Word |
English & Tamil Meaning |
|---|---|
| ஓரப்பாவை | ōra-p-pāvai n. <>ஓரை1+ Doll used by women in their plays; மகளிர் விளையாட்டுப்பாவை. (கலித். 82, உரை.) |
| ஓரையயர் - தல் | ōrai-y-ayar- v. intr. <>id.+. To play with dolls; ஓரைப்பாவையைவைத்து மகளிர் விளையாடுதல். மடக்குறு மாக்களோ டோரையயரும் (கலித். 82, 9). |
| ஓரொற்றுவாரம் | ōr-oṟṟu-vāram n. <>ஒன்று+. Musical composition sung to a single beat, a variety of vāram; ஒருமாத்திரைபெற்று வருஞ்செய்யுள். (சிலப். 3, 136, உரை.) |
| ஓரொன்று | ōr-oṉṟu n.<>id.+. Each one; one of each; one at a time; one for each; ஒவ்வொன்று. (சிறுபஞ். 27.) |
| ஓல் 1 | ōl n. ōnom. 1. Sound; ஒலி. ஓலுறு பெருக்கின் (இரகு. நகர. 42). 2. Lullaby; |
| ஓல் 2 | ōl part. Vocative ending; ஒரு விளியுருபு. சாத்தாவோல் (வீரசோ. வேற்றுமைப். 8, உரை). |
| ஓலக்கங்கொடு - த்தல் | ōlakkaṅ-koṭu- v. intr. <>ஓலக்கம்+. To grant an audience, as a king; அத்தாணியிலிருந்து காட்சிகொடுத்தல். |
| ஓலக்கம் | ōlakkam n. [T. ōlagamu, K. Tu. ōlaga, M. ōlakkam.] 1. Assembly of state, audience, royal presence, durbar; அத்தாணிக்காட்சி. நாலோலக்க மருள (திவ். திருப்பள்ளி. 9). 2. Hall; |
| ஓலக்கமண்டபம் | ōlakka-maṇṭapam n. <>ஓலக்கம்+. Place of assembly, durbar hall, hall; அத்தாணி மண்டபம். எம்பெருமானோலக்கமண் டபத்துள் (தாயு. எந்நாட். அருளியல்பு. 10). |
| ஓலக்கவார்த்தை | ōlakka-vārttai n. <>id.+. Pompous speech in an assembly; கூட்டத்திற் சொல்லப்படும் இடம்பச்சொல். (ஈடு.) |
| ஓலம் 1 | ōlam n. <>ஓல்1. [T. ōla, M. ōlam.] 1. Sound, noise, roar; சத்தம். (பிங்.) 2. Cry of lamentation, appeal; exclamation entreating succour in distress; 3. Sea; கடல். |
| ஓலம் 2 | ōlam n. cf. vyāla. Snake; பாம்பு. (பிங்.) |
| ஓலம்போழ் | ōlam-pōḻ n. <>ஓலை+. Split leaf of the palmyra prepared for writing; வார்ந்த ஓலை. ஓலம்போழிற்பொறித்து (விநாயகபு. 3, 3). |
| ஓலமிடு - தல் | ōlam-iṭu- v. intr. <>ஓலம்1+. 1. To call for succour, cry for protection, appeal; அபயமிடுதல். சிவனேசிவனேயன் றோலமிடினும் (திருவாச. 7, 5). 2. To make a noise; |
| ஓலன் | ōlaṉ n. <>M. ōlam. A Kind of vegetable dish; குழம்புக்கூட்டுவகை. |
| ஓலாட்டு 1 | ōl-āṭṭu v. intr. <>ஓல்1+. To lull a child, sing a lullaby; தாலாட்டுதல். (J.) |
| ஓலாட்டு 2 | ōl-āṭṭu n. <>ஓலாட்டு-. Lulling a child to sleep, lullaby; தாலாட்டு. (J.) |
| ஓலிடு - தல் | ōl-iṭu- v. intr. <>ஓல்1+. To make a noise; சத்தமிடுதல். பணைவிதமோலிட(பாரத. மணிமான். 20). |
| ஓலூறு 1 - த்தல் | ōl-ūṟu- v. intr. <>id.+. 1. To emit a pleasant sound; இன்னோசையுண்டாக்குதல். மணியருவிமருங்கோலுறுத்த (இறை. 2, 42, உரை). 2. To lull a child to sleep; |
| ஓலுறு 2 - தல் | ōl-uṟu - v. intr. <>id.+. To be filled with sound; to resound; ஒலிபொருந்துதல் ஓலுறுபெருக்கின் (இரகு. நகர. 42). |
| ஓலை | ōlai n. <>id. [K. Tu. ōle, M. ōla.] 1. Palm-leaf; பனை தென்னை முதலியவற்றினோலை. (தொல். பொ. 641.) 2. Letter or any writing on a palmyra leaf; palmyra leaf on which something is written; 3. Rolled palm leaf used as an ear ornament; 4. Ornament worn in the lobe of the ear, as of gold often set with precious stones; 5. Umbrella made of palm-leaf; 6. Charcoal-tree. See பேய்முன்னை. |
| ஓலைக்கண் | ōlai-k-kaṇ n. <>ஓலை+. Scallop or indentation of the palmyra-leaf; ஓலைச்சட்டத்தில் விழுந் துளை. (W.) |
| ஓலைக்கணக்கர் | ōlai-k-kaṇakkar n. <>id.+. Learners at school; பள்ளியிற்படிப்போர். ஓலைக்கணக்க ரொலியடங்கு புன்செக்கர் (நாலடி. 397). |
| ஓலைக்கதவு | ōlai-k-katavu n.<>id.+. Palm-leaf screen, used as a door; ஓலையாலாகிய படல். |
| ஓலைக்காந்தல் | ōlai-k-kāntal n. <>id.+. Cinder of palm-leaf, as burning, floating flakes; dry pieces of palm-leaf; ஓலையின் நெருப்புக் கனிவு. (W.) |
| ஓலைக்கிணாட்டு | ōlai-k-kiṇāṭṭu n. <>id.+. Chip or small piece of the palmyra leaf; ஓலைச் சிறுதுண்டு. (J.) |
| ஓலைக்கிளிஞ்சில் | ōlai-k-kiḷicil n. <>id.+. Flat chank, like a palm-leaf; கிளிஞ்சில் வகை. (W.) |
