Word |
English & Tamil Meaning |
|---|---|
| கச்சைக்கட்டை | kaccai-k-kaṭṭai n. 1. A species of Crape-myrtle. See பேய்க்கடுக்காய். . 2. Benteak. See வெண்டேக்கு. (ட.) |
| கச்சைக்கொடியோன் | kaccai-k-koṭiyōṉ n. <>kakṣyā+. Karna, whose banner bore the device of an elephant's rope; கன்னன் (நல் பாரத. பதினெட்டாம்.144.) |
| கச்சைகட்டு - தல் | kaccai-kaṭṭu- v. intr. <>கச்சை2+. 1. To tuck up one's cloth; ஆடையை இறுகக்கட்டுதல். 2. To gird up one's loins, solemnly determine to do a thing; |
| கச்சைப்பட்டை | kaccai-p-paṭṭai n. <>id. +. Broad tape band; நாடாப்பட்டை. (W.) |
| கச்சோடி | kaccōṭi n. White Betel; வெள்ளை வெற்றிலை. Loc. |
| கச்சோணி | kaccōṇi n. Compound of spices used with betel; தாம்பூலத்தொடு சேரும் வாசனைப் பண்டவகை. (மூ. அ.) |
| கச்சோதம் | kaccōtam n. <>kha-dyōta. Glow-worm; firefly; மின்மினி. சிறுகொள்ளிதன்னை..கச்சோதமென்று கருதி (கந்தபு. அவைபு.43) |
| கச்சோரம் | kaccōram n. cf. kacchōra. 1. Long Zedoary. See பூலாங்கிழங்கு. (தைலவ. தைல. 30.) . 2. Spiked garland-flower. See கிச்சிலிக்கிழங்கு. (தைலவ. தைல. 74.) |
| கச்சோலம் 1 | kaccōlam n. 1. cf. கச்சோரம். See கச்சோரம். 1. (தைலவ. தைல. 39.) . 2. cf. கச்சோரம். 2. (தைலவ. தைல. 21.) 3. Spinkenard. See மாஞ்சில். (மூ. அ.) 4. A kind of aromatic; |
| கச்சோலம் 2 | kaccōlam n, <>Mhr. kachōḷa Small metal. vessel for holding rice, sandal paste, etc.; சிறுபாத்திரம். (S.I.I. ii,408, Note.) |
| கச - த்தல் | kaca- 12 v. intr. <> கய-. 1. To taste bitter; கைத்தல். 2. To be embittered, as the mind; to be disgusted, alienated from; |
| கசக்கல் | kacakkal n. <>கசக்கு-. Rubbing, crushing, bruising between the fingers or hands; கசங்கச்செய்கை. |
| கசக்கார் | kacakkār n. prob. sahakāra. Sweet mango; தேமா. (மலை.) |
| கசக்கால் | kaca-k-kāl n. <> kaccha+. Spring channel, channel dug out in beds of deep sand in a river to tap the underflow of water; ஊற்றுக் கால். Loc. |
| கசக்கிப்பிழி - தல் | kacakki-p-piḻi- v. tr. <>கசக்கு-+. 1. To wring out, as wet clothes; to wring and squeeze out; துவைத்து நீர்பிழிதல். 2.To tease and trouble a person; to harass, oppress; |
| கசக்கு - தல் | kacakku- 5. v. tr. Caus. of கசங்கு-. [M. kasakku.] 1. To rub; to bruise between the fingers or hands; to soften, as cow's udder; to squeeze, as a lemon; to crumple as paper; to mash, as fruits; கசங்கச்செய்தல். (W.) 2. To roll gently and wash, as linen; 3. To harass, nag, bring under discipline; |
| கசக்கு | kacakku n. <> கசக்கு-. Squeezing. bruising; கசங்கச்செய்கை. அவன் எனக்கு ஒருகசக்குக் காணமாட்டான். (W.) |
| கசக்குப்புகையிலை | kacakku-p-pukai-y-ilai n. <>id. +. Tobacco prepared in a certain way for smoking; புகைகுடிக்க ஒருவிதமாகப் பதஞ்செய்யப்பட்ட புகையிலை. (J.) |
| கசகச - த்தல் | kaca-kaca- 11. v. intr. 1. To feel uneasy from clamminess due to perspiration on account of heat or sultriness; இறுக்கத்தால் உடல்வியர்த்தல். உடம்பெல்லாங் கசகசத்துப் போயிற்று. 2. To sound, rattle, as the crumpling of fine paper; to rustle; |
| கசகசவெனல் | kaca-kaca-v-eṉal n.Onom. expr. 1. signifying rustling, gurgling; ஒலிக்குறிப்பு. கசகசவென்று நீரூறுகிறது. 2. cf. Kur. kaskasrna. Perspiring and being hot; 3. cf. Kur. khusmārnā. Affluence, prosperity; |
| கசகசா | kacakacā n. <>U. khashkhash. 1. Opium poppy, narcotic herb, Papaver somniferum; அபினிச்செடி. 2. Poppy seed, white in colour; |
| கசகம் | kacakam n. cf. karkatikā. Mottled melon. See வெள்ளரி (மலை.) . |
| கசகர்ணம் | kaca-karṇam n. <>gaja+karṇa 1. Lit., elephant's ear, term used to denote the art of moving or waving one's ears in imitation of the elephant; காதாட்டும் வித்தை. 2. A task involving stupendous effort; |
| கசகர்ணம்போடு - தல் | kaca-karṇam-pōtu- v. intr. <>id.+. To put forth unusual or extraordinary effort to realize an object; பெருமுயற்சி செய்தல். அவன் அந்தவேலையைப்பெறக் கசகர்ணம் போட்டான். |
