Word |
English & Tamil Meaning |
|---|---|
| கடகசங்கிராந்தி | kaṭaka-caṅkirānti n. <>karkaṭaka+. The time when the sun enters the sign of Cancer; ஆடிமாதப் பிறப்பு. |
| கடகட - த்தல் | kaṭakaṭa- 11v. intr.<>கடகட Onom 1. To become loose, as teeth; நெகிழ்வடைதல். பல்லெல்லாங் கடகடத்துப்போயிற்று. 2. To rattle, as a pin in a jewel; |
| கடகடப்பு | kaṭakaṭappu n. <>கடகட-. Clatter, rattling, rumbling, clicking; ஒலியோடு அசைகை. |
| கடகடெனல் | kaṭakaṭeṉal n. <>id. See கடகடவெனல். . |
| கடகடவெனல் | kaṭakaṭa-v-eṉal n. Onom. 1. Clattering, rattling, rumbling, clicking; ஒலிக்குறிப்பு. (திவா.) 2. Sounding rapidly. expu. signifying rapidity; |
| கடகண்டு | kaṭakaṇṭu n. An ancient treatise on dancing; ஒரு பழைய நாடகநூல். (தொல்.பொ. 492, உரை.) |
| கடகத்தண்டு | kaṭaka-t-taṇṭu n. <>kaṭaka +. Palaquin; சிவிகை. (சிலப். 14, 126, உரை.) |
| கடகநாதன் | kaṭaka-nātaṉ n. <>id. +. Commander-in-chief; சேனாபதி. கடகநாதனுடனணிந்திருந்தனன் (பாரத. இரண்டாம். 6). |
| கடகம் 1 | kaṭakam n. 1. Large tray made of palmyra-stems; பனை யகணியால் முடையப்பட்ட பெரிய பெட்டி. (புறநா. 33, உரை.) 2. Vessel with a kind of spout; |
| கடகம் 2 | kaṭakam n.<>kaṭaka 1. Bracelet, armlet; கங்கணம், கடகஞ் செறித்த கையை (மணி. 6, 114). 2. (Nāṭya.) A gesture with one hand in which the tips of the thumb and of the forefinger are joined together and the other three fingers are held upright; 3. Circle, ring, wheel; 4. Shield; 5. Army; 6. Fortified wall; 7. Cuttack, the capital of Orissa; 8. Mountain side, ridge of a hill; 9. A river; |
| கடகம் 3 | kaṭakam n. <>karkaṭaka. 1. Cancer, a sign of the Zodiac; கர்க்கடகராசி. (பிங்.) 2. The fourth- Tamil month; |
| கடகம் 4 | kaṭakam n. <>ghaṭā. 1. Troop of elephants; யானைதிரள். (பிங்.) 2. A number; |
| கடகன் | kaṭakaṉ n. <>ghaṭaka 1. Agent, commissioner, middle-man; காரியத்தைக் கூட்டி வைப்பவன். (திவ். திருப்பா. அவ. பக். 18.) 2. A well-versed, proficient person; |
| கடகால் 1 | kaṭakāl n. <>கடைகால். Excavated space for the foundation of a building; அஸ்திவாரம். Colloq. |
| கடகால் 2 | kaṭakāl n. Bucket, cylindrical bucket; நீர்ச்சால். Rd. |
| கடகாவருத்தம் | kaṭakāvaruttam n. <>kaṭaka + āvrtta. (Nāṭya.) A gesture in dancing in which the wrists of both the hands in kaṭakam gesture are brought close together; இரண்டுகையுங் கடகமாய் மணிக்கட்டுக்கு ஏற இயைந்து நிற்கும் இணைக்கை. (சிலப். 3, 18, உரை.) |
| கடகு | kaṭaku n. <>kaṭaka. 1. Shield; கேடகம். (சீவக. 2218, உரை.) 2. Protector; |
| கடகோட்டி | kaṭakōṭṭi n. [ T. kada-goṭṭu K. kade - huṭṭu.] Dial. var. of கடைக்குட்டி. Vul. . |
| கடசடகநியாயம் | kaṭa-caṭaka-niyāyam n. <>ghaṭa + caṭaka + nyāya. Illustration of 'the sparrow within the pot', used to explain the theory that an object is animated by another, that is within it, such as that the chief of the vital airs, viz., pirāṇavāyu within the body, is the 'soul' which an animates it; ஒன்று மற்றொன்றினுள்ளிருந்து காரியப்படுத்துவதை விளக்கும் நெறி. (சி. சி. 3, 4, ஞானப்.) |
| கடத்தல் | kaṭattal n. <>கட- (Mus.) Defect in singing, flaw of changing from one note to many; ஒரோசையான தன்மை நீங்கிப் பலவோசையாக வரும் இசைக்குற்றம். (திருவாலவா. 57, 26.) |
| கடத்தி | kaṭatti n. <>கடத்து-. One who does his work perfunctorily; கழப்புகிறவ-ன்-ள். (W.) |
| கடத்து - தல் | kaṭattu- 5v. tr. caus. of கட-. [ M. kadattu.] 1. To cause to go; to drive; செலுத்துதல். 2. To transport, carry across; 3. To pass, as time; 4. To do carelessly, as work; to dawdle; |
| கடத்து | kaṭattu n. <>கடத்து-. cf. M. kadattu-kāran=boatman. Boat; தோணி. Loc. |
| கடத்தேற்றம் | kaṭa-t-tēṟṟam n. <>கடை + தேறு-. See கடைத்தேற்றம். (W.) . |
