Word |
English & Tamil Meaning |
|---|---|
| ஓலைக்குடை | ōlai-k-kuṭai n. <>id.+. Palm-leaf hood used as an umbrella; மழையைத் தாங்கும்படி ஓலையால் முடையப்பட்ட கூடு. |
| ஓலைக்கொடி | ōlai-k-koṭi n. <>id.+. Kite made of palmyra leaf; பறக்கவிடும் ஓலைப்பட்டம். (J.) |
| ஓலைகூறு - தல் | ōlai-kūṟu- v. intr. <>id.+. To publish the banns; விவாகவறிக்கை கெடுதல். Chr. |
| ஓலைச்சாதனம் | ōlai-c-cātaṉam n.<>id.+. Palm-leaf document; ஓலைப்பத்திரம். (S.I.I. i, 120.) |
| ஓலைச்சிறகு | ōlai-c-ciṟaku n. <>id.+. The half of a palmyra leaf; பனையோலையின் பாதி. (W.) |
| ஓலைச்சுருள் | ōlai-c-curuḷ n. <>id.+. Letter written on a palmyra leaf, rolleed up and enclosed in a centirikkam; ஓலைக்கடிதம். (W.) |
| ஓலைத்தூக்கு | ōlai-t-tūkku n.<>id.+. Note written on a palmyra leaf by a poet and addressed to a chief or a person of wealth, setting out his (poet's) many attainments and praying for gifts; சீட்டுக்கவி. மன்னுடை மன்றத் தோலைத் தூக்கினும். (நன். 53). |
| ஓலைதீட்டு - தல் | ōlai-tīṭṭu- v.intr. <>id.+. To write on palm leaf; ஓலையிலெழுதுதல். (W.) |
| ஓலைத்தீட்டும்படை | ōlai-ttīṭṭum-paṭai n. <>id.+. Style; எழுத்தாணி. (திவா.) |
| ஓலைநாயகம் | ōlai-nāyakam n. <>id. + . See ஓலைநாயகன். . |
| ஓலைநாயகன் | ōlai-nāyakaṉ n. <>id. + . Chief Secretary in the time of the Chōlas; சோழருடைய தலைமைக்காரியநிருவாகி. (Insc.) |
| ஓலைப்படாப்பிரமாணம் | ōlai-p-paṭā-p-piramāṇam n. <>id. + படு-+ஆ neg. + The Vēdas, which have never been committed to writing; எழுதாக்கிளவியான வேதம். (M. M.) |
| ஓலைப்பாசுரம் | ōlai-p-pācuram n.<>id.+. Communication written on a palmyra leaf; கடிதச்செய்தி. 'வருக' என்னுமளவும் ஓலைப்பாசுரம் (சீவக. 2147, உரை.) |
| ஓலைப்பாம்பு | ōlai-p-pāmpu n. <>id. + . Kind of snake, Tropidonotus stolatus; ஒரு வகைப்பாம்பு. |
| ஓலைப்பாயிரம் | ōlai-p-pāyiram n.<>id.+ பாசுரம். See ஓலைப்பாசுரம். ஓலைப்பாயிரமு முதலாயின வெல்லாங் கொச்சகமாதற்கு இழுக்கென்னையெனின் (தொல். பொ. 461, உரை). |
| ஓலைப்புறம் | ōlai-p-puṟam n.<>id.+. Command, order; கட்டளை. ஓலைப்புறத்துச் செல்லாத நாடு (குருபரம்.10, பன்னீ.). |
| ஓலைப்பூ | ōlai-p-pū n. <>id.+. Screwpine flower; தாழம்பூ. ஓலைப்பூவொ டுவகைமுத்துச்சோர (திருப்பு. 445). |
| ஓலைபோக்கு - தல் | ōlai-pōkku- v. intr. <>id.+. To send a message written on a palmyra leaf; ஓலையிற் செய்தியெழுதி யனுப்புதல். (கம்பரா. கார்முக. 66.) |
| ஓலைமுகப்பாசுரம் | ōlai-muka-p-pācuram n. <>id.+. Prefatory address in a letter on a palmyra-leaf; கடிதத்தொடக்கத்தெழுதும் வக்கனை. (சிலப். 13, 87, உரை.) |
| ஓலைமுத்திரை | ōlai-muttirai n. <>id.+. Stamp imprinted on a palmyra-leaf document; ஓலைமுகப்பிலிடும் முத்திரை. (W.) |
| ஓலைமுறி | ōlai-muṟi n. <>id.+. Memorandum on a piece of a palmyra leaf; chit; ஓலைச்சீட்டு. |
| ஓலைமூங்கில் | ōlai-mūṅkil n. <>id.+. A kind of bamboo; மூங்கில்வகை. (யாழ். அக.) |
| ஓலையாள் | ōlai-y-āḷ n.<>id.+. Messenger who carries letters written on a palmyra leaf; செய்திகொண்டுபோவோன். (W.) |
| ஓலையெழுத்து | ōlai-y-eḻuttu n. <>id.+. Office of clerk; இராயசம். (I.M.P.N.A. 676.) |
| ஓலையெழுது - தல் | ōlai-y-eḻutu- v. intr. <>id.+. 1. To inscribe on a palmyra leaf; ஏடெழுதுதல். 2. To send a letter; |
| ஓலைவாங்கு - தல் | ōlai-vāṅku- v. intr. <>id.+. To die; lit., to receive the summons of death; இறத்தல். (W.) |
| ஓலைவாசி - த்தல் | ōlai-vāci- v. intr. <>id.+. To publish the banns; விவாக அறிக்கையிடுதல். Chr. |
| ஓலைவார் - தல் | ōlai-vār- v. intr. <>id.+. To trim a palmyra leaf for writing up on; எழுதுவதற்கு உதவுமாறு ஓலைசீவுதல். |
| ஓலைவாரி | ōlai-vāri n. <>id. + . Knife used for trimming palmyra leaves; ஓலைசீவுங் கத்தி. |
| ஓலைவாளை | ōlai-vāḷai n. <>id.+. 1. Cut-las-fish, silvery, Trichiurus savala; வாளைமீன் வகை. ஓலைவாளைக்கருவ டுண்டக்கால் (பதார்த்த. 926). 2. Cutlas-fish, greyish, Trichiurus hanmela; |
| ஓலைவீடு | ōlai-vīṭu n. <>id. + . House thatched over with palmyra leaves; பனையோலையால் வேய்ந்த வீடு. |
| ஓலைவெட்டுப்பனை | ōlai-veṭṭu-p-paṉai n. <>id.+. Palmyra which has served no other purpose but that of providing leaves, one of the five itar-ayiṭṭam-paṉai; ஓலையைத்தவிர வேறு ஒரு பயனையுந்தாராத பனைவகை. (G. Tn. D. i, 307.) |
