Word |
English & Tamil Meaning |
|---|---|
| கச்சாவசூல் | kaccā-vacūl n. <>U. kaccā+. Recovery of what has been embezzled; பிறன் கையாடிய பொருளை மீளப்பெறுகை. (W.) |
| கச்சான் | kaccāṉ n. [M. kacāṉ.] 1. West wind; மேல்காற்று. (J.) 2. West; |
| கச்சான்கோடை | kaccāṉ-kōṭai n. <>கச்சான்+. South-west wind; தென்மேல்காற்று. (W.) |
| கச்சி 1 | kacci n. 1. prob. gudūcī. Gulancha. See சீந்தில். (மூ. அ.) . 2. Indian shrubby copper leaf. See சின்னி (மூ. அ.) |
| கச்சி 2 | kacci n. <>காய்ச்சி. 1. Coconut shell; கொட்டாங்கச்சி. (W.) 2. Half of a dried palmyranut; |
| கச்சி 3 | kacci n. <>Pkt. kacī <> kācī. The city of Conjeevaram; காஞ்சீபுரம். (மணி. பதி. 90.) |
| கச்சிதம் | kaccitam n. cf. khacita. [T. kaccitamu.] Accuracy, correctness, neatness; ஒழுங்கு. அவன்வேலை கச்சிதமாக இருக்கிறது. |
| கச்சிப்பேடு | kacci-p-pētu n. <>கச்சி3+. See கச்சி3. கச்சிப்பேட்டுப் பெரியதிருக்கற்றளி (S.I.I. i,113). . |
| கச்சியப்பசிவாசாரியர் | kacci-y-appa-civācāriyar n. <>id. +. The author of Kantapurāṇam; கந்தபுராண ஆசிரியர். |
| கச்சியப்பமுனிவர் | kacci-y-appa-muṉivar n. <>id. +. The author of Taṇikai-p-purāṇam and other šaivite works, 18th c. A. D; தணிகைப்புராணம் முதலியவற்றின் ஆசிரியர். |
| கச்சு 1 | kaccu n. <>kakṣyā. [M. kaccu.] 1. Belt, girdle, sash, cummerbund; அரைப்பட்டிகை. மள்ளர் ... யாத்த பூங்கச்சு (சீவக.16). 2. Broad tape band; |
| கச்சு 2 | kaccu n. cf. kacuka. [M. kaccu, Kur. gajji.] A kind of corset worn by Indian women in ancient times; முலைக்கச்சு, கச்சது கடிந்து (கல்லா.44). |
| கச்சு - தல் | kaccu- 5 v. tr. <> கடி-. cf. K. kaccu. To bite, gnaw, nibble; கடித்தல். Nurs. |
| கச்சு | kaccu n. Garden-lettuce. See சல்லாத்து. (M.M.) |
| கச்சுக்கட்டில் | kaccu-k-kaṭṭil n. <>kakṣyā+. Bedstead braided with bands of broad tape; கச்சைப்பட்டையாற் கட்டிய கட்டில். |
| கச்சுச்சாத்து - தல் | kaccu-c-cāttu- v. intr. <>id.+. To tie with bands of tape an idol to its vākaṉam or a vākaṉam to its poles, for a procession; விக்கிரகத்தை வாகனத்துடனாவது வாகனத்தைத் தண்டுடனாவது கச்சால் இறுகக் கட்டுதல். (W.) |
| கச்சுப்பட்டை | kaccu-p-paṭṭai n. <>id.+. See கச்சைப்பட்டை. . |
| கச்சுப்பிச்செனல் | kaccu-p-picceṉal n. Onom Muttering, speaking indistinctly; தெளிவில்லாமற் பேசற் குறிப்பு. (W.) |
| கச்சுரி | kaccuri n. Fire; நெருப்பு. (அக.நி.) |
| கச்சுரை | kaccurai n. <>Pkt. khajjura <> kharjūra. Date fruit; கச்சூர்க்காய். (இராசவைத். 35.) |
| கச்சூர்க்கட்டை | kaccūr-k-kaṭṭai n. 1. Perch; தண்டியம். (C.G.) 2. Wooden prop fixed into a wall to support a shelf; |
| கச்சூரம் 1 | kaccūram n. <>kacchurā. 1. Molucca-bean. See கழற்சி . 2. Bonduc-nut, l.cl., Caesalpinia bonduc; |
| கச்சூரம் 2 | kaccūram n. <>kharjūra. Date-palm. See பேரீந்து. (மூ.அ.) . |
| கச்சூரிக்கட்டை | kaccūri-k-kaṭṭai n. See கச்சூர்க்கட்டை . |
| கச்சேரி | kaccēri n. <>U. kachahri. 1. Cutcherry, office for the transaction of any public business, an office of administration, revenue office, court-house; உத்தியோகசாலை. 2. Business proceeding in a public office; 3. Assembly, as for musical entertainments or other parties for play or pastime; |
| கச்சேரிகரைவாசல் | kaccēri-karai-vācal n. <>id. +. Public office; உத்தியோகமுதலிய வேலை பார்க்குமிடம். Rd. |
| கச்சேரிவேஷ்டி | kaccēri-vēṣṭi n. <>id. +. White cloth, eight to ten yards long, washed and kept in reserve to be used as a turban, in order to qualify an illiterate villager to appear in court as a man of standing; கச்சேரிசெல்வதற்கென்று வைத்திருக்கும் நீண்ட தலையுருமால். Loc. |
| கச்சை 1 | kaccai n. cf. kacuka. 1. Coat of mail; கவசம். (பிங்.) 2. cf. kacchu. Scar, cicatrice, mark made by a blow or wound; |
| கச்சை 2 | kaccai n. <>Pkt. kaccha <> kakṣyā 1. Rope; கயிறு. (பிங்.) 2. Eelephant's girth; 3. Broad tape; 4. Canvas chair for hill travel; 5. Girdle, belt; 6. cf. kaccha. See கச்சம்2. 7. Whole piece of new cloth; |
