Word |
English & Tamil Meaning |
|---|---|
| ஓலைவேலி | ōlai-vēli n. <>id.+. Hedge plaited with palm leaves; பனையோலையாற் பின்னப்பட்ட வேலி. (W.) |
| ஓவம் | ōvam n. <>ஓவியம். Picture, portrait; சித்திரம். ஓவத் தன்ன வுருகெழு நெடுநகர் (பதிற்றுப். 88, 28). |
| ஓவர் | ōvar n. <>id. 1. Painter, sculptors; சித்திரகாரர். 2. Bards, eulogists employed by princes to proclaim their titles and sing their praises; 3. Smiths; |
| ஓவா[வரு] - தல் | ōvā- v. intr. <>ஓவு3+வா-. To cease; ஒழிதல். (திருக்கோ. 212, உரை.) |
| ஓவாமுயற்சி | ōvā-muyaṟci n. <>ஓவு-+ஆ neg.+. Perseverance, a characteristic of the Vēḷāḷas; இடைவிடாமல் முயலுகையாகிய வேளாண் மாந்தரியல்பு. (திவா.) |
| ஓவாய் | ō-vāy n. <>ஓறுவாய். 1. Mouth lacking teeth; பற்கள்போன வாய். 2. Vessel with broken brim; |
| ஓவாய்ப்பல் | ō-vāy-p-pal n. <>ஓவாய் + . See ஒறுவாய்ப்பல். . |
| ஓவாய்ப்பானை | ō-vāy-p-pāṉai n. <>id.+ See ஒருவாய்ப்பானை. . |
| ஓவி | ōvi n. <>ஓவியம். Picture; சித்திரம். ஓவி நல்லார் (திவ். பெரியதி. 2, 8, 7). |
| ஓவியகாயம் | ōviya-kāyam n.<>id.+kāya. Tiger, lit., picturesque body; புலி. ஆவி செகுத்தன ரோவியகாயத்னை யம்மா (வரத. பாகவத. காளிந்தி. 28). |
| ஓவியநூல் | ōviya-nūl n. <>id.+. Treatise on painting; சித்திரநூல். (மணி. 2, 31.) |
| ஓவியப்பேச்சு | ōviya-p-pēccu n. <>id.+. Sweet speech; இனியபேச்சு. |
| ஓவியம் | ōviyam n. cf. ஓவு1. 1. Picture, portrait; சித்திரம். கண்கவ ரோவியங் கண்டு. (மணி. 3, 131). 2. Art of painting; 3. Beauty, fineness, elegance; 4. Statue, puppet; |
| ஓவியன் | ōviyaṉ n. <>ஓவியம். 1. Painter; சித்திரமெழுதுவோன். ஓவிய னுள்ளத் துள்ளியது வியப்போன் (மணி. 5, 7). 2. Sculptor who fashions images or idols; |
| ஓவு 1 | ōvu n. perh. ஓ Painting, picture; சித்திரம். ஓவுறழ் நெடுஞ்சுவர் (பதிற்றுப். 68, 17). |
| ஓவு 2 - தல் | ōvu - v. <>ஒருவு-. intr. 1. To remove, separate; நீங்குதல். மலங்க ளெல்லா மோவினபோது (சி. சி. 4, 37). 2. To cease, terminate, become extinct; - tr. To shun, avoid, give up; |
| ஓவு 3 | ōvu n. <>ஓவு-. Separation, removal, cessation; ஒழிகை. ஓவில்செல்வமும் (கந்தபு. சுக்கிரனுப. 46). |
| ஓவென்றவெளி | ō-v-eṉṟa-veḷi n. <>ஓவெனல்+. Broad open space; பெரிய மைதானம். (J.) |
| ஓவெனல் | ō-v-eṉal n. <>ஓ (onom.)+. Sounding ō; ஓரொலிக்குறிப்பு. ஓவென வையகத் தோசைபோ யுயர்ந்ததே (சீவக. 1843). |
| ஓளி | ōḷi n. [K. ōḷi.] 1. A continuous line, row; ஒழுங்கு. மாளிகையோளி (கம்பரா. மிதி. 22). 2. Elephant stall; |
| ஓற்பலம் | ōṟpalam n. <>drumōtpala. False Tragacanth. See கோங்கு. (மலை.) . |
| ஓனம் | ōṉam part. Euphonic particle added by children after sounding the long letters; எழுத்தின்சாரியை. (தொல். எழுத், 134, உரை.) |
| ஓஷ்டம் | ōṣṭam n. <>ōṣṭha. Lip; உதடு. |
| ஓஷதி | ōṣati n. <>ōṣadhi. See ஓடதி. (மூ. அ.) . |
| ஔ 1 | au . The 12th vowel, diphthong of a and u; பன்னிரண்டாம் உயிரெழுத்து. |
| ஔ 2 | au n. The symbol representing the seventh note of the gamut, usu. ni; தாரவிசையினெழுத்து. (திவா.) |
| ஔகம் | aukam n. Repetition by a chorus of the leader's song in a dancing performance; இடைப்பாட்டு. (சிலப். 14, 156, உரை.) |
| ஔகாரக்குறுக்கம் | aukāra-k-kuṟukkam n. <>ஓளகாரம்1+. (Gram.) Shortened 'au', as in மௌவல், one of ten cārpeḻuttu, q.v.; தன் மாத்திரையிற்குறுகிய ஔகாரம். (நன். 95.) |
| ஔசனம் | aucaṉam n. <>aušanasa. A secondary purā, one of 18 upa-purāṇam, q.v.; உபபுராணம் பதினெட்டனுள் ஒன்று. (கூர்மபு. இந்திரத். 10.) |
| ஔசித்தியம் | aucittiyam n. <>aucitya. Fitness, suitableness; தகுதி. |
| ஔட்டு 1 | auṭṭu n. <>ஊ. ஔட். Firework; bomb which, when fired into the air, bursts into glowing sparks; ஒருவகை ஆகாசவெடி. |
| ஔட்டு 2 | auṭṭu n. <>E. A game at cards played by two persons, finished with saying 'out' when either has scored 108; சீட்டுவிளையாட்டுவகை. |
