Loud report, tremendous noise; பேரொலி. கலப்புக்கட்டோசை (பிங்.). |
| கட்டோடு | kaṭṭōṭu adv. <>id. Utterly,absolutely,used with words implying destruction; முழதும். அவனுடைய உறவைக் கட்டோடு தொலைத்து விட்டார்கள் |
| கட்டோர் | kaṭṭōr n. <>கள்-. Thieves, robbers, கள்ளர். (பிங்.) |
| கட்படாம் | kaṭ-paṭām n. <>கண் + paṭa. Ornamental. fillet or frontlet for blindfolding an elephant; யானையின் முகத்தணியும் ஆடை. கடா அக்களிற்றின்மேற் கட்படாம் (குறள், 1087). |
| கட்பலம் 1 | kaṭpalam n. <>kaṭphala. Teak, 1. tr., Tectona grandis; தேக்கு. (மாலை.) |
| கட்பலம் 2 | kaṭ-palam n. prob. karṣaphala. Belleric Myrobalan; தான்றி. (மாலை.) |
| கட்பு | kaṭpu n. <>கள்- [ T.kalupu.] Weeding களைபறிக்கை. கட்பினோதை (மதுரைக். 258). |
| கட்புலம் | kaṭ-pulam n. <>கண்+. Sight, vision பார்வை. கடவுட் கோலங் கட்புலம் புக்கபின் (சிலப். 30,2) |
| கட்போன் | kaṭpōṉ n. <>கள்-. Thief களவுசெய்வோன். (சிலப். 5, 115.) |
| கட - த்தல் | kaṭa- 4 v. [T.kadasu, M. Tu. kada.] tr. 1. To pass through; to traverse, cross, as a river, a country; கடந்து போதல், கடக்கருங் கானத்து (நாலடி, 398). 2. To jump over, step over; 3. To exceed, excel, surpass transcend; 4.To transgress, disobey, contravene, violate, as a rule, a command, a custom; 5. To measure; 6. To keep clear of, get away from, escape from, as the world, the sea of births; 7. To openly resist; 8. To win, overcome, conquer, vanquish; 9. To destroy; 1. (Mus.) To deviate or slide from one note to many; 2. To go, proceed, pass, as time water, clouds, etc.; |
