Word |
English & Tamil Meaning |
|---|---|
| க் | k . The first consonant being the guttural voiceless stop; நெடுங்கணக்கில் முதன்மெய்யெழுத்து. |
| க 1 | ka . The compound of க் + அ, secondary consonantal symbol ka. . |
| க 2 | ka . 1. Sign in Tamil Arithmetic of the number one; ஒன்றென்னுமெண்ணின் குறி. 2. Symbol representing the third note of the gamut; |
| க 3 | ka part. Verb ending of the optative, as in வாழ்க; ஒரு வியங்கோள்விகுதி. (நன்.338.) |
| க 4 | ka. n. <> ka. 1. Brahmā; பிரமன். கவ்வென்ப தயன்பேர் (காஞ்சிப்பு. தலவி. 26). 2. Agni; |
| கஃசு | kaḵcu n. cf. karṣa. A measure of weight = 1/4 பலம். தொடிப்புழுதி கஃசா வுணக்கின் (குறள், 1037) |
| கஃறெனல் | kaḵṟeṉal n. An expression signifying blackness கறுத்துள்ளமை காட்டுங் குறிப்பு. கஃஃறென்னுங் கல்லத ரத்தம் (தொல். எழுத். 40, உரை). |
| கக்கக்கெனல் | kak-kak-k-eṉal n. 1. Onom. expr. of clucking, as fowls; ஒலிக்குறிப்பு. (W.) 2. Onom. expr. meaning laughter; |
| கக்கக்கொடு - த்தல் | kakka-k-kotu- v. tr. <>கக்கு+ . To pamper, feed to surfeit, used in reproach; உணவை மிதமிஞ்சி யூட்டுதல். (W.) |
| கக்கசம் | kakkacam n. <>karkaša. Difficulty; hardness; பிரயாசம். (W.) |
| கக்கட்டமிடு - தல் | kakkaṭṭam-iṭu- v. intr. cf. kakkhaṭa. Onom. expr. meaning to laugh loudly, as horse-laugh; சிரிப்பில் உரத்த சத்தஞ் செய்தல், கந்தன் கக்கட்டமிட்டுச் சிரித்தான். (J) |
| கக்கதண்டம | kakka-taṇṭam n. <>kakṣa+. Crutch; அக்குளில் இடுக்கி நடக்குங் கழி. |
| கக்கப்பாளம் | kakkappāḷam n. <>id.+ prob. kapāla. Vessel or bag carried under the arm by ascetics; துறவிகள் கக்கத்திடுக்குங் கலம் அல்லது மூட்டை. (W.) |
| கக்கப்பொட்டணம் | kakka-p-poṭṭaṇam n. <>id.+. Bundle of cloth carried under the arm; கக்கத்தில் இடுக்கிய துணிமூட்டை. (W.) |
| கக்கம் | kakkam n.<>kakṣa. Armpit, axilla; அக்குள், கட்டிச் சுருட்டித்தங் கக்கத்தில் வைப்பர் (பட்டினத் திருப்பா. பொது, 30) |
| கக்கரி | kakkari n. <>karkaṭī. Kakri-melon, Cucumis melo-utilissimus; முள்வெள்ளரி. (சூடா.) |
| கக்கரிகம் | kakkarikam n. <>karkaṭikā. See கக்கரி. (மலை.) . |
| கக்கல் | kakkal n. <>கக்கு-. [T. K. kakku.]. 1. Vomiting, generally by children; சத்திசெய்கை. (பிங்.) 2. [M. kakku.] Vomit, anything cast out, as from the mouth; |
| கக்கல்கரைசல் | kakkal-karaical n. <>கக்கல்+. 1. Muddy water, as that which flows at the beginning of a flood in a river; கலங்கனீர். ஆற்றுவெள்ளம் கக்கலுங்கரைசலுமாய் ஓடுகிறது. 2. Liquidised excrement; |
| கக்கலாத்து | kakkalāttu n. cf. Port. cacalacca. Cockroach, Blatta orientalis; கரப்பான் பூச்சி. |
| கக்கலும்விக்கலுமாய் | kakkal-um-vikkalum-āy adv. <>கக்கு-+. Just half shooting forth, as grain in the ear of corn; கதிர் ஈன்றதும் ஈனாததுமாய். நெல்லெல்லாம் கக்கலும் விக்கலுமாயிருக்கிறது. (W.) |
| கக்கவை - த்தல் | kakka-vai- v. tr. <>id.+. To press hard for the discharge of a debt; to dun a debtor and force him to pay; நெருக்கி வாங்குதல். அவன் தனக்குச்சேரவேண்டிய பாக்கியைக் கக்கவைத்தான். |
| கக்கிக்கொடு - த்தல் | kakki-k-koṭu- v. tr. <>id. +. To feed from its own mouth, as a bird its young; தன் வாயிற்கொண்டதை மற்றொன்றற்கு ஊட்டிவளர்த்தல், காகம் தன் குஞ்சுக்குக் கக்கிக் கொடுக்கிறது. |
| கக்கிசம் | kakkicam n. See கக்கசம். Vul. . |
| கக்கிருமல் | kakkirumal n. <>கக்கு-+. Whooping cough; கக்குவான். |
| கக்கு 1 - தல் | kakku- 5 v. [T. K. M. Tu. kakku.] tr. 1. To vomit, spew from the stomach வாந்தி செய்தல். (பிங்.) 2. To eject, as a snake its poison 1. To skip with a rebound, fly back, recoil, as a nail 2. To overflow, as a river; 3. To shoot out as ears of corn; 4. To yield the essence, as drugs put in boiling water; 5. To ooze out, as oil through the pores of the skin; |
| கக்கு 2 | kakku n.<>கக்கு-. Whooping cough; கக்குவான். கக்கு களைவரு நீரடைப்பு (திருப்பு. 627). |
| கக்கு 3 | kakku n. <>கற்கண்டு. Sugar-candy; Nurs. |
